பழமோ தன் சுவை!

Thanks to Smt Saraswathi mami for the article…

அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார்
மரத்திற்கும் அஃதே துணை

என்ற புதிய குறள்.

கோபாலபுரத்தில் எங்கள் வீட்டுக் காம்பௌண்ட்க்குள் ஒரு பெரிய மாமரம் இருந்தது. உருவத்தில்தான் மா (பெரிய) மரமே தவிர, ஒரு பூ, காய் எதுவும் அதிலிருந்து நாங்கள் கண்டதில்லை.

வெட்டிவிடலாம் என நினைத்தபோது, பல வருடங்களாக இருக்கும், நிழல் அளித்துக்கொண்டிருக்கும் மரத்தை வெட்ட மனம் வரவில்லை. பலனே தராத மரத்தை வைத்துக் கொண்டிருப்பதை விட வேறொரு கன்று வாங்கி நடலாம் என எண்ணம் , சின்ன போராட்டம்.

அப்போது 1964 ஆம் வருடம் பெரியவா சென்னைக்கு விஜயம் செய்தார்கள்.

எங்கள் ஏரியாவான கோபலபுரத்துக்கும் விஜயம் தந்தார்கள். எங்கள் பூர்வ புண்ய பலனால் எங்கள் வீட்டில் நாங்கு நாட்கள் தங்கியதுமல்லாமல், அந்த மாமரத்தடியில் தான் வாசம்.

பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய சௌகர்யமாக இருந்தது அந்த மர நிழல்! இயற்கையான சூழல்! பந்தல் போட்டிருந்தால் கூட இவ்வளவு சௌகர்யம் இருந்திருக்காது.

முகாம் முடிந்து , பெரியவா வேறு பகுதிக்கு சென்று
விட்டார்கள். அவரது திருவடிச் சுவடு அம்மரத்தின் கீழிருந்து
மறையவில்லை.

என்ன ஆச்சரியம்! அந்த வருஷம் மரத்தில் மாம்பழக் காலத்தில்
அந்த மாமரத்தில் மரம் நிறைய பூ, வடு, காய், பழம் என
குலுங்கியது மரம் கொள்ளாத அளவுக்கு!

பழமோ தன் சுவை!

எங்கள் தெருவில் அந்தப் பழத்தைச் சுவைக்காதவர்கள் இல்லை.

மாங்காஈ பழுத்ததும் மஹாபெரியவாளுக்கு ஒரு கூடை அர்ப்பணித்து விட்டுத்தான் வினியோகம் செய்யும் பழக்கம் வைத்திருந்தோம்.

எங்கள் தகப்பனார் செல்லமாகப் போற்றிய அந்த மரம் நாற்பது வருடம் கனி ஈன்றது. என் தகப்பனார் மறைவுக்குப் பின் அந்த மரமும் மறைந்து விட்டது.

பெரியவாளின் பாதங்கள் திருப்பாதங்கள் என அறிவோம், ஆனால் உரம் செறிந்த பாதங்கள் என நாங்கள் கண்களால் கண்டவர்கள்.

மேலே சொன்ன குறள் இதற்காகவே இயற்றப்பட்டது!

ஜய ஜய சங்கரா…

தகவல்…என்.சுப்ரமணியம் , பொறியாளர்,சென்னை

கோதண்டராம சர்மாவின் தரிசன அனுபவங்கள்



Categories: Devotee Experiences

4 replies

  1. அவர் திரு சரணங்கள் பட்ட மரம் தளிர்த்து, துளிர்த்து பூத்து, காய்த்து, கனிந்து விட்டது அந்த ஞான பழத்தின் அருளால் அன்றோ

  2. English translation

    Pazhamo than suvai

    “Arathukke anbu saarbu enba ariyaar
    Marathirkkum athe thuNai”

    There was a big mango tree inside the compound of our house in Gopalapuram. Though it was a big tree, we had never seen even one flower or fruit in it.

    We thought of cutting it down but since it had been giving shade for several years, we did not have the heart to cut it down. Instead of keeping a tree which did not give any fruit, we wanted to plant a mango sapling. It was a dilemna for us.

    It was the year 1964. Periyava came to Chennai.

    He also graced our area Gopalapuram by His visit. It was the ‘PuNya’ acquired by us in our previous births that not only did He stay in our house for 4 days, He stayed under that very mango tree.

    The shade given by that tree was extremely useful for the devotees who came for Darshan. The cool natural shade given by that tree was better than anything a Pandal could have provided.

    The camp there came to an end and Periyava left for another place for His camp. Though Periyava left, His influence on that tree did not go away.

    What a miracle ! During the mango season that year, that tree bore plenty of flowers and fruits ! The tree was full of them !

    And the fruits were so tasty !

    There was nobody on our street who did not taste the fruits from that tree.

    We developed a custom to hand over a basket to Periyava first before consuming and distributing the fruits from that tree.

    That tree, which was held in high regard by my father, bore fruits for forty more years. It passed away soon after my father passed away.

    We all know Periyava’s Feet are holy ones but we saw with our own eyes the effect those Feet produced.

    The above mentioned couplet was composed just for this story !

    Jaya Jaya Shankara…

    Information: N Subramaniyam
    Kodandarama Sharma’s Darisana AnubavangaL

  3. This goes to prove that Sri Mahaperiyava is none other than KAMAKSHI. Please compare this incident with the meaning of Soundaryalahari Stotram 85 (given below). Sri Adi Shakara speaks about how the Ashoka Trees (in this case, it is Mango Tree) yearn for the Paada Sparisam (kick by foot) of Ambal. Below is the slokam and meaning: If you find commentary of this slokam in local langauge, please study it and compare to this incident.

    SLOKA NO.85:-
    “Namovaakam Broomo Nayanaramaneeyaaya Padayoho
    Thavaasmai Dwandwaaya Sphutaruchirasaalakthakavathey!
    Asooyathyathyantham Yadabhihananaaya Spruhayathey
    Pashoonaameeshaanaha Pramadavanakankeylitharavey!”

    Literal Results:”Our respectful salutations to Thy feet, a delight to our eyes because of their brilliance arising from the liquid lac dye applied to them! Thy Consort, Pashupathi, desiring to be kicked with those feet, is extremely jealous of the Kankeli tree of Thy pleasure garden, as that tree too is a rival aspirant for such kicks.”
    Mode of worship:Yantra to be made on gold plate or holy ashes. Sit facing South-East. Chant this sloka 1000 times daily for 12 days.
    Archana:Chant Durga Sahasranamam offering eight varieties of flowers.
    Offerings:Cooked rica mixed with soup of vegetables, honey, milk and sweet gruel.
    BENEFICIAL RESULTS:Deiverance from hold of evil spirits, attainment of devotion to Devi.
    Literal Results: Relief from binding situations and people.Ability to bring about quick changes.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading