Gho Matha Samrakshanam – Gho Matha’s Role In Medical Treatment & Musical Instruments

10. வைத்தியத்திலும் வாத்தியத்திலும்

Lord Krishna With Cow-1

Jaya Jaya Shankara Hara Hara Shankara — If there is one species on earth that is grossly underestimated for its phenomenal service it is none other than Mother Cow. It is very heartening to read Periyava explaining the various facets of mother cow that we fail to observe (or recognize) in our mundane lives. Ram Ram.

இந்த வஸ்துக்களோடு, பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல், உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங்கூட மருந்தாக இருக்கின்றன. முன்னைவிட இப்போது புதிது புதிதாக வியாதிகள் முளைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றில் கட்டி விழுவதை மட்டும் தக்கத் தடுப்பு மருந்துகளால் – preventive medicines என்கிறவற்றால் – நன்றாகக் குறைத்திருக்கிறார்களென்பது தெரிகிறது. கட்டி விழுந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கான மருந்துகளில் கோமூத்ரம் ப்ரதானமான ஸ்தானம் பெற்றிருந்தது.

பஞ்சகவ்யம் மேல் தோலிலிருந்து உள்ளெலும்புவரை நோய்களை நீக்குவதாக வைதிகமான புண்யாஹவாசனத்தில் சொல்லியிருப்பதற்கேற்கவே லௌகிகமான வைத்ய சாஸ்த்ரத்திலும் சொல்லி அப்படியே மருந்தாக அது ப்ரத்யக்ஷ பலன் தருவதையும் பார்க்கிறோம். நம்முடைய ஆயுர்வேத வைத்ய சாஸ்த்ரத்தில் சொல்லியிருப்பதையே மேல் நாட்டாரின் அல்லோபதி மெடிகல் ஸிஸ்டத்திலும் ஆதரித்துச் சொல்கிறார்களென்பது குறிப்பிடத்தக்கது. சர்ம வியாதியான (தோல் நோயான) குஷ்டம் ஸ்வஸ்தமடையப் பால் ஸஹாயம் செய்யும் என்று மேல் நாட்டு வைத்ய நிபுணரொருவர் சொல்லியிருக்கிறார். எலும்பை பலப்படுத்தும் கால்ஷியம் பாலில் இருப்பதும் தெரிந்ததே.

ஆயுர்வேத மருந்துகளில் பலவற்றுக்கு, அவற்றோடு சேர்த்துச் சாப்பிட வேண்டிய ‘அநுபானம்’ என்பதாகப் பாலையே சொல்லியிருக்கிறது. பாலிலிருந்தே பெறுகிற தயிர்-மோர்-வெண்ணெய்-நெய் ஆகியனவும் புஷ்டியைத் தருகிறவையாயும், ஒவ்வொரு வியாதிக்கு மருந்தாகவும் இருப்பவையாகும்.

ஸங்கீதத்திலும் கோ ப்ரயோஜனப்படுகிறது. அடித்துச் சப்தம் எழுப்புகிற மத்தள-பேரிகை போன்ற சர்ம வாத்யங்களில் மாட்டுத் தோல் ப்ரயோஜனமாகிறது. (Periyva explains this more in the next chapter on leather taken from cows should be due to natural death and not by killing which is one of the gravest sins!)



Categories: Deivathin Kural, Samrakshanam

Tags:

1 reply

  1. English Translation – Thanks a ton to Kanchi Paramacharya FB Community

    10. In medical treatment and musical instruments

    Just as in Punyahavachanam, it is said that Panchagavyam cures diseases from the skin to the bone. In Vaidya Sasthra also, it has been so stated and we see that as a medicine, it has a goof effect. It is to be noted that the allopathic system also supports what is said in Ayurvedha, namely, the milk helps in curing the skin disease of leprosy and that it contains calcium which strengthens the bone. In the Ayurvedhic system, many medicines are to be taken along with milk. Curd, buttermilk, butter and ghee also have curative properties.

    The cow is useful even in music also. Leather instruments like mrudangam, drum etc, are made of leather.
    Ram Ram

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading