Periyava Golden Quotes-134

Arghyam

அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். அவர், “காணாமல் கோணாமற் கண்டு கொடு! ஆடுகாண் போகுது பார் போகுது பார்!” என்று சொல்லி இருக்கிறார். “காணாமல்” என்றால் ஸூரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸூரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்க வேண்டும். “கோணாமல்” என்பதற்கு ஸூரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸூரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். “கண்டு” என்பதற்கு ஸூரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். “ஆடு” என்றால் “நீராடு!” அதாவது “கங்கையில் ஸ்நானம் பண்ணு” என்பது அர்த்தம். “காண்” என்றால் “ஸேது தரிசனம் பண்ணு” என்பது அர்த்தம். “போகுது பார்” என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும், கங்கா ஸ்நானத்தாலும், ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!” என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Arghya must be offered before sunrise, at noon, and at sunset. Once there was a man called Idaikattu Siddhar who grazed cattle. He said: “KAnamal kOnamal kandu kodu adugan pOghuthu par.” “Kanamal” means before you see the sun rise and “kOnamal” means when the sun is overhead and “kandu” is when you see the sun before sunset. These are the three times when you ought to offer arghya. “Aadu” means “niradu”, bathe in the Ganga. “kan” here means “visit Sethu” or “have darshan of Sethu”. “POguthu par”- by doing Sandhyavandanam, by bathing in the Ganga and by visiting Sethu our sins will be washed away. Here is mentioned the custom of going to Kasi, collecting Ganga water there and going to (Sethu) Rameswaram to perform the abhiseka of Ramanathaswamin there. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

Leave a Reply

%d bloggers like this: