Simple & outstanding poem by mama…. As usual, great drawing…
Hara Hara Sankara Jaya Jaya Sankara!
மஹாபெரியவா பாடல்.
என்றென்றும் உன் திருவுருவைக் காண வேண்டும்,
எப்பொழுதும் உன் திருநாமம் கேட்க வேண்டும் !
அனுதினமும் உன் திருப்பாதம் பூஜிக்க வேண்டும்,
அருள்வாய் ஐயனே என் குருநாதனே ! …………………………………………………………………………………………………………………..1
இம்மைக்கு உகந்ததோர் வாழ்நெறி பகன்றாய்,
செம்மையும் அன்பும் அறமும் கொண்டதோர் வாழ்நெறி !
அந்நெறி தவறாமல் நான் நடக்க வரம் வேண்டும்
அருள்வாய் ஐயனே என் குருநாதனே ! ………………………………………………………………………………………………………………………2
உன் நாமம் ஸ்மரிப்பதன்றி வேறென்ன நினைவெனக்கு,
உன் உருவம் வரைவதன்றி வேறென்ன பணி எனக்கு,
உன் புகழ் கேட்பதன்றி வேறென்ன உணவெனக்கு
உன் சரணம் பற்றினேன் ஐயனே என் குருநாதனே ! ……………………………………………………………………..3
பார் முழுதும் திருப்பாதம் பதித்தவரே அருளாளா !
‘காரி’ல்லை, வண்டியில்லை, ஆகாய விமானமில்லை !
ஆதி சங்கர்தம் அருள்வழியில் சென்றவரே !
‘தெய்வத்தின் குரலி’லே வேதத்தைத் தந்தீரே ! …………………………………………………………………………………………..4
ரமணர் சேஷாத்ரி உடனுறை சங்கரா !
அன்புநெறி காட்டிய அத்வைத குருவே !
எம்மை ரக்ஷிக்க பூவுலகம் வந்த
பிரத்யக்ஷ தெய்வமே ! தக்ஷிணாமூர்த்தியே ! ……………………………………………………………………………5
மீண்டும் நீ இங்குவரும் போழ்தினிலே
அண்டி உந்தன் பணி நானும் செய்திடவே
வேண்டும் வரம் தந்திடுவாய்
தண்டம் ஏந்திய பகவானே ! …………………………………………………………………………………………………..6
நாராயணன் பாலா. 6/11/2015.
Categories: Photos
When one is always remembering the grace of Sri Mahaa Periyavaa, words fall in their slots and chanting the song, one is directed to saranaagathi. Hara hara Sankara, Jaya Jaya Sankara
lucid and simple meaningful let us all join in chorus reciting the poem
Excellent . One among best padal on maha periyavaa. Great. Jaya jaya sankara hara hara sankara
Outstanding!! Outstanding!! Maha Periyava Padham Charanam!!!