Origin of the word “Mahaperiyava”

Periyava_Pudhu_Periyava

(This is the photo we had in our house for more than 20+ years and lost during few frequent moves..As a kid, I grew up seeing this in our swami room!)

Thanks to Sri Krisnamoorthy for the article.

ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய பதினெட்டாவது வயஸில் பீடாரோஹணம் செய்த புதுஸில், அவரை எல்லாரும் ‘புதுப்’ பெரியவா என்று அழைக்க ஆரம்பித்து, அதற்குப் பின் இருபது வர்ஷங்கள் கழித்தும் கூட, அவர் புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.

இது பற்றி திரு.ரா.கணபதி பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது……

“எல்லாரும் புதுப் பெரியவாள இனிமே ‘பெரியவா’ன்னும், என்னை ‘பரமாச்சார்யாள்’ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு-ன்னு கேள்விப்பட்டேன்.

‘பரமாச்சார்யார்’ங்கற பட்டம், தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே வெக்கறது….அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது…..

…..ஒங்களுக்கெல்லாம் என்ன வேணும்? எனக்கும் அவருக்கும் வித்யாஸம் தெரியணும்! அவளோவ்…தானே? அப்டீன்னா…..புதுப் பெரியவாளைப் ‘பெரியவா’…ன்னும், என்னைச் ‘சின்னவா’ன்னும் சொல்லிட்டாப் போச்சு!..” என்று சொல்லி குழந்தையாட்டம் ஒரே கும்மாளச் சிரிப்பு!

…”பால்யத்லேர்ந்து…பெரியவா,பெரியவா-ன்னு கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு! பெரிய்…ய்யவாளா மொழக்கினதெல்லாம் போறும்! யாருக்குமே தெரியாத ‘சின்ன ஆஸாமியா எங்கியாவுது சுருட்டிண்டு கெடக்க மாட்டோமா-ன்னு தோண்றது; அப்பப்போதான் தோண்றதே ஒழிய, அதுவே ஸ்டெடியா நெலச்சு நிக்கக் காணோம்! அதுனாலதான், மறுபடி மறுபடி அக்ஷதை போட்டுண்டு, எதாவுது ப்ளான், ஸ்கீம் அது இதுன்னு போட்டுண்டே இருக்கேன்……..

…….’சின்னவா, சின்னவா’-ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாலாவுது, ‘சின்னவனாவே சுருட்டிண்டு கெட!”ன்னு அது வாயைக், கையை அப்பப்போ கட்டிப் போடுமோ-ன்னு தோண்றது ” என்றார்.

“மஹதோ மஹீயான்” எனப் பெரிதினும் பெரிதாக உள்ள தத்வமே “அணோரணீயான்” என அணுவிற்கணுவாய் இருப்பது போல், மஹா பெரியவா மஹா சின்னவராகவே தம்மைக் கருதிக் கொண்டவரன்றோ!

மறுபடியும் கண்களில் குசும்பும், சிரிப்பும் பொங்கியோட “பக்தியிலேயும் மஹா பெரியவா-ங்கலாம்; அப்டி இல்லாட்டாலும் மஹா பெரியவா-ங்கலாம் ” என்று இரண்டாவது ‘மஹா பெரியவா’வை, ஒரே நையாண்டியோடு உச்சரித்தார்.

“அறிவில்லாதவனை ‘மஹா’ கெட்டிக்காரன்!ன்னு சொல்லுவோமோல்லியோ?, தன் தகுதிக்கு மீறி எதாவுது சொல்றவாட்ட…. “மஹா பெரியவன்! சொல்ல வந்துட்டியாக்கும்?” ன்னு சொல்லுவோமே, அந்த “மஹா” தான் எனக்குப் பொருந்தும்…” என்று குழந்தைப் பெரியவா சிரித்தார்.

இந்த பாரத தேஸத்தில், முற்றிக் கொண்டு வரும் கலியில், ஸனாதன தர்மத்தை வெறுமனே உபதேஸிக்காமல் அந்த தர்மஸ்வரூபமாகவே ஒவ்வொரு க்ஷணமும் துளி அப்பழுக்கு சொல்ல முடியாதபடி நூறு ஆண்டுகள் , காஷாயத்திற்கே மகுடம் சூட்டியது போல் நம் மஹா பெரியவா நம் நடுவில் நடமாடியிருக்கிறார் ! பூதப்ரேத பைஸாஸங்கள் நடுவே ஆனந்த தாண்டவமாடும் நமஶிவாயமாய் !

மிகவும் லகுவான அவருடைய உபதேஸங்களைக் கூட நாம் அப்போதைக்கு கேட்டுவிட்டு, அப்போதைக்கப்போதே மறந்தும் விடுவோம்.

“மாயை இன்னும் விடலை”என்று வேறு நமக்கு நாமே ஸமாதானம் வேறு சொல்லிக் கொள்ளுவோம். ‘பரமாச்சார்யாள்’ என்று இன்றும் அவரை அழைக்கிறோம், அவர் அப்படி அழைப்பது மரபுக்கு எதிரானது என்று கூறியும் கூட!

“கடவுள் இருக்கிறாரா? இருந்தால் காட்டு!” என்று நாஸ்திகவாதம் பேசுபவர்களிடம் “இதோ! பெரியவா இருக்கிறார் பார்!” என்று ஒரு பாமரன் கூட தைரியமாகக் காட்ட முடியும். உலகை உத்தாரணம் பண்ண வந்த பல்லாயிரம் அவதார புருஷர்களில் பகவான் ஆதி ஶங்கரருக்குப் பிறகு, நம் பெரியவாதான் ஸுனாமிப் பேரலை மாதிரி பாரதத்தின் மூலை முடுக்கிலெல்லாம், உலகில் பெயர் தெரியாத நாடுகளில் கூட, அங்கிருக்கும் ரொம்ப ஸாதாரண ஜனங்களுக்குக் கூட அனுக்ரஹத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்! என்றால், அது மிகையாகாது.

நாம் பூதமோ, ப்ரேதமோ, பைஸாஸமோ எதுவாக இருந்தாலும், நாம் என்றும் “நம்முடைய பரமேஶ்வரனை” சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மட்டுமாவது ஜாஸ்தி பண்ணிக் கொள்ளுவோம். போடும் பேயாட்டத்தையும் அவனுடைய திருவடிக்கு கீழேயே போடுவோம்! அவனைச் சேர்ந்தவர்களை எப்படி இருந்தாலும், அவன் கைவிடுவானா? தன்னோடு சேர்த்துக் கொள்ளாமல் போய்விடுவானா என்ன?

அவனுக்காச்சு! நமக்காச்சு !!!Categories: Devotee Experiences

10 replies

 1. ithil thamilil eluthukkal var vaippathu eppadi

 2. naam avari panikirom avar nammai atti vaippar avar than mahaperiyava . avar thiruvadi saranam

 3. நம்முடைய பரமேஶ்வரனை” சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மட்டுமாவது ஜாஸ்தி பண்ணிக் கொள்ளுவோம்.

 4. Namaskaram to all

  Somebody please translate all this as well as former articles in Tamil to English? Eagerly looking forward to learn all these inspirational articles

 5. Great recap.
  Periyava sonna madhiri ,chinnavana suruttindu naamum irundhu vittal nandragave irukkum.
  We need Periyava’s Anugraham for this mindset and sense of humility.
  Periyava Periyava thaan.

  • Liked the article very much. So well written Krishnamoorthy Sir and thanks Maheshji for sharing. I also liked Mr. Balasubramanian’s comment above 🙂 well said sir!

   • Ram Ram Sir, This is not written by Shri Krishnamurthy. This was written by Shri Ra Ganapathi Anna in his book called ‘Maha Periyava Virundhu’. The former has shared it. Ram Ram

 6. Excellent information “Maha Periva”. The unshakable faith on Parameswaran is nothing bur our faith on Maha Periva. None of us have seen Parameswaran but we have seen Parameswaran avatharam, Maha Periva. Hara Hara Shankara Jaya Jaya Shankara

  Gayathri Rajagopal

Trackbacks

 1. Origin of the word “Mahaperiyava” | V's ThinkTank

Leave a Reply

%d