15. Gho Dhooli Snanam
– Jaya Jaya Shankara Hara Hara Shankara – Periyava vividly explains that anything that touches or involves Gho Matha is very holy. The dust that arises from Mother Cow’s hoof is considered more than a Punniya Theertha Snanam (Holy River Bath). In Srimad Bhagawatham, Lord Sri Krishna rarely takes normal bath but does Gho Dhooli (Gho Matha Hoof Dust) Snanam every day when herding cattle’s. Bhooma Devi also very happily does Gho Dhooli Snanam.The significance of Mother Cow is explained in the form of Gho Matha Kamadhenu in Srimad Ramayanam. Our Aacharya Sri Adi Shankara Bhagawad Padhar has spoken very highly about this. We are all aware Periyava goes to Ghosala at every opportunity and do anushtanams than anywhere else. Let’s consider doing Gho Dhooli Snanam and more importantly participate in Gho Matha Samrakshanam in whatever way we can. Ram Ram!
ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும். ‘சந்தன’ ‘க்ஷீர’ என்ற வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிவதால், அவற்றோடு ‘அபிஷேகம்’ என்று ‘அ’காரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில் ‘அ’காரங்கள் சேர்ந்து ஒரு நெடில் ‘ஆ’காரமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்’ என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன. ‘பால்’ என்கிற வார்த்தை ‘அ’காரத்தில் முடியாமல் ‘ல்’ என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது. அதோடு ‘அபிஷேகம்’ சேரும்போது, ல்+அ என்பது (குறிலான) ‘ல’ ஆகத்தான் வருமாதலால் ‘பாலபிஷேகம்’ என்று தான் ஆகும். தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்’ ஆகுமே தவிர ‘தேனாபிஷேகம்’ இல்லை.
இதே மாதிரிதான் ‘ஷடாக்ஷரம்’ என்பதும் தப்பு. ஷடக்ஷரம் தான் சரி. பஞ்ச + அக்ஷரம் – பஞ்சாக்ஷரம்; அஷ்ட + அக்ஷரம் – அஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட்+அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்…….
கோவின் மலமும் பவித்ரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். ஸாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களிடம் பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே. ஸாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது. புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்யஸ்நானமாக இருக்கிறது! பாலக்ருஷ்ணனே அப்படிப் புழுதியில் திளைத்தாடினான் – ’கோதூளி தூஸரித’னாக இருந்தான் என்று வர்ணித்திருக்கிறது. எப்பொழுதும் அப்படிப் புழுதி படிந்திருப்பதே அவனுக்கு ஒரு ஸௌபாக்ய சோபையை உண்டாக்கிற்று. ‘சச்வத் கோகுர நிர்தூதோத்தத-தூளீ-தூஸர ஸௌபாக்யம்’ – என்று ஆசார்யாளே பாடியிருக்கிறார்.* அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில் திரும்புகிற ஸாயங்காலத்தையே ‘கோதூளி லக்னம்’ என்று விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.
கோமாதா, பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள்.
*கோவிந்தாஷ்டகம், 5
Categories: Deivathin Kural, Samrakshanam
English Translation – Thanks a ton to Kanchi Paramacharya FB Community
15. The Dust rising from the cow’s hoof – Gho Dhooli Snanam
Just as the cow dung is sacred, the dust rising from its hoof is also sacred. Usually, dust from the feet is considered something lowly. But we accept the same with bhakthi from divine personages. The dust from the cow’s feet is also sacred. When the cows return as a herd after grazing they raise a cloud of dust. If we stand at a place where such dust falls on our body, it is said to be a bath which is holier than a bath in holy water. Normally, we take bath to remove the dirt on our body. But here, dust itself becomes holy bath! Young Krishna had immersed himself in such dust. His body being covered all the time with dust enhanced his appearance. Acharya himself has sung: ‘Saswath Gokura Nirdhudhoththadha dhuli dhusara sowbhagyam’. (Govindashtakam). The evening time when the cows return home as a herd raising dust is considered special and is described as ‘Godhuli lagnam’.