Gho Matha Samrakshanam – The Cow as Mother

Jaya Jaya Shankara Hara Hara Shankara – On this auspicious day of Sri Maha Periyava Jayanthi I will start posting the importance of Gho Matha Samrakshanam as told by our Periyava in Deivathin Kural Volumes 3 and 7. These are small chapters and Periyava has been forthright on what he wants us to do in this regard. We as ‘Periyava Family’ should read this together and do our best for Gho Matha Samrakshanam, who has been selflessly protecting us for generations!

With a cow

                                                             1. தாயாக விளங்கும் பசு

வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சேர்ந்ததே பசு; அப்படியிருந்தாலும் அது ‘அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து வாய்விட்டுக் குரல் கொடுக்கிறது. ‘அம்மா’ என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பதுதான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரக்ஷை தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்துவிட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆஹாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. ரொம்பவும் வயஸான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் உயிரை நிறுத்திக் கொடுக்கும் உணவாகப் பசு தருகிற பாலே இருக்கிறது. நம்முடைய ஆயுஸின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து ‘கோமாதா’ என்றே சொல்வது.

கோ’ என்றால் ‘பசு’ என்று எல்லோருக்கும் தெரியும். Cow என்ற வார்த்தையும் ‘கோ’விலிருந்து வந்தது தான். டிக்‌ஷனரியிலேயே அப்படித்தான் போட்டிருக்கும்.

அந்த கோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.

அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்.



Categories: Deivathin Kural, Samrakshanam

Tags:

5 replies

  1. Thank you for the post and the people who did the translation.

  2. Beautiful commentary of Sri Mahaperiyavaa.
    Namaskaram and Dhanyavadah for the faultless translation.
    ( you have given the translation even without being asked – once again Thank you! )
    Hope and pray fervently that we the Hindus of Bharatavarsham will re-establish the sanctity and Punyam of GAU SAMRAKSHANAM.

    • Ram Ram – Translation was not done by me but by Kanchi Paramacharya FB community. We should thank them for this. Jaya Jaya Shankara Hara Hara Shankara

      • Rama Rama !
        Sincere apologies for the slip on my part.
        Namaskaram and Dhanyavadah to the Sri Mahaperiyavaa FB community.And to you also for pointing out those who have to be thanked.🙏🏼

  3. English Translation

    1. The Cow as Mother

    The cow belongs to the species which cannot speak. Yet, it cries out from the depth of its being ‘Amma’. The cow that cries out ‘Amma’ is for us like the mother. What is the outstanding quality of the mother? She gives us milk. When we were children, our mother gave us milk and protected us. The cow also gave us milk even at that stage and protected us. Mother giving the milk ended with our childhood. But even after we have become old, the cow continues to give us milk and all the other sathvik products that comes from it namely, curd, buttermilk, ghee. Even in our advanced age, when we can take only little of all other food, the cow’s milk serves as the life giving food. If our mother gives milk only for a short period of our life, the cow gives milk throughout our life. That is why we associate the cow with the greatest of relationships namely mother, and we call it ‘Gho Matha’.

    Everyone knows that the word ‘Gho’ (Sanskrit) means the cow. The word ‘cow’ is also derived from ‘Gho’. From time immemorial, the cow has been considered mother and great love has been shown to her. Even if we look at a cow which is a picture of love and peace we will get the feeling of seeing our mother. The mother who gives birth to the child is called ‘Janaka Matha’. Gho Matha is among other mothers like ‘Bhu Matha’ and ‘Sri Matha’.

Leave a Reply

%d bloggers like this: