சஹஸ்ர காயத்ரீ ஜப யக்ஞம் – 07.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) – ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம், திருவொற்றியூர்

Great effort by the team. Please attend in-person as much as possible. If not, please read the sankalpam and do sahasra gayathri at your home.Thiruvottiyur_Adhishtanam

பெரியவா சரணம்

தலம்: ஸ்ரீ காஞ்சீ காமகோடீ பீடத்தின் 61-வது பீடாதிபதிகளான ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம், திருவொற்றியூர், சென்னை. (அருள்மிகு ஸ்ரீவடிவுடையம்மன் ஆலயம் அருகில்)

நேரம்: காலை 9 மணிக்கு ஸ்ரீபெரியவாளின் அதிஷ்டானத்திற்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளதால், தலத்திற்கு வருகை புரியும் அன்பர்கள் சந்தனம் இழைத்து எடுத்து வந்து ஸ்ரீபெரியவாளுக்கு சார்த்தும் பாக்கியத்தைப் பெறவேணுமாய் வேண்டுகிறேன். குளித்து முடித்து (நாளை முதற்கொண்டும் கூட, தினமும் சிறிதளவாகவும் இழைக்கலாம்) சந்தனக் கல்லியில், சந்தனக்கட்டை கொண்டு, பகவந் நாமாவை பாராயணம் செய்தபடியாக இழைத்து ஒரு கிண்ணத்தில் கொண்டுவரவும். இதன்மூலமாய் நம்மை சுற்றியுள்ள தீயவினைகளின் இயக்கங்களிலிருந்து நம் வாழ்வு விடுபட்டு, சந்தனத்தின் மணம் போலே நம் வாழ்விலும் வளம் மணம் வீசிடும் என்பது சான்றோர் வாக்கு!

ஜுன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை 7-ம் தேதி அன்று சஹஸ்ர காயத்ரீ ஜப யக்ஞம் சென்னை, திருவொற்றியூரில் அருள்மிகு ஸ்ரீ வடிவுடையம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும்படியான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 61-வது பீடாதிபதிகளான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆதிஷ்டானத்தில் நடைபெறுகிறது. வழக்கம்போல் காலை 9 மணிக்கு ஜபயக்ஞம் செய்யவரும் அன்பு உறவுகள் அங்கே வந்துவிடுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.பொதுவாக ஆலயங்களில் ஜபம் செய்வது உத்தமம் என்றாலும், குரு ஆதிஷ்டானத்தில் ஜபம் செய்வது மஹாபுண்ணியமாக கருதபடுகிறது.

இந்த ஸ்தலம் பற்றிய அறிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்த ஸ்ரீமான் வெங்கட்ராமன் மாமாவுக்கு நமஸ்காரம் சொல்லி மேலும் தொடர்கின்றோம்.

சென்ட்ரல் வங்கியில் இருந்து 1991ல் ஓய்வுபெற்ற ஸ்ரீ வெங்கட்ராமன் மாமா, தன் வாழ்க்கையை பயனுடயதாக்க, நம் புது பெரியவா ஸ்ரீ ஸ்ரீ ஜெயெந்திர சரஸ்வதியை அணுக, அவர் ஆக்ஞ்சை மற்றும் அனுக்கிரகத்தின் பேரில் திருவொற்றியூர் ஆதிஷ்டானத்திற்கு சேவை செய்ய 1991-ம் ஆண்டு அனுப்பபட்டார். ஸ்ரீமான் வெங்கட்ராமன் மாமா திருவொற்றியூர் ஆதிஷ்டானத்திற்க்கு முதலில் வந்தபோது புதர்களும், மண்ணும் மண்டிக்கிடக்கும் இடமாக இருந்ததை கண்டு, அதை சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்து நித்யபடி பூஜைகள் கிரமப்படி செய்ய ஆரம்பித்தார். அங்கு இரண்டு குருமார்களின் ஆதிஷ்டானம் இருப்பது குருப்பிடத்தக்கது. 61வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் 55-வது பீடாதிபதிகளான ஸ்ரீஸ்ரீ சந்திரசூடேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோரின் ஆதிஷ்டானங்களாகும். அவர் 1991ல் தொடங்கிய நித்யபடி பூஜைகள் கிரமபடி இரண்டு ஆதிஷ்டானகளிலும் இன்றுவரையிலும்்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஸ்ரீமான் வெங்கட்ராமன் மாமாவுக்கு பிறகு ஸ்ரீமான் நாகராஜ மாமா அவர்கள் இந்த திருப்பணியைத் தொடர்ந்து நடத்திவருகின்றார்கள்.

நமது பெரியவாகுடும்ப உறவான திரு முத்துராமன் (குரோம்பேட்டை) அவர்களது கனவினில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் கட்டளை தந்தபடியாக இந்த ஸ்தலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஸ்ரீமடம் ஸ்ரீ ராமசர்மா அவர்களது உதவியுடன் இந்த அதிஷ்டானத்தினை தற்போது திருப்பணிகள் செய்து ஆராதித்து வரும் ஸ்ரீ நாகராஜ மாமாவின் தயவில் ஸ்ரீவெங்கட்ராம மாமாவின் தொடர்பு கிட்டியது. ஸ்ரீமான் அனைவருக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

Sthala Puranam

61வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ மஹாதேவ்வேந்திர ஸரஸ்வதியின் பூர்வாஸ்ரம திருநாமம் நாராயணா என அறியப்படுகிரது. அவர் 1704 முதல் 1746 வரை பட்டத்தில் இருந்தார். இவரும் நம் மஹாபெரியவா மற்றும் ஆதிசங்கரர், அபிநய சங்கரர் போல் மஹா யோகியாக திகழ்ந்தவர். இவர் பட்டத்தில் இருக்கும் போது சென்னை தம்புசெட்டி தெருவுக்கு விஜயம் செய்தார். அச்சமயம் திரு கிரிஷ்ணப்ப பந்து என்பவரின் புதல்வர் திரு வரலதியாகராயடு தம் இடத்தை இவருக்கு தானமாக் கொடுத்தார். அது தம்புசெட்டி தெரு சங்கரமடமாக தற்போது அழைக்கபடுகிறது. இவரது காலத்தில் காஞ்சி சங்கர மடத்துக்கு அனேக இடங்கள் தானமாக கிடைத்தது. இவர் 31வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ அபிநய சங்கர சரஸ்வதி ஆச்சாரியாள் (காலம் 788-840) வழிதடத்தை பின்பற்றி வாழ்ந்தார். இவர் திருவொற்றியூரில் உள்ள பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சந்திரசூடேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆதிஷ்டானத்த்ற்கு விஜயம் செய்து அந்த ஆதிஷ்டானத்தயும், திருவொற்றியூரையும் மேன்பட செய்தார். ஸ்ரீ காஞ்சி சங்கரமடம் ஸ்ரீ காமாக்ஷி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருப்பதுபோல் திருவொற்றியூர் சங்கரமடத்தை ஸ்ரீ வடிவுடையம்மன் ஆலயத்துக்கு அருகில் அழகாக அமைத்தார். சில காலங்கள் அங்கேயே தங்கியிருந்து இறைபணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, முக்தி அடைந்தார்.

நம் மஹாபெரியவா போலவே மஹாயோகியாக வாழ்ந்த இந்த மஹானின் ஆதிஷ்டானத்தில் ஆடவர்கள் (உபனயனமானவர்கள்) அனைவருமாக ஒருங்கே அமர்ந்து சஹஸ்ர காயத்ரீ ஜபம் செய்தும், பெண்டிர் அனைவரும் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ சௌந்தர்யலஹரீ ஸ்லோக பாராயணம் செய்தும் லோகக்ஷேமத்திற்கான நமது ப்ரார்த்தனையை செவ்வனே செய்யும் பாக்கியம் வேண்டி மஹாகுரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிப்போமாக!

வெளியூரில் இருக்கும் அன்பர்களும், தவிர்க்க முடியாத காரணங்களால் திருத்தலத்துக்கு நேரில் வர இயலாதவர்களும் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே இருந்து இங்கே முன்னமாய் குறிப்பிட்டுள்ள சங்கல்ப மந்திரத்தை உச்சரித்து வேதமாதா காயத்ரீயின் மந்திர ஜபத்தினைச் செய்யவேணுமாய் நமஸ்கரித்து வேண்டுகிறோம். பெண்டிர் அனைவரும் ஸ்ரீசௌந்தர்ய லஹரீ ஸ்லோக பாராயணம் செய்து கலந்து கொண்டு அகில லோகமும் செழித்தோங்க வேண்டும்படியான எங்கள் ப்ரார்த்தனைக்கு பலம் சேர்க்க வேணுமாயும் வேண்டுகிறேன்.

ஸ்ரீசரணாள் அருளியபடியாக பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று வேதமாதா காயத்ரீயின் மந்திரத்தை 1008 முறை ஜபித்து வேதமாதா மற்றும் வேதஸ்வரூபியின் கருணாகடாக்ஷத்திற்கு பாத்திரமாவோம்.

இந்த புணித க்ஷேத்திரத்தில் (திருவொற்றியூர்) சங்கரா காலனியில் உருவாகி கொண்டு வருகின்ற ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ப்ரவசன மண்டபம் குறித்த விவரங்களையும், அந்த மஹத்தான திருப்பணியில் உறவுகள் அனைவரும் பங்குகொள்ளும் வகையிலான ஒரு பகிர்வோடு உங்கள் யாவரையும் விரைவில் தொடர்பு கொள்கிறேன். அந்த பாக்கியத்தையும் நமக்கெல்லாம் ஸ்ரீமஹாஸ்வாமி அருள்வார் என்பது திண்ணம்.

குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்ஷம்

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

சஹஸ்ர காயத்ரீ ஜப சங்கல்பம்:
________________________________

சுக்லாம்பரதரம் + ஓம் பூ: + மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே ஷோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஷதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரத : கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சஹாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்ட்யா: ஸம்வத்ஸரானாம் மத்யே மன்மத நாம சம்வத்ஸரே உத்தராயணே வசந்தருதௌ, ஜ்யேஷ்ட மாஸே கிருஷ்ண பக்க்ஷே பஞ்சம்யாம் சுபதிதௌ வாசர: பாநு வாஸர யுக்தாயாம் ஷ்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண சகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ஞ்சம்யாம் சுப திதௌ சம்வத்சர தோஷாநாம் சமனார்த்தம் மம ஜன்மாப்யாஸாத் ஜன்மப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் மனோ வாக் காயாதி சர்வாங்கானி விரசித பாபானாம் நிவ்ருத்யர்த்தம் ஆத்ம ஸுத்தி ஸித்யர்த்தம் ஸ்ரீ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ சரஸ்வதீ ப்ரேரணயா ஸ்ரீ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ சரஸ்வதீ ப்ரீத்யர்த்தம் லோகக்ஷேம அவாப்யர்த்தம் ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர ஸ்வரூபஸ்ய ஸ்ரீ காஞ்சீ காமகோடீ பீடாதீஷ்வரஸ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸம்யமீந்த்ர குருவர்யஸ்ய ப்ரேரணயா ஆதிபுர க்ஷேத்ரே ஸ்ரீ த்ரிபுரசுந்தரீ சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ ஸ்ரீ பராசக்தி அம்பிகா சமேத ஸ்ரீ த்யாகராஜ சுவாமி சன்னிதௌ ஸ்ரீ காஞ்சி காமகோடீ பீட ஏக சஷ்டிதம ஆசார்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி சம்யமீந்த்ர குருவர்யஸ்ய அதிஷ்டான மூல ப்ருந்தாவன சன்னிதௌ, அஷ்டோத்ர சஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே ||
_____________________________________________________



Categories: Announcements

Tags:

10 replies

  1. Dear Saanu Puthriran sir,

    Is it possible to provide a general syntax of this sahasra gayathri jaba sankalpam. I am living in a remote place. When I get time, I would use the sankalpam to do Sahasra gayathri. Of course, I know to refer panchangam to fit at appropriate places nakshatra, thithi etc.,

    I do not know sanskrit excepting a little knowledge by chanting slogas. You shall send it in tamil or english.
    Can you please help.

    Regards,

  2. பெரியவா சரணம்.

    கலியுகத்து லோக பிதா, நடமாடும் தெய்வம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளின் கடாக்ஷத்தில் சஹஸ்ரகாயத்ரீ ஜபம் சென்னை திருவொற்றியூரில் மஹோன்னதமாக நடந்தேறியது. ஸ்ரீபெரியவாளுக்கு அபிஷேக ஹாரத்தியும் நடைபெற்றது. இது குறித்து விரிவான பதிவினை முகனூலில் (Face Book) Sage of Kanchi யிலும் பகிர்ந்துள்ளேன். திருவொற்றியூரில் நமது காமகோடி பெரியவா 55-வது பீடாதிபதிகளான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ரசூடேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானமும் உள்ளது. இவற்றின் தரிசனங்களையும் ஸ்ரீபெரியவாளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு பகிர்ந்துள்ளேன். மஹேஷ் அண்ணாவுக்கு அந்த தரிசனங்களை அனுப்பி வைத்து, இந்த கோவிலிலும் பகிர்கின்ற பாக்கியம் கிட்டவேண்டி ப்ரார்த்திக்கின்றேன்.

    மேலும் திரு நாகராஜன் மாமாவிடம் பிரதி மாதம் கடைசி ஞாயிறு தோறும் 55-வது பெரியவா சன்னதியில் கணபதி ஹோமம் செய்து பிரசாதத்துடன் ஸ்ரீபெரியவாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யவேண்டி ப்ரார்த்தித்துக் கொண்டுள்ளோம். இது குறித்த விபரங்களையும் விரைவில் பகிர்கிறோம். நாம் அனைவருமாக இந்த சத்கார்யத்தை நடத்தி, சிறுக சிறுக அந்த சன்னதியில் அனைத்து விதமான பூஜைகளும் சிறப்பாக நடக்கும்படியாக செய்யும் பாத்தியதையை ஸ்ரீமஹாஸ்வாமிகள் சர்வ நிச்சயமாக நமக்கு அருள்வார்.

    குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை.

    நமஸ்காரங்களுடன்
    சாணு புத்திரன்.

  3. Krauncha Dweepe
    Ramanaka Varshe
    Shanti Samudra Theere – Kapilaaranya Kshetre (for West Coast)
    Meroho Pschime Paarshve

  4. Dear Mahesh,

    Is there someone who can help to get this sankalpam equivalent for people who live in USA, we can perform this at home by doing proper sankalpam according to USA land.

    Thanks

  5. I have been to this place but we could see only from outside as it was locked. Proper instruction was not kept to reach this divine place. Devotees should do something about this

  6. Can somebody please translate to English
    for non-Tamil readers?

    Thanks in advance

  7. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha PuNyam to chant Sahasra Gayathri on Sunday at AcharyaL Athishtaanam!

  8. Sir,

    By reading the article I presume that Sahasra Gayathrri Yagnam is conducted every Sunday. If it is so it was a great loss to me over the years as I was unaware of it. SanuPuthran sir, can I get the mobile number of Venkatrama Mama.

    MahaPeriyavaa Padham Saranam

    • நமஸ்காரம் ஸ்ரீ ரமேஷ் 🙏💐
      பிரதி மாதம் முதல் ஞாயிறு என்று போட்டிருக்கு பாருங்கோ !
      நன்றி ,
      🙏

  9. Noble service.More more of us should volunteer to serviceslike this

Leave a Reply to VenkatCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading