Periyava Golden Quotes-143

Periyava_Inga_Vaa_Sudhan

எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்பட வேண்டும். ஜலத்தைக் கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கும் மனது ஒருமைப்பட வேண்டும். அதற்காகத் தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். ‘மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும்?’ என்று கேட்கலாம். மனது நிற்கிற பொழுது மூச்சு நிற்பதைப் பார்க்கிறோமே! பெரிய ஆச்சரியம் உண்டாகிறது, பெரிய துன்பம் வருகிறது, பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மனசுலயித்துப் போய் ஏகாந்தமாக நிற்கிறது; ‘ஹா!’ என்று கொஞ்ச நேரம் மூச்சும் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஓடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை; தானாக நிற்கிறது. மனசு ஒன்றிலே நன்றாக ஈடுபட்டவுடன் மூச்சு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். இப்படி மனது ஒருமைப்படுகிற போது மூச்சு நிற்கிறதென்றால் மூச்சை நாமாக நிறுத்தினாலும் மனது ஒருமைப்படும் என்று ஆகிறதல்லவா? இதற்காகத்தான் பிராணாயாமத்தால் மூச்சை இறுக்கி, அப்புறம் அர்க்யம் தருவது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

All work must be done with one-pointedness. There must be such one-pointedness of the mind to turn water into a weapon (asthira). The breath is controlled for this purpose. You will ask: “How is it that if you control your breath the mind will be still?” We see that when the mind is still the breath also stops. When our wonder is aroused, when we are grief-stricken or when we are overjoyed, the mind becomes one-pointed. We exclaim “Haa” and the breath stops for a moment. But soon we breathe fast. We do not stop breathing with any effort on our part-the stopping is involuntary. The mind stops when it is enwrapped or absorbed in something. Then we heave a sigh, take a long breath, making up for the momentary stoppage of breathing. We learn from this that, when breathing momentarily stops, the mind becomes one-pointed. This is the reason why the breath is controlled when arghiya, libation, is offered. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Dear Sri.Sai Srinivasan,

    You have made us to realise that Mahaperiyava still present among us through Mahaperiyava’s ever living golden words. Let Mahaperiyava bless and your family abundantly.

    Gayathri Rajagopal

  2. Maha Periava Ananda Kodi Namaskaram for such a wonderful explanation on Arkyam

Leave a Reply

%d bloggers like this: