Periyava Golden Quotes-139

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போக வேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராதஃ காலம் ஆனபின், அதாவது ஸூர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸங்கவ காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும். அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது. அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் “கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு” என்று சொல்லுவதைப் போல், “எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு” என்று சொல்ல வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Even in these days it is not difficult to perform sandhyavandana both at dawn and dusk. Office goers and other workers may not be at home during midday. They may perform the madhyahnika (the midday vandana) 2 hours 24 minutes after sunrise that is called “sangava kala”. We must never miss the daily sandhyavadana unless we find it absolutely impossible to perform. When we fall ill, in our helplessness we ask others for water or kanjin the same way, we must ask our relative or friend to perform sandhyavandana on our behalf. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: