அன்பே உருவாய் அருளும் கருணைக் கடலே
அஞ்ஞான இருள் நீக்கும் ஜகத்குருவே [1]
நாடி வந்தோர் துயர் தீர்க்கும் தீனதயாளனே
தேடி வந்தோர் இடர் களையும் அருட் ப்ரபாவமே [2]
ப்ரஹ்மானந்த சாகரத்தில் அமிழ்ந்துறையும் அம்ருதவர்ஷினியே
தருமமே பூத உடல் கொண்டு சஞ்சரித்த பூர்ண வஸ்துவே [3]
வாஞ்சையுடன் அருள் மழை பொழியும் காஞ்சிபுர நிவாசனே
காமாக்ஷியாய் கடாக்ஷிக்கும் எங்கள் காமகோடிபீட குருவே [4]
தாயைப்போல அனைவருக்கும் அன்னமிட்ட அமுதசுரபியே
சர்வ மதங்களையும் அரவணைத்த எங்கள் அத்வைதப்ரபுவே [5]
சதுர் வேதங்களையும் ரக்க்ஷித்துக் கொடுத்த நடமாடும் தெய்வமே
பாரம்பரிய கலைகளைக் காத்தருளிய சாஸ்த்ர விற்பன்னரே [6]
கர்மனுஷ்டானங்களின் மஹிமையை உணர்த்திய கர்மயோகியே
சாமான்ய ஜனங்களையும் கடைத்தேற்றிய ஆனந்தவாரிதியே [7]
உன் பாதாரவிந்தமே எங்கள் அரணென்று சரணடைந்தோம்
இனி கவலை எமக்கேதென்று கண்ணீர்மல்க தொழுது நிற்கிறோம் [8]
ஆனந்த் வாசுதேவன் (anand.vasudevan1@gmail.com)
Categories: Bookshelf
excellent
Nice Poem !