Periyava Golden Quotes-120

a3fc2-gayathri

காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது” என்பது அர்த்தம். கானம் பண்ணவதென்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமையுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப் பெயர் அதற்கு வந்தது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

“Whoever sings is protected,” that is “Gayathri”. “Sings” is not used here in the sense of singing a song. It means intoning or chanting (the mantra) with affection and devotion. People who chant the Gayathri in this manner are protected. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

7 replies

  1. Gayatri mantra can be chanted by ladies

    • //Gayatri mantra can be chanted by ladies//

      NOT according to Maha Periyava. There are enough chapters in Deivathin Kural that emphasizes that. You can check with our Periyavas if you want to. Let’s remember Gayathri Mantra is the root of all Vedas. Listing below a few quotes on what Maha Periyava said on this. Ram Ram.

      பிற்பாடு வந்த பௌராணிகமான விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால், ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை. புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து விடுகிறது. ஆகவே, ‘இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception [விதி விலக்கு] ஒளபாஸனம்.

      வேதத்தில் நிஜமான பக்தி இருந்துதான் அதைப் படிப்பேன் என்று ஸ்த்ரீகள் புறப்படுகிறார்களா என்றால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. வேதத்தில் நிஜமான பக்தி இருந்தால் அதன் ஸ்பிரிட்டை ரக்ஷித்துக் கொடுக்கிற தர்ம சாஸ்த்திரத்திலும் பக்தி-நம்பிக்கைகள் இருக்கத் தான் செய்யும். ஆனபடியால் இப்போது சில பேர் இப்படி ஒரு போர்க்கொடி தூக்கியிருப்பதற்குக் காரணம் (ஆழ்ந்த, ஆழுத்தமான குரலில்) Non-Conformism தான் (மரபுக்குக் கட்டுப்படாமை தான்)! ‘இதுவரை சாஸ்த்திர ரீதியிலும் சட்ட ரீதியிலும் எதெதற்கு ஜனங்கள் கட்டுப்பட்டு வந்தார்களோ, நேற்று தாத்தா அப்பா வரை எப்படி ஒரு ஒழுங்குமுறையில் போனார்களோ, அந்தக் கட்டு எதற்கும் உட்படாமல் அறுத்துப் போட்டு விட்டு, இஷ்டப்படி, மனம் போனபடிப் பண்ணுவேன்’ என்பது தான் காரணம். லோகம் பூராவிலும் பரவியுள்ள ‘நான்-கன்ஃபார்மிஸ’த்துக்கு இது இன்னொரு உதாரணம் தான்.

      ஒரு பக்கம், சாஸ்த்திரம் ‘அத்யயனம் பண்ணு’ என்று சொல்கிற புருஷன், ‘எதற்குப் பண்ண வேண்டும்?’ என்று அதை விடுகிறான்; இன்னொரு பக்கம், அது ‘அத்யயனம் பண்ணாதே’ என்று சொல்கிற ஸ்த்ரீ, ‘ஏன் பண்ணாமலிருக்க வேண்டும்?’ என்று கேட்டுக் கொண்டு, தான் பண்ண வேண்டாததை, பண்ணக் கூடாததை எடுத்துக் கொள்ள வருகிறாள். இதே சாஸ்த்திரம் ஸ்த்ரீகளையும் அத்யயனம் பண்ணச் சொல்லியிருந்தால் அப்போது, “வேதாத்யயனம் பண்ணினால் தான் ஆச்சா? பக்தி பண்ணினால் போதாதா? நாமஸ்மரணமே போதாதா?” என்று புருஷர்கள் இன்றைக்குக் கேட்கிற கேள்விகளை அவர்களும் கேட்பார்கள்!

      விஷயம், ஸ்த்ரீகள் வேதத்தில் நேராக ப்ரவேசிக்க வேண்டாம்; அவற்றின் பரம தாத்பர்யத்தை ஒரளவுக்குத் தெரிந்து கொண்டால் போதும்.

      ‘அத்யயனம் என்று பெரிசாகப் பண்ணாமல் ஏதோ ஒரு ஸ்ரீ ஸூக்தம், துர்கா ஸூக்தம் சொல்கிறேனே!’ என்றால், இன்றைக்கு இப்படிக் கொஞ்சம் இடம் கொடுப்பதே நாளைக்குப் பெரிய துராக்ரஹத்தில் கொண்டு விடும். அணையிலே ஒரு சின்ன உடைப்பு ஏற்பட்டால் அதுவே மேலே மேலே பெரிசாகிக் கொண்டு போய் வெள்ளக்காடாகி விடுகிற மாதிரி முடியும்.

      வேதம் பெளருஷமான காம்பீர்யம் கொண்டது. அதைப் புருஷர்களுக்கு விட்டு விடுவோம். இன்றைக்கு அதர்ம வியாதி பிடித்துக் கிடக்கிற லோகத்துக்கு அருமருந்தாக வேண்டியிருப்பது ஸ்த்ரீகளின் மாதுர்யம் தான்; மென்மை, மென்மை என்று சொன்னது தான். மனஸை உருக வைத்து அப்படி மதுரமாகவும் மென்மையாகவும் ஆக்குகிற ஸம்ஸ்க்ருத ஸ்தோத்திரங்கள், தமிழ் துதிப் பாடல்கள் ஆகியவற்றையே ஸ்த்ரீகள் சொல்லி லோகத்தில் மாதுர்யத்தை வளர்க்கட்டும்; தங்கள் க்ருஹங்களையும் மாதுர்யமாக ஆக்கட்டும்.

      அவரவரும் ரைட், ரைட் (உரிமை, உரிமை) என்று பறக்காமல், நல்ல தியாக புத்தியோடு, அடக்கத்தோடு லோக க்ஷேமத்துக்கான காரியங்களெல்லாம் வகையாக வகுத்துத் தரப்பட வேண்டும் என்பதையே கவனித்தால், சாஸ்திரங்கள் சில ஜாதியாருக்கோ, ஸ்திரீகளுக்கோ பக்ஷபாதம் பண்ணவேயில்லை என்பது புரியும்.

      அடங்காமை என்பது தான் இன்று நம்மைப் பீடித்திருகிற பெரிய தீமை. அது இருக்கிற வரையில் இன்றைக்கு லோகத்தில் உள்ள மாதிரி அசாந்திதான் ஸ்ர்வ வ்யாபகமாக இருக்கும். அந்த அடங்காமைக்கு மாற்று மருந்தாகத் தான் அடக்கத்தைத் தலையான அங்கமாகக் கொண்டுள்ள சாஸ்த்ரீயமான பெண்மையை இன்று எப்படியேனும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்பது. நேர்மாறாக, இந்த அடங்காமையை வேதத்தின் விஷயத்திலேயே கொண்டு வருவது மஹா பாபமாகும்.

      • What Mahaperiyava says has no appeal. He knows. However, it must be noted that in the U.S. a lot of Veda Vidwans teach Vedam to ladies. Many of these Vidwans did their Adhyayanam with Sri Matam and have been blessed by Maha Periyava. (E.g. LA, Sandiego, Bay Area).One can see scores of ladies chanting in Atirudrams nowadays. May be these Vidwans feel this is one way to ensure next generation children will do it if the mothers do as well.

      • The next generation needs to imbibe Anushtanams/Gayathri Mantra from their dad and NOT their mom. There are a lot of other good things they can pick it up from their mother, certainly NOT Gayathri Mantra. All the more reasons for fathers to motivate themselves and be a good role model for their children. Ram Ram

  2. Dear Sri.Sai,

    Wonderfully said.Chanting of Gayathri minimum 108 and maximum of 1008 per day with proper pronunciation and devotion, will provide divine shield and be with the devotee in complexities.Let all our focus on Gayathri Mantram. You will be blessed generously by Mahaperiyava for your selfless devine services. The future generations owe a lot to your divine services.

    Gayathri Rajagopal

  3. Sir,Pls clarify can ladies also chant Gayatri Mantra as some Vidvan pandit say yes and some say no
    Regards,

    • Ladies are forbidden to chant Gayathri Mantra as I came to know from one of the great pravachaks Brahmasri Sri Samavedam Shanmukha Sharma of AP. He explained this in his one of the pravachanams titled ‘sandhyavandanam’ which is available in Youtube in Telugu. He also suggests to chant alternate Sloka which is equal to Gayatri for ladies and serves the same purpose as Gayatri Mantra. One can use his/her conscience to decide further.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading