Poem by Sri Raman Bhaskaran

Thanks to Raman for sending 2 poems and 2 photographs (originally in B&W) and colored using a tool called “Recolored”.

Please share some details about this software – how much it costs etc….I am sure more readers will be benefited by that info…We all can put that to best use!!!

Periyava_colored_portrait

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பிறந்தாய் ஸ்வாமிநாதனாக
வளர்ந்தாய் பீடாதிபதியாக
நடந்தாய் பாரதமெங்குமாக
வாழ்ந்தாய் மானிட தெய்வமாக

காஞ்சியிலே அமர்ந்துகொண்டாய்
கருணைமழை பொழிந்து வந்தாய்
காணவந்தோர் அனைவரையும்
வாஞ்சையினால் நெகிழ வைத்தாய்

எம்மதத்தார் வந்தாலும்
எங்கிருந்து வந்தாலும்
சம்மதத்துடன் சென்றனரே
தம் தெய்வம் கண்டனரே

வந்து வணங்கி நின்றோர்க்கும்
வாழ்வு தேடி அலைந்தோர்க்கும்
மனதில் ஓர் கணம் நினைத்தோர்க்கும்
புண்ணியமே உம் அருள் கிடைத்ததற்கும்

காணவந்து நினையாமல் போனாலும்
நினைத்து காணமுடியாமல் போனாலும்
பரிதவிக்கும் மானிடர் எல்லோர்க்கும்
நின் அருள் வேண்டும் எந்நாளும்

எஞ்சியுள்ள வாழ்நாளிலே
தஞ்சம் உம் திருப்பாதமே
நெஞ்சினில் நின் நாமம் நிலைக்கவே
கெஞ்சி வேண்டினோம் மஹாஸ்வாமியே

Periyava_colored_standing_with_folded_hands

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

காஞ்சிமாநகரின் மங்காத ஒளியே
காமகோடி மட பீடாதிபதியே
சந்திரசேகர இந்திர சரஸ்வதியே
சகலரும் வணங்கிய மஹாஸ்வாமியே

புண்ணிய பூமியே பாரதமாம்
ஆதிசங்கரரே சிவன் அவதாரமாம்
நூற்றாண்டிலே ஓர் உதாரணமாம்
ஸ்வாமிநாத குருவே உம் ஜனனமாம்

பன்னிரண்டில் மாற்றம் கொண்டாயே
எட்டிரண்டில் ஞானம் பெற்றாயே
முப்பத்திரண்டில் சுற்றி வந்தாயே
சதம் கண்டு முக்தி பெற்றாயே

மடமுண்டு வழிமுறைகளுண்டு
தேவைகளை சுருக்கிக்கொண்டு
தன்னையே வருத்திக்கொண்டு
நீர் வாழ்ந்த வாழ்கையுண்டு

தன்னலம் மறந்து விட்டாய்
பொதுநலம் மனதில் கொண்டாய்
இருப்பவர்கள் கொடுக்க சொன்னாய்
இல்லாதவர்கள் துயர் துடைத்தாய்

வாழும் வகை சொன்ன சத்குருவே
வாழ்ந்தே காட்டிய மஹாகுருவே
தாழ் பணிந்தோம் லோககுருவே
என்றும் அருள்வாய் ஸர்வலோககுருவே



Categories: Bookshelf

Tags:

7 replies

  1. The software RECOLORED, was developed by Hakon Bertheussen for the windows platform. I purchased Version 1.1.0 in 2013 for INR 1770 from Bertheussen IT and sold by en e-commerce reseller at http://www.swreg.org. I am overwhelmed by the comments. Even today I am sure that Mahaperiyava will be blessing everyone. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. Very simple and divine songs. Meaning is profound. Thanks a lot for sharing. Maha Periyava Dharshan in real colour is so lifelike. Many thanks. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. I am very much grateful for sending .

  4. These poems are self realizations of Godliness in Sri Mahaa Periyavaa.

  5. Sri Gurubyo Namaha.
    Pranams to the Lotus feet of Parama Guru….Parapara Guru…Parameshti Guru.
    Let Your Blessing Shower the entire Universe like a Sathkotibahnu Surya Prakasha Jyoti with more Good thoughts.

    காணவந்து நினையாமல் போனாலும்
    நினைத்து காணமுடியாமல் போனாலும்
    பரிதவிக்கும் மானிடர் எல்லோர்க்கும்
    நின் அருள் வேண்டும் எந்நாளும்

  6. beautiful lines.

  7. தஞ்சம் உம் திருப்பாதமே
    நெஞ்சினில் நின் நாமம் நிலைக்கவே
    கெஞ்சி வேண்டினோம் மஹாஸ்வாமியே

Leave a Reply

%d bloggers like this: