Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy Sri Krishna Janmashtami to all devotees. Please find below on what Sri Periyava has said about Sri Krishna Jayanthi in Deivathin Kural Volume 1. RadheKrishna! Ram Ram.
வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், “உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்” என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பட்சம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி பக்க்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.
அவனுடைய பெயரும் கிருஷ்ணன்; ‘கிருஷ்ண’ என்றால் ‘கறுப்பு’ என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு.
இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.
உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலகஉயிர்களுக்கெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்தி குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்.
ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும் ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்களை ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், (நக்னஜித் என்ற ராஜாவின் பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏழு காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, துரௌபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியை அளித்தவன், பீஷ்மருக்கு மாத்திரமல்ல – தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் – இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.
உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும் ஸ்திரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும், இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சனும், கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஓர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர் உல்லாஸ புருஷனின் கேளிக்கைளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.
சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கம் உதித்தது. அதுவேதான் இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக்கொண்டாலும், உள்ள ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.
Categories: Announcements, Deivathin Kural
“பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.
சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கம் உதித்தது. அதுவேதான் இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக்கொண்டாலும், உள்ள ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.”
Who except Maha Periyava will kindly teach us like this? Sri KrishNam Vande Jagadgurum! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
A happy and enlightening Shri Krishna Janmastami to everyone. May Krishna lead us all to the supreme bliss and enlightenment which is the main goal of human life as per our Gurus and scriptures.
For the benefit of non-Tamil followers, can someone translate what Shri Periyava had to say about Janmastami in English?
Jai Shri Krishna
Ram Ram – Please see above – RadheKrishna.
For the benefit of non-Tamil readers
Can you please translate in English?
Thanks in advance
Ram Ram – Here is the translation I put together quickly. Pardon for any typos or mistakes. RadheKrishna.
If we are not fasting in days like Vaikunta Ekadasi, Gokulashtami, Sri Rama NAvami, Maha Sivarathri we are letting ourselves down for being born in Bharatha Desam. Even if our stomach is not full we need to ensure our mind is full. To achieve that goal we need to pray to Bhagawan to make that happen.
In Srimad Bhagawad Gita, Lord Sri Krishna has said Gnani is always in the bright world that cannot be seen my mere mortals. He quotes by saying “When the world is sleeping Gnani is awake”. When there is dark all around we appreciate light during that time. In desert we see some shade and water it gives us immense joy. Lightning amidst dark clouds is very bright. Sri Krishna Paramathama was born in Avani month, Sri Krishna Paksha Ashtami midnight. One year for humans is one day for Devas. Our Uttarayanam of six months is the day time for them and Dakshinayam of 6 months in night time for them. So Krishna Avatara time is night time for Devas also. Same with our Pithru and Pithru lokham. One month for humans is one day for Pithrus (Ancestors). Our sukhla paksham is day time for them. our Krishna Paksham is night time for them. Since Ashtami comes in Krishna Paksham it is mid night time for them as well. Sri Krishna was born in Ashtami midnight. So what does this mean? Sri Krishna Avatara happens to be the mid night time for Humans, Devas, and Pithrus. Darkness was all around. Sri Krishna was born in a dark prison. So everything was dark when the Lord was born.
His name is also Krishnan. ‘Krishna’ means Black (Dark). His complexion is also dark.
Even though he was dark and the surroundings all over the worlds were dark he is Light of Gnana. Like lightning amidst heavy dark clouds he emerged as Light of Gnana from dark. Since he is light of Gnana it is shining bright even today. When there is no Gnanam and darkness the value of enlightenment is much more appreciated. That is how Sri Krishna’s pride is shining. His Bhagawad Gita is chanted all over the world. His mysterious and mischevious acts in Srimad Bhagawatha Puranam stands tall amidst all the Puranas.
Eyes give light to the body. Gnana (Enlightenment) gives light to the soul. For all the souls in the world Lord Krishna is the one who provides the light of Gnana. In Southern India he is not only Krishnan but also called as Kannan. It will immerse both our external and internal eyes in his beautiful charisma. He instills his Gita Amrutham and Venu (Flute Music) Amrutham in our mind and hearts. He is the eye of this world. Amidst darkness he is light.
Sri Krishna in his avatara has performed many leelas and acted. Very mischeivious child, cow herd boy, flute playing artist, enjoyable fan, by killing Chanura and Mushtikan he showed is expertness in wrestling. Taming of seven ox’s to marry Sathyai and showing his prowess, diplomatic expert, messenger, chariot driver, saving people in distress like Draupadi, very graceful in helping people like Kuchelar, giving Mukthi for Bhishmar. Not only for Bhishmar he gave Mukthi to even the hunter who shot arrow to kill him. So many Leelas in his avatar.
In this world there exists Jeevas with different characteristics, good and bad; Brave and Bold, Thief and Womanizer, Lazy and Hard worker, Old and Young, Philanthropist and misanthropist, stupid and smart, stone hearted and kind hearted, spender and miser, Yogi and Gnani all exist in this world. In this a Mahatma cannot impress someone who is completely bad. For a thief another thief’s story will be interesting. For a person who runs after women similar character will impress them. Sri Krishna not only impressed good people but also impressed other characters too by putting on his multi-faceted personality, thief, magician, shrewdness, etc. The Lord impressed many different characters with his various different leelas and ensured he showered his grace and enlightenment on them. Sri Krishna Avataram is Pari Poorna Avataram.
There is a difference of 180 days exactly between Maha Sivarathri and Sri Krishnashtami. In one Gnana came out as Jyothi Linga. On the other even though outwardly everything was dark, in Gnana and Grace it came as Lord Sri Krishna.
Namaskaram Sri Sai Srinivasan!Koti-Koti Dhanyavaadam for translating Sri Mahaperiyavaa’s Tamil text.It is very inspiring and illuminating and you have translated it so quickly.
Wishing you and yours and all our readers -A VERY SHUBHA and JOYOUS GOKULASHTAMI!
RadheKrishna Smt.Vijaya – All Periyava Krupai! Wishing you and your family a very happy Gokulashtami as well. Ram Ram.
aavani Avittam annikum saapdathe nnu solrel. Gokulashtami kku murukku, seeda, Thattai, therattu paaal
adhu idhu nnu neraya neivedyam . Vinayakar chaturthi kku Kozhakattti with poornam (assorted like coconut, Til, ulundhu…etc.) paysam, ellam panrel. Saraswathi poojai. poli, v adai…etc.
Vaayai kattu vayathai kattu nna enna panradu. Veluthu kattardhu eppo….At least permit us
to eat liited to the extent possible and practicable. irukkave irukku Digene instant relief powder. Vedanarayanan Pune.
Ram Ram – Dear Sir, I have not seen Sri Periyava telling us to observe upavasam on Avani Avittam or Vinayaka Chatruthi. Pl. share if you have details. Sri Periyava has mentioned Ekadasi as the mother of all Vrathams. Even in that he has prescribed four levels of fasting starting with Nirjalam all the way down till having tiffin items avoiding rice on that day. Our Sanatana Dharma is prescriptive and does not force any individual to do a particular thing. It is up to the individuals to take it or leave it and observe as much as he can for his Athma Kshemam. On festival days we fast for one or two sessions and partake the neivadhiyam as Bhagawath Prasadam. Sri Periyava has explained it in a few chapters in Deivathin Kural volume 2 under Upavasam section with particular reference to Sri Krishna Jayanthi. I have just copied and pasted the key points from those chapters. Hope this makes you feel better 🙂 RadheKrishna!
ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ தினங்களாகச் சொல்லப்ப்ட்டிருக்கின்றன. ஆனால் சிவராத்திரியில்தான் இதை ஓரளவுக்கு விதிப்படிச் செய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூஜை ராத்ரியில் செய்யப்படுவதால் பலஹாரம் செய்வதாகவும் -இதில் ஏகப்பட்ட பக்ஷண தினுஸுகள் சேர்ந்துவிடும்) நடந்து விடுகிறது.
‘பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து; பழகு வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம் அநுஷ்டி; கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக்கொண்டு ஈஸ்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண யாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படிப் பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.
உடம்பு என்று முழுசாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் லீவ் தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புக்கள் தனியாக வேலை பண்ணிக்கொண்டேயிருக்கின்றனவே! இவற்றில் ஹ்ருதயத்தையும் லங்க்ஸையும் கொஞ்சங்கூட ‘ரெஸ்ட்’ கொடுத்து வைக்க முடியாது. வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் ஸ்தூலமாக வெளியிலிருந்து வஸ்துக்களை வாங்கிக் கொண்டு அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி கெட்டு விடுவதுபோல் ஒரு வேளை மாற்றி இன்னொரு வேளை என்று ஓயாமல் வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டுவிடும். ஆஹாரம்தான் ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான அவயம். அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெய்ட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.
ஆகவே உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய சாஸ்த்ர வசனம்.
பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்கவேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ, ஒருபொழுதோ வைத்திருக்கிறது.
காந்திகூட ஆத்ம சுத்திக்காகவேதான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி பட்டினி கிடந்தார். அந்தச் சமயங்களில் தமக்குப் புத்தியிலே ஒரு தெளிவு ஏற்பட்டதாகவும் மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார்.
அதோடு இப்படிப்பட்ட உபவாஸங்கள் எல்லா ஜனங்களாலும் அநுஷ்டிக்கப்பட்டால் உணவுத் தட்டுப்பாடு என்ற பிரச்னையே வராது.
முதலில் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.
ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் த்யானம் பண்ணுங்கள்; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாஸம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். நான் நிறையச் சொல்வதைவிடப் பிரத்யக்ஷமாகப் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவச்யமும் பெருமையும் விளங்கிவிடும்.
வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தைக் கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.
சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரஸம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்ரமாக, பாராயணமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும்
100 per cent true. Hara Hara sankara ; jaya jaya sankara
All these upavaasam and vrattams are only for Self discipline.Each and every day of our Panchaangam is a special dinam having different upachaarams.Food-neivedyam is ‘energised’ food and that is prasadam and I recall we were only given little amounts.Again implying moderation in eating.
Today we have forgotten to read between the lines and just follow rituals blindly without going deeply.
Life is about spiritual advancement,to become enlightened beings.
Wishing everyone a very SHUBHA GOKULASHTAMI!May we understand and realize the greatest message of Yogesvar Sri Krishna!
Hare Krishna!