காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்யத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்கா ஸ்நானமும், ஸேது தரிசனமும் பண்ணவேண்டும். ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது! ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்தக் காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Only by the intense repetition of Gayathri shall we be able to master all the Vedic mantras. This japa of Gayathri and arghya must be performed everyday without fail. At least once in our lifetime we must bathe in Ganga and go on pilgrimage to Sethu. If a man has a high fever, people looking after him must pour into his mouth the water with which sandhyavandana has been performed. Today it seems all of us are suffering all the time from high fever! When you run a high temperature you have to take medicine; similarly Gayathri is essential to the self and its japa must not be given up at any time. It is more essential to your inner being than medicine is to your body. Sandyavandana must be performed without fail everyday. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
“ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது”
எக்காலத்திலும் சந்த்யாவந்தனத்தை பக்தியோடும் தொடர்ந்து அனுஷ்டிக்கும் படியான அனுக்ரஹம் பண்ண வேண்டும் என் அய்யனே