அம்பாளிடம் மனம் ஈடுபட என்ன வழி?

Thanks Smt Saraswathi Thyagarajan mami for this article – I personally interviewed Dr Radhakrishna sastrigal in Srirangam and remember this incident narrated by him.

Periyava_japam_mudra

I know I have already shared this one. But I have no problem in sharing this incident even 100 times. This is all we do. Please refer to the “Bhaavam” article I posted earlier. Those devotees, do not go outside of their upasaana dheivam to complain. Most of us go and ask 100 different people to help us with our upasaana – except the deity itself. These are the incidents that we need to learn and practice. These devotees’ experiences teach us all great lessons.

என் தந்தை சிமிழி ப்ரம்ம ஸ்ரீவெங்கடராம சாஸ்திரி ஸ்ரீமடத்தின் அபிமானத்துக்கு மிக்க உகந்தவர்.எனது பால்யத்திலேயே அவர் மறைந்தார். பகவத் சங்கல்பத்தில் இரு சன்னியாசிகள் மூலம் தேவி உபாசனை கிட்டியது. பல ஆண்டுகள் உபாஸித்த பிறகும் ,உபாஸனையில் உடலும் வாக்கும் ஈடுபடும் அளவுக்கு மனதும்  ஈடுபடவில்லையோ என ஒரு தாபம்! சாந்தி கிடைக்கவில்லை என்ற எண்ணம் வலுத்தது.

பெரியவாளிடம் சென்றேன். என் மனக் குறைய அவரிடம் கொட்டினேன்.

”பூஜையில் வாக்கும் செயலும் ஈடுபடும் அளவுக்கு மனம் ஈடுபடவில்லை”

”அதற்கு நான் என்ன செய்யணும்?”

‘மனம் அலையாதிருக்கும் வழியைக் காட்டணும்”

”நீ என்ன படித்திருக்கிறாய்?”

படித்தது அனைத்தும் சொன்னேன்

”இத்தனை படித்தும் உனக்கு விவேகம் இல்லையென்றால் என்னால் உன்னைத் திருத்த
முடியாது.”

”என்னால் என்னைத் திருத்திக் கொள்ளமுடியவில்லை; அதனால்தான் பெரியவாளிடம் வந்தேன்.”

”என்னை என்ன செய்யச் சொல்றே?”

”மனம் அலைபாயாதிருக்க வழிகாட்ட வேண்டும்”

”நீ என்ன பூஜை பண்றே?”

”அம்பாளை படத்திலும், விக்ரஹத்திலும், யந்திரத்திலும் பூஜை செய்கிறேன்.”

”படத்தில், யந்த்ரத்தில் அம்பாள் இருப்பதாக நினைத்துத் தானே செய்கிறாய்?”

”ஆமாம், அப்படித்தான்.”

”அப்போது இந்தக் குறையையும் அவளிடத்திலேயே தெரிவித்திருக்கலாமே?”

”நிறையப் படித்திருக்கிறாய்..படம், விக்ரஹம், யந்த்ரம் எல்லாவற்றைலும் தேவி இருப்பதாக நினைத்து பூஜை செய்கிறாய்…ஆனால் ஒன்றிலும் உனக்கு நம்பிக்கை இல்லை.தேவி உன் வீட்டில் உன் அருகில் இருக்கும்போது என்னிடம் வந்து அழுகிறாய்
அவளிடம் உன் குறையைச் சொல்லத் தெரியவில்லை. இனி அங்கயே அழு.இங்கு வராதே” என கடுமையாகப் பேசி விட்டார்.

எனக்கு கண்களில் நீர் கோர்த்தது. மனதில் பேரிடி.. மறுபடி நமஸ்கரித்து விடை பெற நினைக்கும்போது,

”ரொம்ப கோவித்துக் கொண்டுவிட்டேனா? நீயே விரும்பி ச்ரத்தையாக தேவியை உபாஸிக்கிறாய்; மனம் ஈடுபடவில்லை என்ற குறையையும் உணர்கிறாய், உபாஸனை என்பதே அவள் அருகில் இருப்பதுதானே? உன் அருகில் இருப்பவளிடம் குறையைச் சொல்லாமல் நீட்டி முழக்கிக் கொண்டு இங்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு உறைக்கிறாற்போல் கடுமையாகச் சொன்னேன். இனி எதற்காகவும் , எந்தக் குறையானாலும் அவளைத் தவிர யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. அவளன்றி யாரும் உனக்கு உதவ மாட்டார்கள்

அன்றிலிருந்து என் குறைகள் யாவையும் அவளுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன். கடும் துயரிலும் அவளிடம் மட்டுமே அழுகிறேன்.

இப்படிச் சொல்வது ஸ்ரீரங்கம் எஸ். ராதாகிருஷ்ண சாஸ்திரிகள். இந்த அறிவுரை அவருக்கு மட்டுமல்ல! நம் யாவருக்கும் சேர்த்துத்தான்! அவள் பாதங்களை இறகப் பிடித்துக் கொண்டால்  அவள் தாயானவள் நம்மை எந்தக் காலத்திலும் உதற மாட்டாள்!

ஜய ஜய சங்கரா….



Categories: Devotee Experiences

10 replies

  1. நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ஐயா

  2. மகாபெரியவா அம்பாளிடம் பூர்த்தியா சரணாகதி பண்ணெசொல்லி இருக்கா பெரியவாளே மகஸேன்,அம்பாள் சொரூபம் தானே.

  3. Thanks Krishna for translaton.

  4. I have read through the Laitha Sahasranama Bhasyam by Sri.Radhakrishana Sastrigal (3rd Edition, 1999) and after reading this mail I can certainly state that Sri.Sastrigal had obtained what he had sought. A wonderful bhasyam in Tamil and many rare and exclusive information like direction of Devi and Sadhaka in worship of Sri Meru and various Naysas can be found here. Similar is the explanation of Kamakala Dhyana. In Tamil we say ” Avan Arulal Avan Thaal Vanangi”.

  5. ஸ்ரீ பெரியவா சரணம்

  6. English translation.
    AmbaLidam Manam eedupada enna vazhi ?

    My father ChiMiZhi Brahma Shri Venkatrama SastrigaL was held in high esteem by the Shri Matam. He passed away when I was a young boy. Due to divine grace, I got ‘Devi

    Upasanai’ through two Sanyasis. However even after years of doing Upasana, I was sad that my mind was not as involved in the Upasana as my body and tongue. I got the feeling that I wasn’t totally at peace.

    I went to Periyava and told all about my grievances

    “I’m unable to focus my mind during the Puja”
    “Ok, so what do you want Me to do ?”
    “You should please show me a way to prevent my mind from straying”
    “What have you studied?”
    I gave him all the details.
    “Even after studying so much, if you have not got wisdom, I cannot do anything to correct you”
    “I have not been able to correct myself. That is why I have come to Periyava”
    “What do you want Me to do?”
    “You should please show me a way to prevent my mind from straying”
    “What Puja do you do?”
    “I worship AmbaL in photos, idols and in ‘Yanthrams'”
    “You perform Puja believing that AmbaL is present in the photos and in the Yanthrams, right ?”
    “Yes, that’s right”
    “Then you could have told about this grievance to Her directly. You have studied so much. You perform Puja believing that AmbaL is present in the photos, idols and in

    Yanthrams. But basically, you don’t have faith. When the Devi is with you at home, you come to Me and cry. You don’t know to put forth your grievances to Her. Now go

    there and cry. Don’t come here”, Periyava spoke a little harshly.

    My eyes welled up with tears. Mind in turmoil. When I was about to leave after having bowed down to Him, Periyava spoke again, softly this time.
    “Did I become a little angry? You do Upasana to Devi. You also realise that your mind wanders. Upasana itself means that Devi is beside you. Instead of telling your grievances to Her who is right beside you, you have come all the way here. I spoke harshly to ensure you really understand. From now onwards, you should not tell your grievances to anybody but Her. Nobody but Her will help you.”

    From that day onwards, I just surrender all by grievances to Her. I cry only in front of Her even in times of extreme distress.

    So says Srirangam RadhaKrishna SastrigaL. This message from Periyava is not only for him. It applies to each one of us. If we catch hold of Her Holy Feet, that Mother will never forsake us.

  7. இனி எதற்காகவும் , எந்தக் குறையானாலும் அவளைத் தவிர யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. அவளன்றி யாரும் உனக்கு உதவ மாட்டார்கள்” – I take a message from this sentence. I was thinking some topic since yesterday and unable to get clarity on that. Maha Periva gave me a message! Thank you Periva.

  8. அருமையான விஷயம்.ஏற்கெனவே இரு சன்யாசிகள் மூலம் உபாஸனை மேற்கொண்டதால், அந்த ஆஸ்ரமத்திற்கு மதிப்புக் கொடுத்து ஸ்ரீ மஹாபெரியவா எதுவும் நேரடியாகச் சொல்லவில்லை போலும்! ஆனாலும் கடைசியில் வழிகாட்டி விட்டார்! ப்ரஹ்மஸ்ரீ ராதாக்ருஷ்ண சாஸ்திரிகளும், அவர் சகோதரர் ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாதஆத்ரேயனும் ஆஸ்திக உலகிற்குச் செய்துள்ள தொண்டு மஹத்தானது. ஸ்ரீ ராதாக்ருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கும் ஸ்ரீ துர்கா ஸஹஸ்ர நாமத்திற்கும்,ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கும் அரிய விரிவுரை செய்து அவை புத்தகமாக வந்திருக்கின்றன.மற்ற உரைகளைப் படித்துவிட்டு இங்கு வரும்போதுதான் இவற்றின் மஹத்வம் நன்கு விளங்கும் ! ஸ்வானுபூதி யில்லாமல் இப்படிப்பட்ட உரை எழுதமுடியாது.. தெய்வத்தின் குரலின் பல பகுதிகளிலிருந்தும் மஹாபெரியவாள் விநாயகரைப் பற்றிச் சொன்ன அத்தனை விஷயங்களையும் தொகுத்து ஒரே புத்தகமாக “விநாயகர்” என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். இதைத்தவிர ஆதி சங்கரர் காலம்,வரலாறு , தர்ம சாஸ்திரம், ஆயுர்வேத விஷயங்கள் என்றும் எழுதி இருக்கிறார். இவருக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்,

  9. Yes. Absolutely! Thanks for sharing this useful info.

Leave a Reply to natarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading