Periyava Golden Quotes-128

gayathri-mata

லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், “நீ பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது” என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண். மந்திர சக்தியாகிய அக்னி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக் கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If the Brahmin keeps always burning the fire of mantras always burning in him, there will be universal welfare. He must be able to help people in trouble with his mantric power and he is in vain indeed if he turns away a man who seeks his help, excusing himself thus: “I do the same things that you do. I possess only such power as you have.” Today the fire of mantric power has been put out (or it is perhaps like dying embers). The body of Brahmin has been subjected to undesirable changes and impure substances have found a place in it. But may be a spark of the old fire still gives off a dim light. It must be made to burn brighter. One day it may become a blaze. This spark is Gayathri. It has been handed down to us through the ages. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: