எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் (South West Corner) விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்னி மூலையில் (South East Corner) சோமாஸ்கந்தரும், ஈசானத்தில் (North East) நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர் மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. திருவிடைமருதூருக்குப் பத்து மைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். திருவிடைமருதூருக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேஸ்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
In any Siva temple Kanni Moolai (South West Corner) resides Lord Vigeswarar, Lord Subramaniar resides in the West, Lord Chandigeswarar resides in the North, Lord Dakshinamurthy resides in the South, Lord Somaaskanadar resides in Agni Moolai (South East Corner), and Lord Nataraja resides in Esaanam (North East). Swami Malai Subramaniar Kshethram is located in 10 miles direct west of Madhiyarjuna (Thiruvidai Marudhur Maha Linga Kshethram). A litte far away in South West (Kanni Moolai) resides Thiruvalanchuzhi Vinayagar acting as Thiruvidai Maruthur Mahalingam Vigneswarar Sannidhi. Ten miles south of Thiruvidai Marudhur Kshethram there is a place called ‘Aalangudi’. That is Lord Dakshinamurthy Kshethram. Straight north of Thiruvidaimaruthur is Thiruseinallur where Lord Chandeswarar resides. Straight East of Thiruvidai Maruthur resides Thiruvaaduthurai where Nandhi Bhagawan resides. In Thiruvaarur we have Somaaskandar, Chidambaram we have Natarajar. Like this the Chozha region (Tanjor District in Tamil Nadu) is full of Siva Temples. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Thanks for sharingRAJA
Reblogged this on Gr8fullsoul.