Kavadi Chindu on Mahaperiyava by Dr Ganesh, Bruha Balu

Thanks Sri Varagooran Narayanan Mama for this …

காவடி சிந்து.

பாடியவர்கள்;டாக்டர் கணேஷ்,ப்ருகா பாலு
கணேச சர்மா-மற்றும் பலர்.
இயற்றியவர்;கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்.

1) ஆதிசங்கரர் அமர்ந்த குருபீடம்-இது
காஞ்சியம்பதியில் ஒளிர் குருபீடம்-அதில்
ஆதிசிவன் தான் விரும்பி அருள்பீடம்-இது
அகிலம் புகழும் ஜகத்குருபீடம்
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.

2)ஆதவனும் சந்திரனும் உள்ளநாளும்-இது
அண்டமனைத்தவர் தொழும் குருபீடம்-அதில்
மாதவத்தவர் ஒளிரும் உயர்பீடம்-இது
கண்டவர் மனம் கவரும் குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா
.
3) வேதமனைத்தின் பிறந்த அகமாக-இது
ஆதரவு தந்தருளும் குருபீடம்-அதில்
ஓதஉயர் ஞானியர் வாழ் ஒரு பீடம்-இது
பேதபுத்தி தான் அகல அருள் பீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.

4)பல்கலைகள் தான் வளர்க்கும் இடமாக-இது
பார்புகழ்தான் நடக்கும் குருபீடம்-அதில்
நல்லபல துறவியர்கள் வாழ்பீடம்-இது
நல்லவர்கள் தான் வணங்கும் குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.

5)பொய் அனைத்தும் தான் அகல ஒளியாக-இது
பூதலத்தில் தான் விளங்கும் குருபீடம்-அதில்
மெய்தவத்து வேந்தர் பலர் ஆண்டபீடம்-இது
ஆதிமுதல் தான் திகழும் குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.

6) பீடமனைத்தின் தலைமை பீடமாக-இது
ஆன்ம ஒளிதான் பரப்பும் குருபீடம்-அதில்
பாடிபணிய உகந்த குருமனிகள் வாழ்
மேன்மைமிகு காமகோடி குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா



Categories: Audio Content, Krithis

Tags:

17 replies

  1. Hello,

    Maha Periyava Anugraham.

    Can anyone please send me the english lyrics of Maha Periyava Kavadi Chindu.

    Thanks.

  2. https://www.youtube.com/watch?v=6IDoqjqcgjE

    (உடையாளுர் குரலில்)

    காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள்
    காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும் (கா)

    உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம்
    சித்தர்கள் போற்றும்……….குருபீடம்
    கற்றவர் கூடும் …குருபீடம் காஞ்சி
    காமகோடி ஜகத்……………….குருபீடம்

    அத்வைதம் வணங்கும்……குருபீடம்
    தத்துவம் நிறைந்த…………….குருபீடம்
    கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி
    காமகோடி ஜகத் ………குருபீடம்

    தவநிலை வளர்க்கும்…………..குருபீடம்
    தன்னிகரில்லா …..குருபீடம்
    கவலைகள் போக்கும்………….குருபீடம் காஞ்சி
    காமகோடி ஜகத் …….குருபீடம்

    எளிமை நிறைந்த …..குருபீடம்
    யாவரும் வணங்கும்………………குருபீடம்
    கலைகள் வளர்க்கும் குருபீடம் ..காஞ்சி
    காமகோடி ஜகத் ………குருபீடம்

    மடமையைப் போக்கும் குருபீடம்
    திடமான ஞானம் ….குருபீடம்
    நடமாடும் தெய்வம்……………………குருபீடம்..காஞ்சி
    காமகோடி ஜகத் ……குருபீடம்.

    ………………………………………………………………..

    ………………………………………………………………..
    பாடியவர்;ஜே.பி.கீர்த்தனா

    இயற்றியவர்;கணேச சர்மா

    தட்டச்சு;வரகூரான்.
    https://soundcloud.com/user5421160/track-15
    க்ளிக் பண்ணுங்கள்.

    (ஹரிவராசனம் மெட்டு)

    சந்த்ரசேகரா ஸத்குரு ப்ரபோ
    வந்தனம் பல செய்து வாழ்த்தினோம்
    சந்த்ர மௌளியின் மனித வடிவமே
    வந்தருள் புரி வேத நாயகா

    காமகோடியில் வந்த சங்கரா உன்
    நாமம் கோடியாய் பாடி ஆடுவோம்
    பாமரர்களை புனிதமாக்கியே
    தாமதம் செயாது அருள்வாய் குரோ

    ஆதி அந்தமும் அற்ற சம்புவே உன்
    பாதமே கதி என்று நம்பினோம்
    சோதனை செய்ய தருணமோ இது
    ஆதரித்தருள் அம்மையப்பனே

    எங்களின் குறையாவும் மாயவே
    பொங்கும் மங்களம் எங்கும் தங்கவே
    இங்கு காஞ்சியில் கோயில் கொண்ட ஸ்ரீ
    சங்கர குரோ என்றும் வாழியே

    சந்த்ரசேகரா சந்த்ரசேகரா
    சந்த்ரசேகரா சந்த்ரசேகரா
    சந்த்ரசேகரா சந்த்ரசேகரா
    சந்த்ரசேகரா சந்த்ரசேகரா
    …………………………………………………………..
    https://www.youtube.com/watch?v=bjM-wEZyAdc

    (உடையாளுர் குரலில்)

    பரமாசார்யம் சிந்தயேஹம்
    கலாவின் கை வண்ணத்தில் (தட்டச்சு) வரிகள்.
    அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
    காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும்
    காமகோடி ரூப பீடனே – காலமெல்லாம்
    சதா சர்வ காலமெல்லாம் உனைப் பாடுகின்ற
    பாக்கியம் தந்தருளவேண்டும் அய்யா – தவரூப சீலனே
    உன்னை நாடி வந்தோர் துயர் துடைக்கும் நடமாடும் தெய்வமே
    நடமாடும் தெய்வமே தெய்வமே தெய்வமே
    உன்னை நாடிவந்தேன் நான்
    நலம் பல அருள்வாயே –சந்திரசேகரா
    ·
    ப்ரஹ்மணாஜரிஹினேன லோகனுக்ரஹ தீக்ஷையாம் ரூபம் அங்கீக்ருதம் தேன
    ஸ்ரீ காமகோடி காமகோடி காமகோடி காமகோடி காமகோடி காமகோடி…..காமகோடி காமகோடி ஜகத்குரோ காமகோடி….சந்திரசசேகரா சந்திரசசேகரா சந்திரசசேகரா…. சந்திரசசேகரா…சந்திரசசேகரா..சந்திரசசேகரா..சந்திரசசேகரா…….ஹரி:
    பரமாசார்யம் சிந்தயேஹம்
    பரமக்ரிபா நிதிம் பாவன சரிதம் (பரமாசார்யம்)
    பரமேஷ்வர ரூபம் பாலித புவனம்
    நரதேகாஷ்ரயம் நதஜன பாலம் (பரமாசார்யம்)
    சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
    ஆதி சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
    சந்திரசூடமிவ பரம விராஜிதம்
    இந்திரசரஸ்வதி……..விருத்தாங்கித நாமம்
    சாந்த்ரான்ந்தமயம் ஜகத்குரும் (பரமாசார்யம்)
    சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. ஹரி:
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ……………………………………………………………..
    மகாராஜபுரம் சந்தானம் குரலில்

    https://soundcloud.com/anjugam/chandrasekara

    க்ளிக் பண்ணுங்கள்.

    பல்லவி.
    “சந்திரசேகர சரஸ்வதியே சரணம்
    ஸ்ரீ காஞ்சி வாழ் தயாநிதியே
    அனுபல்லவி.
    அந்தரங்கமுடன் உந்தன் அருளைப்பெறவே நான்
    என்ன தவம் செய்தேனோ கருணைக் கடலே.
    சரணம்
    பக்தர்கள் செய்திட்ட பாக்யமாம் பாரில்
    பரம் பொருள் ஆகவே அவதரித்தாய்
    மா தவம்செய்திடும் மாணிக்கமாம்
    ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியை நீ அளித்தாய்
    பந்த பாசம் வென்ற பாலயோகி சங்கர
    விஜயேந்திர சரஸ்வதியை அளித்தாய்
    ……………………………………………………………………………….
    இணைப்புகளின் பகுதி
    YouTube Kanchi Mannagar Pogavendum என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்

    YouTube Kanchi Mannagar Pogavendum
    Udayalur on Paramacharya-Alangudi Radhakalyanam-2009 என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்

    Udayalur on Paramacharya-Alangudi Radhakalyanam-2009

  3. separa54
    May 26, 2015 • 10:27 am அன்று அனுப்பிய பாடல், தமிழில், latha MS UNICODE Font உதவியால் MS WORD Document எழுதப்பட்டது. Copy & paste ச்ர்ய்யும் பொழுது சர்யாக வரவில்லையோ இல்லை இதுதான் அவரது திருவுள்ளமோ அறியேன்
    இப்பொழுது நேரிடையாகவே பதிவு செய்துள்ளேன் அனுபவிக்கவும்

    கதியென அவரிரு கழலினைப் பணிந்திட கருணை செய்வான் இது சத்தியமே
    மெட்டு: தோடகாஷ்டகம் போல
    (“இவள் என் தாய்” என்ற உரிமை அதிகமானாதாலேயே, மதித்து, போற்றி வணங்க வேண்டிய “அம்மாவைக் கூட” ஒருமையில் கூப்பிடுவது இயல்பு. இதே காரணத்தினால் அம்மாவிற்குச் சமமான எந்தன் சற்குருநாதனையும் கூட, ஒருமையில் கூப்பிடுவதில் மதிப்பு குறைவு இல்லை.)

    1. வேதமும், வேதவிளக்கமும், அது சொல்லும் நீதி நெறியின், நிலைக்களனாக, ஆதி சிவனும் அருள் சங்கரனும் சொன்ன, அத்வைத விளக்கம் சற்குருநாதன்! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- ஸ்ருதி (வேதம்) ,ஸ்ம்ருதி (வேதத்தின் விளக்கம்), புராணம் (வேதத்தின் கருத்தை எளிதில் விளக்கும்படியான நீதிநெறிக் கதைகள்) இவற்றின் இருப்பிடமாக விளங்குபவன்.(என் குருநாதன்). முழுமுதற் கடவுளான ஈசனும், அவனது மறுவடிவாக அவதரித்த ஸ்ரீ சங்கரரும் சொன்ன “இரண்டல்ல – ஒன்றே” என்ற அத்வைதத் தத்துவ விளக்கமே எங்கள் சற்குருநாதன். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)

    2. கருணைக்கடலாய்ப் பிறவிக்கடலைக் கடந்திடத் துணை வரும் காஞ்சிமுனி! அருளே தருவான், அவரடி பணிந்திட, ஆத்ம நலன் பெறத் துணையிருப்பான்! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- கரையே தெரியாத இந்த பிறவி எனும் கடலைக் கடக்க, அந்த காஞ்சி முனிவனே கருணை செய்வான் அவனது அருளாலே அவன் தாள் வணங்கிட, நம் ஆன்மா நலம் பெற, செய்ய ஏற்றது இதுவென்று வழிகாட்டி, நமக்குத் துணையாகவும் இருப்பான். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)

    3. அகிலம் மகிழ, ஆத்ம சுகம் பெற, அருள்வான் நிதமெங்கள் காஞ்சிமுனி! பொருளே அறிந்தவர், போற்றும் மெய்ஞானம், புகட்டிட இங்கே வருபவனே! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:-அகில உலகமும் நலம் பெறவும், நம் ஆன்மா சுகம் பெறவும் அருள் செய்பவன் நம் காஞ்சிமுனிவரே. வாழ்வின் பொருளை (பிறப்பின் நோக்கத்தை) நன்கறிந்தவர்கள் போற்றிப் பாடுகின்ற மெய்ஞானத்தை நமக்குச் சொல்லிக் கொடுக்க, நம்மிடையே அவதரித்தவன் நம் குருநாதன். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)
    4. இவனே இறைவன்; எந்தன் தலைவன்; என எண்ணுவதும் ஒரு பெரும் சுகமே! கரையே அறியா, காம அஞ்ஞானக் கடலைக் கடந்திடத் துணை வருபவனே! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- (ஈசுவரனை யாரும் பார்க்கமுடிவதில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்ககடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்துடுகிறது என்றருளினார்கள் ஸ்ரீசரணாள். அதனால்), இவனே எந்தன் இறைவன்; என்னை வழிநடத்துபவன் என்று எண்ணி, (நம்மைக் கடைத்தேற்றும் பொறுப்பையெல்லாம் அவனிடத்து ஒப்படைத்துவிட்டு) (நம்மை அழிக்கும் பல காரணங்கள் என்று பெரியோர்களால் வரிசைப்படுத்தப்பட்ட “காமக் குரோத, லோப, மோஹ, அஹங்காரம்” என்பதில் முதலாவதாக இருப்பதும், பல குற்றச் செயல்களுக்கு முதற்காரணமாக இருப்பதும் “காமம்” என்கிற அளவிட முடியாத ஆசை மற்றும் அதனை அறியாத அஞ்ஞானம் (அறியாமை) எனும் பெரும் கடல்களைக் கடக்க நமக்குத் துணையாக வருபவன். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)

    5. ஆசாரங்களை அனுட்டிப்பவர்க்கே (தன்னை) அறியுமோர் ஆவல் வருகிறதே! அதுவும் அறியா, அறிவிலி எனையும் ஆதரித்தே நித்தம் காத்தருள்வான்! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், அவர்களாக விரும்பி ஏற்றுக் கொண்ட வகையில் அதற்குரிய ஆசாரப்படி (ஒழுக்கத்தின் வழி) நடக்கவேண்டுமென்ற ஆவல் இருந்து அதன்படி நடப்பாரேயானால், அவர்களுக்குத் தங்களை அறிந்து கொள்ளுகின்ற (“நான் யார் என்ற தேடல்) – “ஆத்ம விசாரணை” செய்கின்ற ஆவல், தானே உண்டாகும். ஆனால் ஒழுக்கம் என்ன என்று கூட அறிய விருப்பமில்லாதவனாக,, ஒரு மூடனாக இருக்கும் என்னையும் ஆதரித்து, எனையும் காத்து நிற்பவன் எந்தன் குருநாதன். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)

    6. அருணனைப் போலிங்கே அனைவரும் மகிழ அருள் செய்வான் சற்குருநாதன்! தருணமிதே எந்தன் தாயினைப் போலிங்கே தமியனைக் காக்க வருபவனே! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- எப்படி சூரியன் எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகும்படியும், அதே சமயத்தில் வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமாக தன் வெளிச்சம், வெப்பம் இவற்றை வழங்குகிறானோ அது போல, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்படியாக அருள் செய்பவன் எந்தன் குருநாதன். ஏற்ற காலத்தில், ஒரு தாய் எப்படித் தன் குழந்தையின் தேவையறிந்து தருகிறாளோ அது போல திக்கற்றவனான (தமியன்) என்னையும் காத்திட என் குருநாதன் முன்வருவான். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)

    7. ஈடு இணையிலா குருவே எந்தன் இறைவடிவாம் அவன் பதம் பணிவோம்! வீடு பேறு தரும் விழுமிய சிறப்பின் மனம் வீற்றிருக்கும் காஞ்சிமுனியவரே கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- எந்தன் குருவின் பெருமைக்கு ஈடு இணையெதுவும் சொல்ல இயலாது. அவனே (அந்த தட்சிணாமூர்த்தியாகிய) இறைவனின் மறுவடிவம்.அவன் திருப்பதமலரைப் பணிவோம்.எல்லோரும் விரும்பும் “வீடு பேறு” என்ற “மோட்சத்தை அருளும் சிறப்புடையவன் எனது மனத்தில் குடிகொண்ட காஞ்சிமுனிவன். அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்)

    8. அறியேன் முழுமையாய், அறிவின் திறனை, ஆளும் செல்வமும் அதுவுமிலா, வறியேன்; அவனின்றி வேறோர் கதியும் அறியேன்; எனையும் ஆண்டருள்பவனே! கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வான் இது சத்தியமே! அருள் தந்திடும் அவர் பதமே சரணம்! அருள் சந்திர சேகரமே சரணம்!

    (பொருள்:- நான் எதனையும் முழுமையாக அறியாதவன்; அறிவினால் உண்டாகும் திறமையும் அதனை ஆளுகின்ற சிறப்புடைய செல்வமும் இல்லாதவன் வறுமையில் உழல்பவன் .எனக்கு என் குருநாதனையன்றி வேறோர் கதியில்லை என்னையும் அவனே ஆண்டருள வேண்டும் (என வேண்டுகிறேன்). அவனே கதியென்று அவனது இரு பாதங்களையும் பணிந்திட, அவன் நமக்குக் கருணை செய்வான் என்பது சத்தியம். எனவே அவரது பதமலர்களைச் சரணடைவோம்; (அந்த) அருளாளன் சந்திர சேகரனின் பதமலர்களைச் சரணடைவோம்) (கருத்தாக்கம் – செபரா)

  4. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Thanks for the lyrics of Kavadi Chindu and KiLikkaNNi on Maha Periyava. Thanks to Sri. Varagooran Narayanan for posting these Divine Songs on Maha Periyava composed by Sri. Ganesa Sarma! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  5. அன்புள்ள திரு மகேஷ்
    இதனுடன் இணைக்கப்பட்டுள்ள இரு பாடல்களும் ஜனரஞ்சகமான கர்னாடக
    பாடல்களின் இசையில் இதுவரை அடியேனால் இயற்றப்பட்ட 290
    பாடல்களில் குறிப்பிடத்தக்கவை இந்த வருடம் மகாப்பெரியவா ஜெயந்தியின்
    அன்று சென்னை 92ல் உள்ள நடேச நகர் ஸ்ரீ குரு பாதுகா சமாஜ அன்பர்களால் மாலைக்
    கூட்டுப் பிரார்த்தனையின் பொழுது இசைக்கப்படப்போகிறது ஒன்று தோடகாஷ்டகம்
    அமைப்பிலும் (பொருளும் தரப்பட்டுள்ளது) மற்றது ஸ்ரீ லலிதாம்பிகா தோத்திரம்
    போலவும் இசைக்கப்பட வேண்டியது
    நமது தளத்தில் பிரசுரிக்க வேண்டுகிறேன் விருப்பமுள்ளவர்கள் பாடி அவரது
    அருள் பெறலாம்
    அன்புடன்
    SPR (செபரா)

  6. https://soundcloud.com/varagoorkrishna/07-kilikanni-on-shr

    கிளிக்கண்ணி

    பாடியவர்கள்;டாக்டர் கணேஷ்,ப்ருகா பாலு
    கணேச சர்மா-மற்றும் பலர்.
    இயற்றியவர்;கணேச சர்மா
    தட்டச்சு;வரகூரான். நாராயணன்.

    சம்பு சங்கரனுமாகி சந்திரசேகரனுமாகி காஞ்சியில் வந்தாரடி ..கிளியே

    ஜகத்குரு ஆனாரடி..கிளியே ..
    ஜகத்குரு ஆனாரடி

    ஈடு இணை இல்லா பீடம் காஞ்சி காமகோடி பீடம் (தன்னில்)
    அறுபத்திஎட்டாய் ..கிளியே

    ஆண்டதுவோர் நூறு கண்டார் கிளியே
    ஆண்டதுவோர் நூறு கண்டார்
    அன்னை மகாலக்ஷ்மியும் தந்தை சுப்பிரமணியும்
    செய்த பெரும் தவப்பயனாய் ..கிளியே
    தாரணியில் அவதரித்தார் (கிளியே)

    புண்ணிய ‘ஜய’ வருஷம் வைகாசி அனுஷமத்தில்
    விழுமிய புரமதிலே… கிளியே
    சுவாமிநாதனாய் பிறந்தார் (கிளியே)

    பிஞ்சு பதிமூன்றாம் ஆண்டு குருவருள் கலவையில்
    துறவறம் தானும் கொண்டார் ..கிளியே
    சர்வக்ஞ பீடனும் ஆனார்..கிளியே
    சர்வக்ஞ பீடனும் ஆனார்

    பாதமது தானும் தேய கண்டவர் பிறவி மாய
    காசினியை வளமும் வந்தார் ..கிளியே
    கண்ணுக்கொரு விருந்துமானார் கிளியே
    கண்ணுக்கொரு விருந்துமானார்

    முத்தெனவே வாய்திறந்து அந்த உபதேசம் செய்து
    வையமது அறவழியில் கிளியே
    வையமது அறவழியில் கிளியே
    வாழப்பெரும் வழியும் சொன்னார்
    வந்தவர் வராதவரும் சொந்தமென தானும் கொண்டு
    அள்ளி அள்ளி தானும் சென்றார்..கிளியே
    அள்ளி அள்ளி தானும் சென்றார்..கிளியே

    அருளை அவரிடத்தில்..
    வேதமதும் கீதமதும் நூதன பலகலையும்
    தன்னந்தனி ஓரிடமாய் ..கிளியே
    தன்னந்தனி ஓரிடமாய் ..கிளியே
    பாலர் என இவர் இருந்தார்
    ஆதிஅந்தம் அதுமில்லா ஆனந்த பரம்பொருளாம்
    காஞ்சி மஹா பெரியவரை கிளியே
    என்றும் நெஞ்சில் வழிபடுவோம்..கிளியே
    என்றும் நெஞ்சில் வழிபடுவோம்..கிளியே
    என்றும் நெஞ்சில் வழிபடுவோம்
    என்றும் நெஞ்சில் வழிபடுவோம்

  7. கிளிக்கண்ணியும் இருக்கு. மெயிலில் அனுப்பவா?

  8. Great and Excellent lyrics by Ganesa Sarma, mesmarising voices

    குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா

    Sri Periyava Saranam

  9. Thanks for the upload.குருநாதா……………… குருநாதா……………. சந்த்ரசேகரே………..ந்த்ர ஜகத் குருநாதா. still ringing in ears.

  10. Hello sir,

    Thanks for sharing good kavadi chindu about maha periyava. I have heard in Dr R. Ganesh video in your blog that he is doing renovation for old shiva temples. We would like to donate for that divine services. But I am not able to reach him, please give his phone numbers to reach him. We are going to celebrate upanayanam for my elder son on June 8th. Please bless us.

    Hara hara Shankara jaya jaya Shankara.

    Priya Shankar. Sent from my iPhone

    >

Leave a Reply to balakrishnaniyerCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading