Periyava Golden Quotes-118

cropped-av67_sitting_in_mena.jpg

 

தூய்மைக் குறைவுக்கெல்லாம் காரணமானது சிற்றின்பம் என்று மஹான்களெல்லாம் பாடி வைத்திருந்தாலும், அதிலும் கூட ஒரு நெறியை ஏற்படுத்திக் கொடுத்து, அதையே ஆத்மாவை தூய்மைப்படுத்துகிற ஒரு ஸம்ஸ்காரமாக்கி நமக்கு வேத தர்ம சாஸ்திரங்கள் கொடுத்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு ஜீவனை, ‘காட்டுக்குப் போ; ஸந்நியாஸியாய் இரு’ என்று சொன்னால் அவனால் முடியாது. லோக வாழ்க்கையில் அடிபட்டுத்தான் அவனுக்குப் பக்குவம் உண்டாக வேண்டும். பிஞ்சாகக் கசக்கிற காலத்தில் கசந்து, வடுவாக துவர்க்கிற காலத்தில் துவர்த்து, காயாகப் புளிக்கிற காலத்தில் புளித்து, அப்புறம்தான் பழமாகப் பழுத்து மதுர பூர்ணிமாவதற்கு ஸாமானிய ஜீவர்களால் முடியும். தானாக பழுக்காததைத் தடி கொண்டு அடித்துப் பழுக்கப் பண்ண முடியாது! அப்படி இயற்கை வேகத்தை மீறிப் பண்ணினால் இராமலிங்க ஸ்வாமிகள் சொன்னபடி “வெம்பி விழ” வேண்டியதுதான் என்பது ரிஷிகளுக்குத் தெரியும். அதனால்தான் விவாஹத்தையும் கிருஹஸ்த (இல்லற) தர்மங்களையும் வைத்திருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Great men have spoken in the past about the evil done by the carnal desire. Remarkably enough, our Vedic dharma has turned the same into an instrument for the purification of the Self by means of samskara and by imparting to it an element of propriety. It is not easy for an ordinary man to go to the forest and live as a recluse there or become a sannyasin. To become mellow, he has to go through all the rough and tumble of life, experience all the joys and sorrows of his worldly existence. In the years of tenderness he must taste bitter, in boyhood or student-bachelorhood he must taste astringent, as an unripe fruit [in youth] he must taste sour and as a mellow fruit [in old age] he must taste sweet. Ordinary people must go through all these stages so as to become mellow finally and to be filled with sweetness. What has not ripened naturally, or by itself, cannot be ripened forcibly. In this context one is reminded of the words of Sri Ramalinga Swamigal who speaks of a “prematurely ripe and withered fruit dropping”. The sages know that such would be the result if a man were forced into maturity by going against nature. The duties of marriage and the life of a householder are intended to make a person mellow naturally. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: