நாம் நான்கு வழிகளில் பாவங்கள் செய்கிறோம். உடலினால் தீய காரியங்கள் செய்வது, வாயினால் பொய் பேசுவது, சொல்லத் தகாத வார்த்தைகளை சொல்வது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது, பணத்தின் மூலம் பாவச் செயல்களைச் செய்வது. இந்த நான்கின் மூலமாகவே நன்மை செய்ய நாம் பழக வேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்கோ, கடவுளுக்கு தொண்டு செய்வதற்கோ உடலைப் பயன்படுத்தலாம்.வாயினால் பகவானின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மனம் தான் கடவுள் குடி கொள்ளும் இடம். அதை நாம் ஒரு குப்பைத் தொட்டியாக்கிவிட்டோம். அதை சுத்தம் செய்து கடவுளை வீற்றிருக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்து நிம்மதியாக இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடமாவது நாம் தியானம் செய்யலாம். பணத்தினால் ஏழைகளுக்கு உதவி செய்யலாம். கடவுளுக்கு தொண்டு செய்யும் காரியங்களுக்காகச் செலவிடலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
We are committing sins in four ways. Doing bad karmas with our body, telling lies with our mouth, uttering words that should not be told, cultivating bad thoughts in our minds, and sins committed through money. We have to use these same instruments to do good things. We should use our body to help others and do service to the Lord. Chant Bhagawan Nama using our mouth. Our mind is the abode of Bhagawan. We have made this a garbage can. We have to clean it and have Bhagawan reside inside it. We should do this and be peaceful. We should do Bhagawath Dhyanam for at-least five minutes. With our money we can help poor and needy. We can also spend the money for Service of Bhagawan and related activities. – Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
so true may maha periyava bless us to do the right things and stop us from sinning