Periyava Golden Quotes-125

Periyava_sitting_painting

“மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?” என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக் கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக் கூடாது.  “பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது” என்று ‘வாஸிஷ்ட ஸ்ம்ருதி’யில் சொல்லியிருக்கிறது. லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே – அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே – தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The Brahmin must refrain from all such acts and practices as make him unclean. Nor should he be tempted by the sort of pleasures that others enjoy with the body. The Brahmin must refrain from all such acts and practices as it makes him unclean. The Brahmin’s body is not meant to experience sensual enjoyment but to preserve the Vedas for the good for mankind. It is for this purpose that he has to perform rites like upanayana. He has to care for his body only with the objective of preserving the Vedic mantras and through them protecting all creatures. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: