காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்! ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ! லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்ய வேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ள வேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Gayathri contains in itself the spirit and energy of all Vedic mantras. Indeed it imparts power to other mantras. Without Gayathri-japa, the chanting of all other mantras would be futile. We find hypnotism useful in many ways and we talk of “hypnotic power”. Gayathri is the hypnotic means of liberating ourselves from worldly existence as well as of controlling desire and realising the goal of birth. We must keep blowing on the spark that is the Gayathri and must take up the Gayathri-japa as vrata. The spark will not be extinguished if we do not take to unsastric ways of life and if we do not make our body unchaste. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply