நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை – உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?
ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேஸ்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேஸ்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேஸ்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேஸ்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Yesterday a Vaishnavaite came with his wife and child. He looked at this child and said ‘Do Namaskaram for Umaachi Thaatha’. ‘Umaachi’ means Swami. In the tradition of children that are certain vocabulary which have been in existence for two to three thousand years. Elder’s vocabulary will change but not children’s. The word ‘Umaachi’ is an old term that has been in existence for many generations in children’s vocabulary. Whom does ‘Umaachi’ refer to?
One day I went to Malai Kottai (in Trichy). There some body was calling a person as ‘Umaachu’. In that temple Sri Padhanthaangal (people who serve temple) belong to Vaathima Brahmin section. Some of them were from Thirunallem Koneri Rajapuram. In Thirunallam Swami’s name is ‘Uma Maheswarar’. There was a person who had that name called ‘Uma Maheswarariyer’. He was called as ‘Umaachu’ by others. I realized that Uma Maheswarar became ‘Umaachu’. The same got transformed into ‘Umaachi’. So from the children’s language we see that their Swami is ‘Uma Maheswarar’. That Swami did not change for them. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Year Started with the Learning from Nobody else than from ‘Sri Uma Maheswarar’ Himself in skashath Sri Maha Periyav Roopam…. Every one of us know ‘Ummachi’, now we know how it has come…
Wish Everyone a BLESSED NEW YEAR with EVERY DAY LEARNING in every front
Jaya Jaya Shankara, Hara Hara Shankara
Om Namo Bagawathe Sri Ramanayah
On Thursday, December 31, 2015, Sage of Kanchi wrote:
> [image: Boxbe] Sage of Kanchi (