Jaya Jaya Shankara Hara Hara Shankara – Couple of small but thought provoking incidents experienced by devotees. Ram Ram.
Thanks very much to Smt. Uma Ramani, our translation kainkarya seva member for the translation.
சொன்னவர்: ஒரு அணுக்கத் தொண்டர்
தொகுப்பாளர்: ஸ்ரீ டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு: ஸ்ரீ வரகூரான் நாராயணன்.
“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச்சுவையும் இருக்கும்)
இரண்டு சம்பவங்கள்.
முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள். முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது. பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.
“ஒரே பிள்ளை…..போ..யி..டுத்து…”. இருவரும் கூட்டாக அழுதார்கள். அழுகை ஓர் ஆறுதல். சிறிது நேரத்திற்குப் பின் அழுகை நின்றது.
“இந்தப் பிரபஞ்சத்திலே எதுவும் நம்முடையது இல்லே. பணம் – சொத்து, பிள்ளை – குட்டி, அண்ணன் – தம்பி எதுவுமே சொந்தம் இல்லே. கவலைப்படாதே. உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.
மண்ணாங்கட்டி என்று பெயர் வை….”
அருகிலிருந்தவர்களுக்கு இதைக் கேட்டதும், வாய் விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது. (ஆனால் சிரிக்கவில்லை)
கொசுறு செய்தி.
ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தம்பதிகள் மண்ணாங்கட்டியுடன் தரிசனத்துக்கு வந்தார்கள்.
————————————————————————————————————–
மரத்தாலான சிறு குடம், டம்ளர், உத்தரிணி, தட்டு, கிண்ணங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்தார் ஒரு பக்தர். பெரியவாள் ஒவ்வொன்றாகக் கையிலெடுத்து ஆசையுடன் தடவிக் கொடுத்தார்கள்.
பின்னர், குறும்புச் சிரிப்புடன் சொன்னார்கள்.
“இங்கே (ஸ்ரீமடத்தில்) தான் மரப் பாத்திரங்களுக்கு மதிப்பு; குடுமிக்கு மதிப்பு; சந்த்யாவந்தனம் செய்பவர்களுக்கு மதிப்பு…!”
இதை நகைச்சுவை போலச் சொன்னார்களே தவிர, இது லைட்டான விஷயம் அல்ல. பெரியவாளின் அகச்சுவை.
English Translation
Told by : One Volunteer in access
Host : Sri T.S. Kothandarama Sharma
Typing : Sri Varagooran Narayanan
Name him …. Mannankatti (English meaning Clod)
(Some of Periyavaa’s orders will be fun! + Flavor)
Two incidents
A couple, both of them, not exceeding thirty five years of age, with full of SORROW on their faces, went to Periyavaa and paid their respects by doing Namaskaram.
“Only son….G..o..n..e…” Together they cried. Crying, of course gives solace. After sometime, they stopped crying.
Now, Periyavaa said, “Nothing in this universe is ours. Money – Property, children, Brothers, Nothing belongs to us. Don’t worry. You will have a son. Name him as “Mannankatti (Clod).”
People who were nearby, on hearing this felt like laughing (but they did not laugh)
PS: After one year, the couple came for darshan of (Maha Periyavaa) with their child ‘Mannankatti (Clod)’.
——————————————————————————————————————————–
Small jug, Glass, Uttarini, Plate and Bowls, all made of wood, were submitted by a devotee to Periyavaa.
Periyavaa took one by one in his hand and fondly touched.
Then with mischievous grin he said, here (Sri Madam) only wooden utensils have value, value for tuft (Kudumi), and respect for people who perform Sandhyavandanam..”
Though he said this with humour, its not a matter to be taken lightly. This is Periyavaa’s flavor.
Categories: Devotee Experiences
Also, Palghat brahmins used to name such child as “Dharmam”
The old customs prevalent in those days as narrated by Shri Nanjappa is a Ph.D topic. Several researches can be done on that.
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe Charanam!
மண்ணாங்கட்டி என்று பெயர்………
இந்த மாதிரியான சில பழக்கங்கள் நமது க்ராமப்புறங்களில் இருந்தன. முதல் குழந்தை தவறிப்போனால் , அடுத்துப் பிறக்கும் குழந்தையை குப்பையில் போட்டு புறட்டுவார்கள். அதற்கு குப்பை, பிச்சை என்று பெயர்வைப்பார்கள். (பின்னால், பள்ளிக்கூடத்தில் இது குப்புசாமி, பிச்சமூர்த்தி, பிச்சம்மாள் என்று மாறலாம்.)காது குத்தாமல் மூக்கு குத்துவார்கள்
சொந்தக் காசு இல்லாமல், நாலுபேரிடம் கை நீட்டி வாங்கி. தங்கத்தில் மூக்குக்கு கம்பி போடுவார்கள்.அதில் சின்ன பவழம் இருக்கும்.சொந்தக் காசில் முதன்முதலாக குழந்தைக்கு துணி தைத்துப் போடமாட்டர்கள். வேறு யாராவது (உறவினர் அல்லாதவர்கள்) போட்டால்தான் உண்டு.
மைசூர் பக்கத்தில் ஒரு வழக்கம் இருந்தது. இந்தமாதிரி சமயத்தில் “அடுத்துப் பிறக்கும் குழந்தை கையால் ஸ்வாமியைச் சுற்றி நெய்யால் மெழுக வைப்பேன்” என்று நஞ்சன்கூட்டில் உள்ள ஸ்ரீ நஞ்சுண்டேஶ்வரர் (ஸ்ரீகண்டேஶ்வரர்) கோவிலில் வேண்டிக்கொள்வார்கள். அதன்படி குழந்தைக்கு 5 வயது முடியும்முன் , கர்பக்ரஹத்தில் குழந்தை கையால் நெய்யால் மெழுகவைப்பார்கள். இது 70/80 வருஷங்களுக்கு முன்பு வரை நடந்த சமாசாரம். இன்று அக்கோவில் அர்சகர்களுக்கே இது தெரியவில்லை!
இதெல்லாம் மூடநம்பிக்கை என்று தள்ளிவிடலாம். ஆனால் ஸ்ரீ பெரியவா சொல்லும்போது அதன் மஹத்வம் தெரிகிறது. மேலும் இங்கு ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹ ஸக்தியினாலேயே அடுத்த குழந்தை பிறந்தது என்று எண்ணவும் இடமிருக்கிறது.
“God moves in a mysterious way His many wonders to perform!”