Darisana Anubhavangal-Maha Periyava’s Test By Agni

maha_periyava_10

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara – What a test!! Only Sri Periyava can do this! Thanks very much to our Sathsang translation seva member Shri M.Venkataraman for the great translation. Ram Ram


“பெரியவாளின் அக்னி பரீட்சை”

(நமஸ்காரம் செய்யும்போது, கூந்தல் முன்பக்கம் வந்து முடிச்சின் நுனிப்பகுதி ஸ்ரீ பெரியவாளுடைய பாதத்தில் சிறிது பட்டுவிட்டதால் வந்த வினை)

சொன்னவர் – ராஜாமணி சாஸ்திரிகள் ஸ்ரீ மடம் பாலுவிடம் கூறியது.
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு நாள் காலை ஸ்ரீ பெரியவாள் எல்லோருக்கும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சுமங்கலி அம்மாள், பெரியவாள் அருகில் வந்து நமஸ்காரம் செய்தாள். அந்த அம்மையாருக்குச் செழுமையான நீண்ட கூந்தல் நுனியில் முடிச்சுப் போட்டிருந்தாள்.

அவர் நமஸ்காரம் செய்யும்போது, கூந்தல் முன்பக்கம் வந்து முடிச்சின் நுனிப்பகுதி ஸ்ரீ பெரியவாளுடைய பாதத்தில் சிறிது பட்டுவிட்டது.

பெரியவாள் சற்று நேரம் திகைத்துப் போய் சிலையாக மாறிவிட்டார்கள். பின் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார்கள் போலும்.

மெல்ல எழுந்து பக்கத்திலிருந்த ஓர் அறைக்குள் நுழைந்து தரையில் உட்கார்ந்து கொண்டார்கள். அறையின் நான்கு பக்கங்களிலும் அக்னி மூட்டச் சொன்னார்கள். ஒரு வாரம் முழுவதும் வெப்பத்தை சகித்துக்கொண்டு காஷ்ட மௌனத்துடன் (சைகைகளால் கூட குறிப்புக் காட்டாமல்) தவம் இருந்தார்கள். பிக்ஷைக்குப் பாலும்,பழமும் தான். பக்குவமான உணவைத் தொடவேயில்லை.

மற்றவர்களுடைய கவனக் குறைவினால் ஏற்பட்டதாக இருந்தாலும், சிறு தோஷமாக இருந்தாலும் தன்னையே வருத்திக் கொள்வது பெரியவாளின் வழக்கம்.

“பஞ்சகவ்ய ப்ராசனம், கங்கா தீர்த்த ஸ்நானம் பண்ணினால் சகல தோஷங்களும் போய்விடும் என்று பெரியவாளே சொல்லியிருக்கிறீர்கள்? பெரியவாளும் அப்படியே செய்யலாமே?” என்று மனம் தவித்து அணுக்கத் தொண்டர்கள் கூறியதை பெரியவா ஏற்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஓரிரு தொண்டர்களைத் தவிர,வேறு யாருக்கும், ஏன் அந்த சுவாசினிக்கும் கூட, பெரியவாளுடைய கடுமையான தவத்தின் உண்மைக் காரணம் தெரியவே தெரியாது.

Maha Periyava’s Test by Agni

(This incident relates to the consequences of a lady devotee’s hair touching Maha Periyav’s foot while she did namaskaram to Periyava)

Narrated by Sri Rajamani Sastrigal to Sri Matam Balu
Composed by Sri Kothandarama Sarma
Typed by Sri Varaguraan Narayanan

One morning Sri Maha Periyava was giving darshan to devotees. A Sumangali lady came to do namsakaram to Periyava. She had long tresses and had knotted it at the end. When she prostrated in front of Periyava, tip of her hair touched Periyava’s foot inadvertently.

Periyava was stunned for a moment by this incident. Then it appeared that Periyava reconciled his mind.

Periyava got up slowly, went into a room and sat on the floor. Periyava asked fire to be lit on all four sides of the room. For one week Periyava did tapas sitting in the hot room enduring the heat of the fire. He observed Kaashta Mouna vritham – not only did he not speak but he did not communicate with anyone using hand signs also – during this week. He consumed only fruits and milk during this week and did not eat any cooked food.

Even if the dosham (like the lady’s hair touching Periyava’s foot) was due to carelessness of others, Periyava used to observe penance which puts his body through lot of hardship.

Some of his devotees could not bear the ordeal that Periyava used to go through. Few devottees asked Periyava “ Periyava has advised bakthas that Panchagava Praachanam, Ganaga thirtha snanam will remove all doshams. Can Periyava not do one such Praayachitham instead of other harsh ordeals?” But Periyava never accepted the easier alternatives.

The amazing fact is that, except few devotees who are very close to Periyava, all others – including the Sumangali whose hair touched Periyava’s foot – never came to know the real reason for such a harsh Tapas by Periyava.



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Ignorant sishyas who create huge inconvenience for Periyavaas.
    Similarly my mother used to say that when Sri (Pudhu) Periyavaa was in Mylapore in 1960s, once a lady tried to garland him and had to be stopped with great effort.
    Sri (Pudhu) Periyavaa also practised extreme austerities for the following 2 months like mentioned in this article.
    Families should inform their members about the strict and austere measures practised by such great Mahaans

Leave a Reply

%d bloggers like this: