ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். ‘அந்த இரண்டு தானே முக்கியம்? அவைகளை மட்டும் செய்துவிடலாம்’ என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை [புழுதியை] வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Gayathri-japa and “arghya” (offering libation) are the most important rites of sandhyavandana. The other parts of this rites are “angas” (limbs). The least a sick or weak person must do to offer arghya and mutter the Gayathri ten times. “Oh only these two are important aren’t they? So that’s all we do, offer arghya and mutter the Gayathri ten times a day. “If this be our attitude in due course we are likely to give up even these that are vital to sandhyavandyana. A learned scholar remarked in jest about the people who perform arghya and mutter Gayathri only ten times thus applying to themselves the rule meant for the weak and the unfortunate: “They will always remain weak and be victims of some calamity or other”. Sandhyavandana must be performed properly during right hours. During the Mahabharata war, when water was not readily available, the warriors gave arghya at the right time with dust (sand) as substitute. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Dear Sri.Sai Srinivasan,
One week back I requested you to frequently post articles on Gayathri japam and its importance. I am happy to note that you have taken your best efforts in the direction of Mahaperiyava. Let Mahaperiyava bless you generously.
Gayathri Rajagopal