Very Important – Never do Upanayanam & Kalyanam in Dakshinayanam!

Periyava_colored_portrait

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Sri Periyava strongly says Upanayanam & Marriage SHOULD NOT be conducted during the six months of Dakshinayanam (Around July 15 Till Jan-15). If upanayanam is done in Dakshiynayam we need to consider doing it again in Uttarayanam (Jan 15 To Around July 15) . Even in Uttarayanam, Sri Periyava has specified a few months that is auspicious. Upanayanam should not be done during Agni Nakshathiram as well (HH Pudhu Periyava told this to Adiyen). If you have any family/friends who are unaware of this but making arrangements to do these Vaitheeka Karmas during this time frame please do let them know this very important message from Sri Periyava.  I saw a few marriage and upanayam invitiations hence this post. Lots of planning, money,time, and effort is spent for these functions so let’s ensure it is done the right way and not against sastras!

A humble request to all Vadhiyar’s who read this post is to make people aware about this and help them make an informed decision. If you do not let us know these important things who else will? Ram Ram.

உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்; அதாவது பிறந்து ஏழு வயஸு இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு lower limit [கீழ் வரம்பு] , பதினாறு வயசு upper limit [உச்ச வரம்பு] என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும்.

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் சொல்லியிருக்கிறது – அதாவது தையிலிருந்து ஆனி முடிய ஸூரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி ‘மாசிப் பூணூல் பாசி படரும்’ என்பதாக மாசி மாஸத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல. இப்போது இவற்றுக்கு எவ்வளவு காலம் கடத்தலாமோ அவ்வளவு ‘டிலே’ செய்துவிட்டு கடைசியிலே மார்கழி மாஸம் ஒன்று தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பண்ணுகிறார்கள்! பலனும் அதற்கேற்ற மாதிரிதான் இருக்கிறது! கலியாணம் என்று ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்களே என்று திருப்திப்பட்டு அதை வேண்டுமானாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதித்தாலும் அநுமதிக்கலாம். (கூடாதுதான். ஆனாலும் தொலைகிறது என்று விடலாம்.) உபநயனத்தை ஒருகாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதிப்பதற்கில்லை. ஏற்கெனவே தக்ஷிணாயனத்தில் உபநயனம் பண்ணியிருந்தால்கூட மறுபடி உத்தராயணத்தில் ஒரு தரும் பண்ணுங்கள் என்றுதான் சொல்வேன். கலியாணம், பூணூல் இரண்டையுமே பணம் சம்பந்தப்பட்ட காரியங்களாக்கி விட்டு இரண்டு செலவும் ஒன்றாகப் போகட்டுமே என்பதால் தங்கள் பெண்களின் கல்யாணத்துக்காகப் பிள்ளையின் பூணூலை தள்ளிப் போடுகிற வழக்கம் அதிகமிருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. அது ‘காம்யோபநயனம்’ எனப்படும். ‘காம்யம்’ என்றால் ‘ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது’ என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யலாம். ஆனால் இம்மாதிரி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு பிறகு உபநயனம் பண்ணுவதே சிலாக்யமாகப் படுகிறது. அதனால் ஏழு வயசு பூர்த்தியாகி எட்டாம் வயசில் பண்ணுவதே போதும். (இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிறபோதுதான் பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் ‘ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது! ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!)

பகவத்பாதாளுக்கு ஐந்தாவது வயதிலேயே உபநயனமானதாகச் சொல்லியிருக்கிறது. பால்யத்திலேயே அலாதி புத்திசாலித்தனமும், தெய்வ பக்தியும் தெரிந்து, வாக்கு ஸ்பஷ்டமுமிருந்தால் இப்படிச் செய்யலாம்.

Source – Deivathin Kural Volume – 2, Brahamacharyam Section – Upanayana Kalam

 



Categories: Deivathin Kural, Upanyasam

Tags:

7 replies

  1. Ram Ram

    There is nothing to establish that “Upanayanam” not to be done in Agni Nakshatram. If anyone has some authentice proof, please provide for everyone’s information

    • Ram Ram – HH Pudhu Periyava told this to Adiyen when I went to HH for blessings and finalizing a date for my son’s upanayanam two years back. The original date was in Agni Nakshathiram and Periyava clearly told Upanayanam should not be done during Agni Nakshathriram. There are a couple of other factors like doing in Sukla Paksham and others based on one’s star. Please check with HH Periyava for clarifications. Hope this helps. Ram Ram.

  2. ப்ரமண குலத்தில் பிறந்து அதன் பெருமையறியாமல், மேலும் குலம், ஆசாரம் ஆகியவற்றை கேலிசெய்யும் சில பல ப்ரமண மக்களை நான் அறிவேன்… அப்போதெல்லாம் மிகவும் வருத்தப்பட்டதுண்டு. மஹா பெரிவா போன்ற மஹான்கள் கூறியும் கேட்காமல் தம்வழியே போன அந்த மூடர்களை பார்த்து வேதனைப்பட்டதுண்டு. இவையேல்லாம் விதியின் வசம் என்று என்னை நானே தேற்றி்க்கொண்டேன். பகவான் அனுக்ரஹம் இருந்தால் தான் இது போன்ற நல்ல விஷயங்கள் காதில் விழும், நற்பாதையை மனம் நாடும். இது போன்ற மூடர்களுக்கும் அந்த மஹா பெரிவா பாதங்களே நல்வழி காட்டவேண்டும். க்ருஷ்ணார்ப்பணம்.

    • உங்கள் கருத்தை 100% ஏற்று கொள்கிறேன் . அதே சமயம் வைதீகம் ஒன்றே இறுதியானது என்று ஏற்காத பிராமணர்கள் இருக்கிறர்கள். வேத மார்க்கம் யோக மார்கத்தை ஏற்றதாக தெரியவில்லை. தற்காலத்தில் இளைஞர்கள் யோகவழி ஈடுபாடு கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

      • யோக மார்க்கம் ஈஸ்வரனை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் வைதீக கர்மங்களை ஏற்கவில்லை .
        சித்தர் பாடல்கள், மற்றும் யோக மார்க்கம் கூறும் வழி முறைகள் வைதிக கர்மங்களை ஏற்கவில்லை

      • தாமதமாய் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.

        ஏற்பதும் ஏற்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், வைதீகம் தவறென்று கூறமுடியாது. கணக்கு புரியாதவன் கணக்கு நம் வாழ்க்கைக்கு தேவையற்றது என்பது போலாகும். வைதீக கர்மாக்களை புரிந்துக்கொண்டு, ஆசரித்து, அதன் பின்பு விமர்சனம் செய்யவேண்டும். இளைஞர்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில் உள்ளவர்கள். அவர்களுக்கு பெற்றோர், குடும்ப பெரியவர்கள் தான் மார்க தர்ஸனமாய் இருக்கவேண்டும். இது போன்ற பெரியவர்களே தவறு செய்யும்போது….. இளைஞர்கள் தவறு செய்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். யோகமார்கம் தவறில்லை… ஆனால் வைதீகம் தவறென கூறலாகாது என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். வேதமார்கம், யோகமார்கம் இரண்டும் இரு நதிகள், சேருகின்ற இடம் பரப்ரம்மம் என்கிற சாகரத்தில்தான்.

        க்ருஷ்ணார்ப்பணம்.

  3. Sowm

Leave a Reply

%d bloggers like this: