Navarathri Special – Mahalakshmi

Lakshmi

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara – The first three days of Navarathri is dedicated to Durga Devi, the next three days to Mahalakshmi, and the final three days to Saraswathi Devi. We are now on the fourth day of Navarathiri dedicated to Mahalakshmi. Here Periyava explains about the importance of money, how Mahalakshmi helps us attain it the right way, and the birth of Kanakadhara Stothram by our Adi Aacharyal. The link to Kanakadhara Stothram by MS Amma is given below so we could recite these 3 days.

Let us also remember what Periyava said about Gho Matha and Mahalakshmi in Deivathin Kural.  Apart from doing Lakshmi Puja to a deity let’s consider doing what Periyava said as a ‘Big Lakshmi Puja‘  (Feeding Gho Matha). Here are some direct quotes from Deivathin Kural on this. Happy Navarathri! Ram Ram.

 

//ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக – பயம் கலந்த மலைப்பாக – இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே! அதனால் கோமாதாவைக் குறிப்பாக லக்ஷ்மி என்ற ஒரு தேவதையின் ஸ்வரூபமாகச் சொல்வது. கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு “பெரிய லக்ஷ்மி பூஜையும்” ஆகும். வேதம் இருந்தால் தான் லோகமே நன்றாக இருக்கும்; லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதீகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில் தான் இருக்கிறது. அதற்கு இரண்டு அவசியமானவை. ஒன்று யஜ்ஞம் பண்ணுகிற கர்த்தாவான ‘யஜமானன்’. இன்னொன்று யஜ்ஞத்தில் உபயோகமாகிற அதி முக்கியமான த்ரவ்யங்களைத் தருகிற கோ தான். ஆகையினால் கோ இல்லாவிட்டால் யஜ்ஞம், வேள்வி என்பதே இல்லை. கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம். ஸகல புண்ணிய தீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இருக்கின்றன. நம்முடைய ஆலயம் ஒவ்வொன்றிலும் சில தெய்வங்களுக்கு ஸந்நிதிகள் இருக்கின்றன; அதைச் சேர்ந்ததாக ஒவ்வொரு புண்ணிய தீர்த்தம் இருக்கிறது. கோ என்பதோ அத்தனை தெய்வங்களும் அத்தனை புண்ணிய தீர்த்தங்களும் குடி கொண்ட ஆலயமாக இருக்கிறது. கோவே ஒரு நடமாடும் கோயில். ஸர்வ தேவதைகளுக்குமான மஹத்தான கோயில்.//

 

மஹாலக்ஷ்மி

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றார் திருவள்ளுவர். எல்லோரும் வீடு வாசலை விட்டுவிட்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபட முடியாது. உலக வாழ்க்கையை நடத்துவதானால் பணம் வேண்டித்தான் இருக்கிறது. இப்படிச் சம்பாதித்து குடும்பம் நடத்துபவர்கள் இருப்பதனால்தான் வேறு சிலர் ஆத்ம விசாரம் செய்ய முடிகிறது. பொருள் தேடி வாழ்க்கை நடத்தும் கிருஹஸ்தர்கள்தான் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்ட சந்நியாசிகளுக்கு பிக்ஷை அளித்து அவர்களை ரக்ஷிக்கிறார்கள். கிருஹஸ்தர்கள் இல்லாவிட்டால், பொருளைப் பற்றி நிர்விசாரமாக சந்நியாசிகள் என்று சிலர் ஞானம், பக்தி இவற்றிலேயே ஈடுபட்டிருக்க முடியாது. “பொருள் (பணம்) என்பது பொருள் இல்லாதது”. ‘அர்த்தம் அனர்த்தம்’ என்று சொன்ன அதே ஆதி சங்கராசாரியாள், அதே ‘பஜகோவிந்த’த்தில் பணப் பேராசை பிடித்து அலையாதே! ஆனால் உனக்கு உரிய கர்மத்தினால் நீ சம்பாதிக்கிற பொருளைக் கொண்டு நியாயமாக வாழ்ந்து உன்னையே உயர்த்துக் கொள் என்றார்.

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்

வித்தம் தேன விநோதய சித்தம்.

 

செல்வத்துக்கு அதி தேவதையாக இருக்கப்பட்டவள் மஹாலக்ஷ்மி. அவளைப் பிரார்த்தித்தால் நமக்கு தர்ம நியாயமாக வேண்டிய சம்பத்தைத் தந்து அநுக்கிரகம் செய்வாள். ஞான, வைராக்கியக் கிரந்தங்களை நிறையச் செய்த ஸ்ரீ ஆசாரியாள் தம்முடைய பரம காருண்யத்தால் விவகார தசையிலுள்ள லோக ஜனங்களை உத்தேசித்து அவர்கள் மஹாலக்ஷ்மியை எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிற மாதிரி, ‘கனகதாரா ஸ்தவம’என்ற லக்ஷ்மீ பரமான ஸ்தோத்திரத்தை, நமக்கு அநுக்கிரகித்திருக்கிறார்.

இந்தக் ‘கனகதாரா ஸ்தவம்’ உண்டானதற்கு ஒரு கதை உண்டு. ஆசாரியார் சன்னியாசம் வாங்கிக் கொள்வதற்கு முற்பட்ட கதை அது. அவர் பால தசையில் காலடியில் பிரம்மச்சாரியாக குருகுலவாசம் செய்து வீடு வீடாகப் போய் பிக்ஷை வாங்கி வந்த சமயம், ஒரு துவாதசியன்று பரம தரித்திரன் ஒருவன் வீட்டுக்கு பிக்ஷைக்காகப் போனார். அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவவே போனார் போலிருக்கிறது! இவர் போன போது உஞ்சவிருத்திப் பிராமணனாகிய வீட்டுக்காரன் வீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா! எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி! இவருக்குப் பிக்ஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்” என்று நினைத்தாள். ஆனால், பிக்ஷை போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடித்தேடி பார்த்ததில் ஒரு புரையில் அழுகல் நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப்பாரணைக்காக அவள் புருஷன் ‘சேமித்து’ வைத்திருந்த நெல்லி! ‘போயும் போயும் இதையா அந்தத் தெய்வக் குழந்தைக்குப் போடுவது!’ என்று ரொம்பவும் மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால் “பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்டுவிட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அநுப்பக்கூடாது என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மகா தேஜஸ்வியாக நிற்கிற பாலசங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ‘ஐயோ இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?’ என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்து தவித்து நடமாடிவிட்டு கடைசியில் ‘அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்!’ என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அழுகல் நெல்லிக்கனியை ஆசாரியாளுக்குப் போட்டாள்.

பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனசு எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் ஆசாரியாள் கண்டுகொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று. உடனேதான் அவளுக்காக மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்து, ‘கனகதாரா ஸ்தவம்’ பாடினார்.

 



Categories: Deivathin Kural

Tags:

5 replies

  1. The description of the conflict situation undergone by the lady who finally gives the nellikai as Biksha is superb.
    The post is not only enjoyable reading but also a valuable guide.

  2. To read in both the languages these good contents elevating the soul.
    Pray to Prosper. Mvv and R

  3. Wonderful service is being rendered by translating texts. Keep up the good work sir.heartfelt Thanks .

  4. Thanks for nice translation
    It really helps the non Tamil readers of this blog

  5. Ram Ram – English Translation – Sincere apologies for any mistakes or typos. Ram Ram.

    //If Gho Matha is said as ‘Sarva Devatha Swaroopma’ it will be overwhelming as we cannot comprehend and also fear about it. That is the reason Gho Matha is said as ‘Lakshmi Devatha Swaroopam’. Gho Matha Samrakshanam is not only a Jeeva Karunya seva but also a ‘Big Lakshmi Puja’ as well. Vedas form the backbone of this universe. The world will be peaceful only if Vedas exists. The welfare of the world depends on the Vaidheeka Yajnas done in Bharatha Desam. Two things are important for this. The Kartha doing the Yagnam. The very important things that are given by Gho Matha’s are used in those Yagnas. So if there is no Gho Matha there are no Yajnas. All the 33 Crore Devathas reside within a Gho Matha. All the holy rivers are within a Gho Matha. In our temples there are sannidhis for different deities and there is a holy tank. But Gho Matha is a significant temple in which all the deities and all the holy rivers exist. //

    “Mahalakshmi”

    “Porul Ilaaarkku Ivvulagam Illai” (“This world is not for who does not have wealth”) told Sri Thiruvalluvar.
    All of us cannot leave our home and indulge ourselves in Aathma Dhyanam. To run this worldly life we certainly need money. Because we have people who earn money some people are able to indulge in Aathma Vichaaram. It is the ‘Gruhastaas’ (family people) who earn wealth gives Biksha to Sannyaasis to do Aathma Vichaaram and protects them. If there are no ‘Gruhasthas’, Sanniyasis could not whole heartedly immerse themselves in Gnanam and Bhakthi. Sri Adi Sankaracharya who said ‘Money does not have any value, Material is Immaterial’ in Bhaja Govindam also said in the same sloka, ‘Do not run after money, do your own karma and whatever you earn out of it live ethically, and raise yourself.

    Yallabase Nija Karmopaatham
    Vittham Thena Vinodhaya Chittam

    Mahalaksmi is the Goddess of Wealth. If we pray to her she gives us all that is very fairly due to us and showers her grace. Our Adi Aacharya, who did many Granthas (books) on Gnana, Vairagyam out of his sheer grace and for people who are running in this materialistic world showed how to worship Mahalakshmi by giving us ‘Kanakadhara Sthavam’ (kanakadhara Sthothram). This is a great slokam praising Lord Mahalakshmi.

    There is a story on how this ‘Kanakadhara Sthavam’ was formed. This was before our Aacharyal took sannyasa. When Aacharyal was a young brahmachari doing Gurukula vasam in Kaladi (Kerala) he used to go to various homes asking for Biksha (begging for food). During one Dwadasi, he went to a very poor Brahmin’s home for Biksha. It was as though he went to his home to shower his grace on him. When he went the Unjavruddhi Brahmin (a Brahmin who sings Bhagawan Nama and asks for food) was not in his home. Only his wife was there. Upon seeing our Aacharyal, she thought, “What a Tejasvi this Brahmachari is? If we offer him Biksha we will get all Punniyas”. But to offer Biskha there was not even single grain of rice at home. After searching a lot, she can only find one decayed nellikai (gooseberry/amla) in the rack. Her husband has saved it for doing Dwadasi Paranai (food for breaking the fast the next day after Ekadasi).

    She felt extremely bad to offer that to the divine Bala Sannyasi who has come to their home for Biksha. However, she did not want to send the Brahmachari who asked ‘Bavadhi Bikshaam Dehi’ empty handed. So she went to the front of the home. When she was Bala Sankara standing as Maha Dejasvi she felt extremely embarrassed and tears filled her eyes. She came back insider home and cried, “Should I send the Brahmachari empty-handed?”. Again she went back outside. After going back and forth with so much dilemma, she finally decided, “Whether it is bad or decayed, this is what we have and this is what we can offer”. She consoled herself and gave that decayed nellikaai as Biskha for Aacharyal.

    Aacharyal saw even though she was poverty stricken how broad her mind was and what kind of love she has for him. His mind melted for her. Immediately he prayed to Mahalakshmi and sang ‘Kanakadhara Sthavam.”
    Click the link in the post to listen to Kanakadhara Sthothram. Ram Ram

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading