Periyava Golden Quotes-144

Periyava_on_silver_throne_padha_darshanam
நாம் அர்க்கியம் விடும்போது சித்த ஐகாக்கிரியத்தோடு [மன ஒருமைப்பாட்டோடு] விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்த ஐகாக்கிரியம் உண்டாகும். அதை நிறையப் பண்ணுவது யோகத்திற்கு அவசியம். அப்படி நிறையப் பண்ணுவது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்ய வேண்டியது. நாம் ஸந்தியாவந்தனத்தில் அதிக பட்சமாக ஒரு இடத்தில் பத்துத் தடவை பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்றும் சில இடத்தில் இருக்கிறது. சிறு வயதில் உபநயனமான காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் வேளைக்குப் பத்துப் பிராணாயாமம் பண்ணிக் கொண்டு வந்திருந்தாலே, இத்தனை நாளில் யோகீச்வரராக ஆகியிருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ண வேண்டுமல்லவா? அரை நிமிஷம் ச்வாஸத்தை நிற்கப் பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம். பிராணன் நின்றால் மனது நிற்கும். அந்த நிலையில் அர்க்யம் கொடுத்தால் வாஸ்தவமாகக் கெட்ட அஸுர சக்திகள் ஓடிப்போகும். மனஸ் நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரமாகும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If we practice pranayama we will train ourselves to have mental concentration. This is important to yoga. Practicing pranayama for long is difficult and it must be done under the guidance of a guru. In sandhyavandana we do it only ten times. For some rites it is performed three times as a preliminary step. If we had practiced pranayama regularly from the time of our upanayana we should have become yogisvaras by now. What we do we must do properly; When we practice pranayama as a part of sandhyavandana we must stop our breath for 30 seconds or so, not more. When the vital breath stops, the mind will become still. If the arghiya is offered in this state the evil forces will be truly be driven away. The water that we pour when our mind is still will turn into a weapon to destroy all evil. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Maha Periyava ThiruvadigaLe CharaNam! His Upadesams are easy to follow, yet we are not doing it. What Maya or laziness is preventing us? Let us do Sandhya Upaasana regularly and if we do Pranayama as Angam of sandhya Vandhanam, so much good will come. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading