Navarathiri 2nd Day Procedure – Varahi

Thanks Hariharan for the article.Sri_Varahi

நவராத்திரி இரண்டாம் நாள்  வழிபாடு!

அம்பிகையை வராஹியாக அலங்கரித்து வழிபடவேண்டும்.வராஹ (பன்றி) முகம் கொண்டவளாகவும் தெத்துப் பற்களால் பூமிப்பந்தை தாங்குவது போலவும் அலங்கரிக்க வேண்டும். கைகளில் சூலம் உலக்கை ஆகிய ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும்.இவளை வணங்கினால் போட்டி பொறாமையால் தொந்தரவு தரும் எதிரிகளிடம் இருந்து விடுதலை பெறலாம். நாளை மதுரை மீனாட்சியம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. அம்மனும் சுவாமியும் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் பெருமை மதுரைக்குரிய சிறப்பாகும்.

சித்திரை தொடங்கி ஆடி வரை மீனாட்சியும் ஆவணி முதல் பங்குனி வரை சொக்கநாதரும் அரசாட்சி செய்வதாக ஐதீகம். பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை கயிலையில் சிவனும் அம்பிகையும் அமர்ந்திருந்த போது இவர் சிவபெருமானை மட்டும் தனித்து வலம் வந்து வணங்கினார்.அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன் தேவியை நெருங்கி அமர்ந்தார்.ஆனால் முனிவர் வண்டாக உருவெடுத்து சிவபார்வதிக்கு நடுவில் புகுந்து இறைவனை மட்டும் வலம் வந்தார்.கோபத்தில் பார்வதி பிருங்கிமுனிவரின் சக்தி அனைத்தையும் வற்றச் செய்தாள்.ஆனாலும் பிருங்கி சிவனருளால் மூன்றாவது காலும் ஊன்றுகோலும் பெற்றுக் கொண்டு தனது இயக்கத்தைத் தொடர்ந்தார்.சிவனுக்கு சமம் சக்தி என்பதை உணர்த்து வதற்காக அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன்பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள்.ஆண்பாதி பெண்பாதியாக இணைந்து காட்சியளித்த இக்கோலமே அர்த்தநாரீஸ்வரர் ஆகும்.அர்த்தம் என்றால் பாதி நாரி என்றால் பெண். “அர்த்தநாரி என்றால் ஈஸ்வரனில் பாதியாக இணைந்த பெண்.இந்த வடிவத்தைத் தரிசித்தால் கணவன் மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும்.நாளை அர்த்த நாரீஸ்வர வடிவில் மீனாட்சியை வணங்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

நைவேத்யம்: தயிர் சாதம்

பாட வேண்டிய பாடல்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

நவராத்திரி நாமாவளி:நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி:
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி:
ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி:
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. Many Asirvadams to Sri Sai Srinivasan for useful messages for enlightening those who read the messages.Thanks for his efforts.Jaya Jaya Sankara Hara Hara sankara. Janakiraman. Nagapattinam.

  2. Vaarahyai Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. Navarathri Second Day Worship Procedure – Sincere apologies for any mistakes or typos. Ram Ram

    On the second day of Navarathiri (Oct 14) Ambal should be worshipped as ‘Varahi’. Varaham means Pig. We should decorate her with the face of a pig and with teeth crossed, showing she lifts Mother earth with her teeth. Decorate with Soolam, Ulakkai (Rice Pounder) in her hands. If we worship her we will get rid of our enemies who are jealous of us. Tomorrow Madurai Meekanshi Amman is decorated as ‘Ardhanaareeswarar’. This depicts men and women are equal. The greatness of Madurai lies in Ambal and Swami crowning themselves as queen & king and ruling Madurai.

    The saying is, starting the Month of Chittirai till the Aadi Meenakshi rules and from Aavani till Paguni month Swami (Sokkanadhar) rules. Rishi Brungi was a staunch Siva devotee and did not want to worship any other god. Once in Kailas, when Siva and Parvathi were sitting he only worshipped Siva and circumambulate him separately. However Lord Siva wants to show the greatness of Amba, so he sat very close to Ambal. However, the rishi took the form of a beetle and circumambulated Lord Siva. Parvathi got angry and took all the powers of Brungi Rishi. However, the rishi with the power of Siva got a third leg and a walking stick to continue his mission. In order to prove that Siva and Sakthi are equal, Parvathi Devi started doing penance for being half the part of Siva’s body. Due to this, she acquired Lord’s left part of the body. ‘Ardhanaareeswara’ is a form that is made up of both man and woman equally. ‘Artham’ meand ‘half’; ‘Naari’ means ‘woman’; ‘Ardhanaaree’ means Woman merged equally with Iswara. If we worship God in this form it will ensure a couple relationship is stable and united. Tomorrow decorate Meenakshi as ‘Ardhanaareswara’ and worship her for a meaningful life.

    Naivedhiyam: Curd Rice
    Sloka to Recite:
    Mannil Nalla Vannam Vaazhalaam Vaigalum
    Ennil Nalla Gadhikku Yaadhumor Kuraivillai
    Kannil Nalldhoorum Kazhumala Valanagarp
    Pennil Nallaalodum Perunthagai Irundhadhe
    Navaraathiri Naamvali:

    In the times of Navaraathiri, if you don’t have time to tell Ashtothram, Sahasra Namam (Lalitha) can chant the small Naamavali’s below. The Namaavali’s given below are for three Devi’s, 18 each, and are very powerful.

    Sri Durga Devi:
    Om Durgayai Namaha
    Om Maha Kaliyai Namaha
    Om Managalayai Namaha
    Om Ambigayai Namaha
    Om Easwaryai Namaha
    Om Sivayai Namaha
    Om Shamaayai Namaha
    Om Goumaaryai Namaha
    Om Umaayai Namaha
    Om Mahaa Gowryai Namaha
    Om Vaishnavayai Nahama
    Om Dhayayai Namaha
    Om Skanda Maathre Namaha
    Om Jagan Maathre Namaha
    Om Mahisha Mardhinyai Namaha
    Om Simha Vaahinyai Namaha
    Om Maaheswaryai Namaha
    Om Tripuvanaveswaryai Namaha

    Sri Lakshmi Devi:
    Om Maha Lakshmiyai Namaha
    Om Varalakshmiyai Namaha
    Om Indrayai Namaha
    Om Chandravadanaya Namaha
    Om Sundaryai Namaha
    Om Subhayai Namaha
    Om Ramayai Namaha
    Om Prabhayai Namaha
    Om Padmaayai Namaha
    Om Padma Priyaayai Namaha
    Om Padmanabha Priyaayai Namaha
    Om Sarva Mangalaayai Namaha
    Om Peethambara Dhaarinyai Namaha
    Om Amruthayai Namaha
    Om Hiranyai Namaha
    Om Hemamaalinyai Namaha
    Om Subhapradhayai Namaha
    Om Naarayana Priyaayai Namaha

    Sri Saraswathi Devi
    Om Saraswathyai Namaha
    Om Savithriyai Namaha
    Om Sastra Roobinyai Namaha
    Om Swetha Naayai Namaha
    Om Suravandhithaayai Namaha
    Om Varapradhayai Namah
    Om Vaak Deviyai Namaha
    Om Vimalaaya Namaha
    Om Vidhyaayai Namaha
    Om Hamsa Vaahanaya Namaha
    Om Mahaa Balaayai Namah
    Om Pusthagabruthe Namaha
    Om Baashaa Roobinyai Namaha
    Om Akshara Roobinyai Namaha
    Om Kalaadharaayai Namaha
    Om Chitragandhayai Namaha
    Om Bhaarathyai Namaha
    Om Gnana Mudhraayai Namaha

    Ram Ram

  4. Is it that it sadam or pulihora on second day? Namaskarams

Leave a Reply

%d bloggers like this: