Periyava poem by Saanuputhiran

Adhistana_Periyava_Stamp

Whoever did this photo did an outstanding job!

பெரியவா சரணம்.

இன்றைய தினம் அன்பு அன்னை Smt Saraswathi Thyagarajan அவர்கள் மழைவளம் கேட்டு ஒரு குருப்புகழ் எழுதிடப் பணித்தார்கள்.

ஐயனின் அனுக்ரஹத்தில் எந்தன் சிறிய முயற்சி இந்த குருப்புகழ்.

லோககுருவான ஸ்ரீமஹாஸ்வாமிகள் இதனை பிழைபொறுத்தேற்றருள வேண்டி ப்ரார்த்தித்து அவரது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

தீதுந் தொலைந்துவிட
தேற்றித் தழைத்தருள
ஞாலந் திளைக்குமுந்த …. னருளாலே

வானந் திளைத்தருளுஞ்
சாலப் பெருமழையி
னாளுந் தழைக்குமருட் …. பதம்காண

தேம்பித் தவிக்குமன
தாற்றிக் காத்தருளு
ஞானக் குருபரனுங் …. கதிதேடி

ஞாலப் பதர்களென
நாளுந் தொழுதபடி
நேயப் பொருளுமுந்த … னடிபோற்றி

அதித் தூய்இறையு
மாகித் தரணியிதைக்
காக்குஞ் சசிசேகரப் …. பெருமானே!

காலப் பெருவினையுங்
களையுந் திருவருளில்
மாரிப் பெருவளமுந் ….. தருவாயே!

தீதுந் தொலைந்துவிட
தேற்றித் தழைத்தருள
ஞாலந் திளைக்குமுந்த …. னருளாலே

காலப் பெருவினையுங்
களையுந் திருவருளில்
மாரிப் பெருவளமுந் ….. தருவாயே!

அன்பானவர்களே!

நெற்றி வியர்வையை நிலத்தினில் விதைத்து நெல்மணி யுண்டாக்கி நம்மையெல்லாம் வாழவைத்து வரும் ஒவ்வொரு விவசாயியும் மகிழும் வண்ணமாக மழைவளம் தந்து காக்க வேண்டி பரமாத்மாவிடம் உங்கள் யாவரின் சமீபமாகவும் நின்று, உங்களோடு சேர்ந்து ப்ரார்த்திக்கின்றேன்.

குருவருள் குறையகற்றிக் காக்க தொழுதிடுவோம் சசிசேகர சங்கரப் பெருமானை!

பெரியவா கடாக்‌ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.Categories: Bookshelf

Tags:

12 replies

 1. You are such a Blessed Soul, Sanu. Such gift is beyond anyone unless one is blessed by Mahaperiyava. Thanks for the beautiful words on Him. S V Ramakrishnan from Gandhinagar, Adyar.

 2. சாநுபுத்திரன் சதா பெரியவா ஸ்மரணையன்றி வேறறியான்! அவன் என் மகனுக்கு ஈடானவன்! நான் அளித்த மழை வளம் குறித்த திருப்புகழை ஓர் முறை பார்த்தமாத்திரத்திலேயே அவன் இதனை பெரு மழையன்ன சொற்கவியால் பொழிந்து மழையதனை கொண்டு கண்முன் நிறுத்திவிட்டான்! இதற்கு காரணம் என்ன தெரியுமா? இவன் வாக்கு வன்மைக்குக் காரணம் பெரியவா க்ருபை! எப்படி? இவன் தாய் சானு இவனைக் கருவில் சுமந்து நிறை கர்ப்பிணியாக இருந்த சமயம், பெரியவா குடந்தையில் மடத்துத் தெருவில் நகர் வலம் வந்த சமயம், அவன் அன்னை அவரைக் காண வீதிக்கு வந்தாள். ஆனால் அவள் வருமுன் அவர் அவர்கள் வீட்டைக் கடந்துவிட்டார். நமக்குத்தெரியும் ஸ்ரீசரணாள் நடை வேகத்தைப் பற்றி! அவன் தாய் மிக்க வருத்தமுற்று”என்னால் எப்படி வேகமாக வர இயலுமுடியும், உமக்கத் தெரியாதா? ”எனப் ப்ரலாபிக்கவும் அவர் துரிதமாகத் திரும்பி அவர்கள் வீட்டின் வாயிலில் நின்றிருந்த சானு அம்மாவிடம் ஓடி வந்து தன் கையில் இருந்த தாமரை மலரை அவள் தம்வயிற்றின் மேல் வீசி எறிந்தார்! அதன் தாக்கம்தான் இன்றைய சானுபுத்திரனின் கவித்துவத்திற்கும் பக்திக்கும் அன்று அவரால் வித்திடப்பட்டது! எப்படிப்பட்ட பேறு பெற்றவர்கள் தாயும், மகனும் !! சங்கரா சரணம்! எனக்கு இத்தகைய மகனை அளித்தமைக்காக!

  • சர்வேஸ்வரா சரணம்! நம்மையெல்லாம் பெறாமல் பெற்றெடுத்த தூயத் தாயவளாம் அந்த காமாக்ஷியின் கடாக்ஷம் பெறாத ஜீவர்களும் உலகிலுண்டோ! அவரின்றி எவ்வணுவும் அசையுமோ! லோகரக்ஷகனின் அருளால் மட்டுமே நாம் அனைவரும் அவரைத் துதிக்கின்றோம். பரமேஸ்வரனுடன் எப்படி சண்டிகேஸ்வரன் எக்காலமும் ஸ்மரணத்திலே ஒன்றியிருக்கின்றானோ அவ்வாறு நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனிடம் ஒன்றியிருக்கும் நம் கலியுக சண்டிகேஸ்வரனான ஸ்ரீ ப்ரதோஷம் மாமாவை விடவும் பக்தியில் யாரேனும் உயர்வாய் இருக்க இயலுமோ! அந்த சண்டிகேஸ்வரரின் பாதாரவிந்தங்களிலே பணிந்து நம்மிலும் பக்தி திளைத்து, சங்கர காரூண்யம் வெகுவாய் நமக்கெல்லாம் கிட்டி எல்லோரும் ஆனந்தமாக வாழ்ந்து அவரைப் போற்றிட அருள்மழை தந்து காக்கவேண்டி அவர்தம் பாதாரவிந்தங்களில் அனைவருமாக சரண்புகுந்து ப்ரார்த்திப்போம்! பெரியவா சரணம்.

 3. Sollavarthiillainamaskaram

 4. அவரது சரணாரவிந்தங்களை விடவும் வெகுவான சுலபமாக நாம் அடையக்கூடிய பதமும் இவ்வுலகில் வேறேதுமுண்டோ..! தாயுமான தயாபரனிடத்திலே பிரேமை வைத்து விட்டால் போதுமே! ஓடோடி வந்து அனுக்ரஹிப்பாரன்றோ! சங்கரா…!

 5. தேம்பித் தவிக்குமன
  தாற்றிக் காத்தருளு
  ஞானக் குருபரனுங் …. கதிதேடி

 6. Namaskaram to all.

  Excellent poem. By praying to MahaPeriyavaa with this divine poem will definitely please Varuna Bhagavan to have a sustained rain in drought hit areas for days to come.

  Before that…….
  Sanu Anna,
  Your poem is divine DOWNPOUR of bhakthi and Tamil. Guide us always through your bhakthi towards MahaPeriyavaa…..

  MahaPeriyavaa saranagati…..

  • “அவரருளால் அவர் தாள் வணங்கி” என்பர் ஆன்றோர். ஸ்ரீசரணாள் க்ருபையிருந்தால் மட்டுமே அவரை ஸ்மரிக்கவோ, துதிக்கவோ இயலும். லோககுருவின் அனுக்ரஹத்தில் அனைவரும் நலமோடிருக்க பிரார்த்தனை செய்வோம். பெரியவா கடாக்ஷம்

 7. This is need of the hour. Thiruvalluvar praised about rain next to God. Our Mahaperiyava also performed so many miracles to bring the rain even in peak summer. Each and everyone should recite this poem for the well being of our entire world. Thank you Sanuputhiran. Thank you Mrs.Saraswathi Thiyagarajan. Jaya Jaya Sankara, hara Hara Sankara.

  • உண்மை சார். ஸ்ரீமஹாஸ்வாமிகள் க்ருபையில் சென்ற ஆகஸ்டு 15ம் தேதி சென்னை பம்மல் பாலாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில், அவரது அனுக்ரஹத்துடன் ஸ்ரீ வருண ஜபம் மற்றும் ஹோமம் செய்து பிரார்த்தித்தோம். அன்றைய தினம் பூஜை ஆரம்பிக்கும் முன்னராக கோவிலின் வாயிலை அடைத்துக்கொண்டு கிழக்குமுகமாக ஒரு பசு வந்து நின்றது. அனைவரும் ஆனந்தத்துடன் கோமாதாவுக்கு மரியாதை செய்து பிரார்த்தித்துக் கொண்டு ஜப ஹோமத்தினைச் செய்தோம். அன்றைய மாலைப் பொழுதிலிருந்து பற்பல முகனூல் குழுக்களில் பல்வேறு இடங்களிலிருந்தும் அன்பர்கள் மழை பெய்ததாக தெரிவித்தனர். ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தில் நல்லபடியாக அனைவரும் இருக்க எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம். சர்வ நிச்சயமாக அவரது அருள் நம்மைக் காக்கும். அன்றைய தினம் ஹோமத்தினை நடத்திவைத்த வைதிக மஹான் அங்கே கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீவருண ஜப மந்திரத்தினைச் சொல்லித்தந்து அனைவரையும் ஜபிக்கவும் வைத்தார்கள். ஸ்ரீமஹேஷ் அண்ணா அனுமதித்தால் அதன் பதிவினையும் இங்கு வெளியிடுவதன் மூலமாக அனைவருமாக ஜபத்தினை செய்ய ஸ்ரீசரணாள் அனுக்ரஹம் வேண்டி பிரார்த்திக்கின்றேன். பெரியவா கடாக்ஷம்.

Leave a Reply

%d