Periyava on Gho Matha Samrakshanam

Gho Puja
Jaya Jaya Shankara Hara Hara Shankara – Here is a chapter from Periyava on Gho Samrakshanam from Volume 3 of Deivathin Kural. The one’s we saw so far was from Volume 7. Here Periyava elaborates on the significance of Gho Samrakshanam that is equivalent to taking care our Mother; our duty to protect Mother Cow even if Cow Slaughter bill is passed. Ram Ram!

இ ந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போட வேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர்  நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை ” கோ க்ராஸம் ” என்று சொல்லியிருக்கிறது.  இதிலிருந்து தான் இங்கிலீஷில் புல்லுக்கு ”க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இது கூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்?அப்படிப்போடாமல், சிலர் வீடு வீடாகப் போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும் கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய் விடலாம். அதுவும் பண்ண வேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதை விட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இது தான் முக்யமான அம்சம்; அதில் பணமும் உழைப்பும் பேசுவதை விட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.

ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன் தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்ய வேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதை விட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.

ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை. இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கோபாலக்ருஷ்ணன் வாஸம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோமாதா ரக்ஷணத்தில் அலாதிப் பற்று இருக்கிறது!

முன்காலங்களில் ‘ பசு மடம் ‘ என்று வைத்து நம் கிராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் சிரத்தை இழந்து விட்டோம். ஆனால் “பிஞ்சரபோல்”, கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?

கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமிஸ்ஸாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோமாதா ஸம்ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்;அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.

 



Categories: Deivathin Kural, Upanyasam

Tags:

1 reply

  1. English Translation – Kindly pardon for any mistakes. Ram Ram.

    Every Hindu should at least give a handful of grass to one Mother Cow every day. People who have gardens should grow Agathi Keerai. A lot of people did that too. Handful of grass to gho Matha is termed as ‘Gho Grasam’. Probably this is how the English word got derived. Since all the agricultural lands are becoming houses and roads we should grow spinach in our own backyard to feed cows if we have space.

    There is a little bit of effort for the above said. But there is a way with which can do very simply at home. All the vegetable waste that gets cut goes for a waste. Instead of throwing it away volunteers should go and collect this from homes to feed Gho Matha. It has been done in many places as I have been saying this repeatedly. Even now it is happening in many places.

    It is not a great thing putting money in Hundi mechanically. At this rate of inflation we can put some money in Hundi which need to be done as well. More than doing this mechanical act of putting money in Hundi we should consider feeding Mother cow which will gives us a lot of satisfaction when we see her eating it. This is the important aspect of this seva. More than money the Jeeva and Jeevan has to talk to each other.

    When Seva people assemble to make this connection they should ensure relationship is established with the beneficiary (Mother Cow). Isn’t one Iswara has manifested into multiple Jeevas? By showing our love to all these Jeevas we can realize Iswara and this needs to be done as a worship which is the essence of doing seva.

    It is our Dury to protect all the non yielding cows and ensure they are not sent for slaughter. This duty is equivalent to one’s duty towards their own mother. In the creation of Bhagawan Mother Cow gives all her milk after giving to the calf which is equivalent to our Mother.

    Even in Islamic countries like Afganisthan Cow Slaughter was banned in olden times. In our country Britishers pruposefully instigated this hatred in the name of religion. Irrespective of which government, irrespective of which law is passed or not, it is our divine duty to ensure that Gho Matha does not go for slaughter. If this is done Gho Matha will be in peace. We should learn a lot from Gujarati’s and Marwari’s on Gho Samrakshanam. Since Gopalakrishnan was born in that region they have a lot of passion for doing Gho Samrakshanam.

    In olden days we established ‘Pasu Madams’ in villages but lost interest over a period of time. But see the North Indians who run Ghosalas/Pinjarapoles and see how affectionately they are taking care of the cows.

    A ban on cow slaughter can be passed. But if we do not make arrangements for feeding non yielding cows how will they even survive? Gho Matha Samrakshanam is not only a Jeeva Karunya seva but also a big Lakshmi Puja as well.

Leave a Reply

%d bloggers like this: