Jaya Jaya Shankara Hara Hara Shankara – Great incident that shows Sri Periyava giving simple solutions to complex issues. Thanks to our Sathsangam Seva translation team member Shri. Krishna Kanna for the translation. Ram Ram.
“வடையில் பூரான்”
(“பாவம் தான். திட்டமிட்டுச் செய்யவில்லை. தற்செயலாக நடந்திருக்கு. பச்சாதாபப்படறதே கூட ஒரு சுத்தி கர்மா தான்.”)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நாகராஜன் வீட்டில், அவருடைய தாயாருக்கு மாஸிக சிராத்தம்.
வைதிகர்கள் சாப்பிடும் போதுதான் அந்த உண்மை தெரிய வந்தது. வடையில் பூரான்!
கல்லுரலில் வடை மாவு அரைத்தபோது சரியாகக் கழுவவில்லை போலிருக்கிறது. பூரான் இருந்திருக்கு. பிராணனை விட்டு உடல் சிதைந்து மாவுடன் இரண்டறக் கலந்து, வடை வடையாய் எண்ணெயில் வெந்து நியமன வைதிகர்கள் வயிற்றில் போய்…….வாந்தி எடுத்தார்கள். நல்ல வேளையாக துக்ககரமான விஷயம் நடக்கவில்லை.
நாகராஜனுக்கு ஒரே கலவரம். மாஸிகம் நடந்து முடிந்து விட்டது தான். ஆனால் அசம்பாவிதம் நடந்து விட்டதே? தாயார் திருப்தி அடைந்திருப்பாளா?
இந்த மகத்தான தவற்றுக்கு என்ன பரிகாரம்?
மனசு ரொம்பவும் கஷ்டப்படுகிறதே? ஏதாவது தோஷம் வந்திருக்குமோ?…
பெரியவாளிடம் வந்தார். தன் குற்றத்தை விளக்கி பாவம் நீங்க ஏதாவது கர்மா விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“பாவம் தான்.திட்டமிட்டுச் செய்யவில்லை. தற்செயலாக நடந்திருக்கு. பச்சாதாபப்படறதே கூட ஒரு சுத்தி கர்மா தான்.
“மறுபடி சங்கல்பம் பண்ணி, மாஸிகம் செய்துடு. வருஷாப்தீகம் ஆனவுடன், கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணிவிடு….”
நாகராஜனுக்கு மனச் சமாதானம் ஏற்பட்டது.
இப்படியெல்லாம் யுக்திபூர்வமாகவும், தெளிவாகவும் பரிகாரம் சொல்லப் பெரியவாளால் மட்டுமே முடியும்!
Centipede in Vada
(“Paabam (Offence) indeed. Did not do it, intentionally. Happened on its own. Repenting itself is a purification act”)
Source – by Sri Matam Balu.
Composed by: Sri Kothandarama Sharma
Documented by – Sri Varakooran Narayanan.
At Nagarajan’s home, its monthly oblation ritual (Maasikam) for his mother.
Only during Vaideekas’ (priests) dining, that truth came out. Centipede in Vada.
While preparing the wet paste of Vada flour of uncooked grains, seemingly it was improperly cleaned. Centipede was inside. After it stopped breathing, got crushed and mixed with wet Vada flour and became roasted with Vada in the melting oil and entered the stomach of pious Vaideekas. They vomited. Good heavens, nothing sorrowful happened, though.
Nagarajan was in mental agony. Somehow though, the monthly oblation ritual (Maasikam) already got over. Alas, the unholy incident already happened. Would the mother be satisfied? What is the remedy for this grave sin?
Mind is undergoing tremendous agony. Any curse would have accrued? Came to Sri Maha Periyava. Explaining his misdeed and requested for a suitable advice on doing any penance to counter the sin committed.
“Paapam (Offence) indeed. Did not do it, intentionally. Happened on its own. Repenting itself is a purification act”
“Again take the solemn vow (sankalpa) and perform masikam. (Monthly oblation ritual). After the Yearly Ceremony gets over, goto Gaya and performs Sraddham (Paternal rituals).”
Nagarajan got mental solace.
To guide with such a clarity and rightful ways towards remedy, is possible only by Sri Mahaperiyava.
Categories: Devotee Experiences
Leave a Reply