Thanks to Smt Saraswathi Thyagarajan Mami for typing this…
ஸ்ரீ மஹாபெரியவா செல்லம்மா பாட்டிக்குப் பல சந்தர்ப்பங்களில் அனுக்ரஹம் செய்திருக்கிறார் தான் உபயோகித்த தர்பாசனத்தைக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
பெரியவா சந்த்ரமௌலீஸ்வர பூஜை செய்யும்போது பாட்டியை ப் பாதுகைக்குப் பூஜை செய்யச் சொல்லி ஆக்ஞையிட்டு, பாட்டியின் பக்தியை பலவிதத்தில்
பெருமைப் படுத்தியிருக்கிறார்.
ஒருமுறை கும்பகோணத்தில் பெரியவா முகாம்; பாட்டி ஒரு படித்துறையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கிறாள். மற்றொரு படித்துறைக்கு பெரியவா வருகிறார். தன் உடன் இருந்தவர்களிடம் பாட்டி பெரியவாளை தரிசனம் செய்யாமல் எந்த
ஆகாரமும் சாப்பிடமாட்டேன் என்ற ப்ரதிக்ஞையை முன் வைத்தார். சில நிமிஷங்களில் பெரியவாளின் பார்ஷதர் ஒருவர் பாட்டியை வந்து பெரியவாளிடம்
அழைத்துச் சென்றார்.
பெரியவா பாட்டியின் காதில் விழுகிறாற்போல் இரைந்து பக்கத்திலிருந்தவரிடம் ”என்னை நன்றாக தரிசனம் செய்து கொள்ளச் சொல், விரத பிரதிக்ஞை முடிந்து சாப்பிடச் சொல்” என்று சொன்னாராம்! (எப்படிப்பட்ட பக்தி, எப்படிப்பட்ட அனுக்ரஹம்! இதனை எழுதும்போது கண்கள்
நிறைகின்றன. இதுவல்லவா பக்தி!)
இந்தப் படித்துறையில் பாட்டி நின்று ப்ரதிக்ஞை செய்ததை ஏற்று உடன் அனுக்ரஹம்! மிக நெகிழ வைக்கும் சம்பவம்.
பாட்டி ஒரு முறை ஒரு கிராமத்தில் பெரியவா தரிசனத்திற்குச் சென்றிருந்தார். அவரை தரிசனம் செய்து பேரானந்தம் கொண்டார்.
அப்போது, பெரியவா ”உன்னை சாமல்கோட்டை துரைசாமி ஐயர் சம்சாரம் மடியாக வரச் சொன்னாளா? அவர்களது பிள்ளை செட்டிபெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் போலிருக்கே?” என்று கேட்க பாட்டி அதிர்ந்து போனாள்.
தனக்குப் பரிந்து முன் நடந்த சம்பவத்துக்குத் தனக்காக வருந்திப் பேசியது கேட்டு பாட்டிக்கு தாங்க முடியாத வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஆச்சரியமும், நெகிழ்ச்சியும்
ஏற்பட்டது.
இதுதானா? பாட்டியின் ஸ்வப்னத்தில் வந்து அனுக்ரஹித்ததும் உண்டு.
ஒரு முறை ஸ்ரீமீனாக்ஷி திருக்கல்யாணம் செய்வதாக பாட்டிக்கு ஒரு சொப்பனம். அதில் பாட்டி வந்தவா அனைவருக்கும் காப்ஃபி தரவேண்டுமே என்பது பற்றிக் கவலை படுகிறார். அப்போது பெரியவா, பரமசிவனாக வந்து, ”நீ மீனாக்ஷி அம்மாவாச்சே; நல்ல காஃபி போட்டுக்கொடு என்று கேட்கிறார்” பாட்டியும் போட்டுக் கொடுக்கிறார். வெறும் சொப்பனம் என்றாலும், இது போல் அடிக்கடி ஸ்வப்பனத்தில் வந்து பல உத்தரவுகள், அனுக்ரஹங்கள் செய்ததுண்டு.
Categories: Devotee Experiences
Shall we know more about sri chellamma paati’s dreams regarding Sri Maha Periyava?
Reblogged this on Gr8fullsoul.
English translation
Blessings to Chellamma Paati
Shri MahaPeriyava has given His Anugraham to Chellamma Paati on multiple occasions. HE has given his ‘Dharbaasanam’ to her which totally melted her.
Once, when He was doing Chandramouleeshwarar Pujai, He ordered Paati to perform Paadukai Poojai and thus honoured her devotion.
Once, Periyava was camping in KumbakoNam. Paati was taking her bath on one side of the KumbakoNam tank ghats. Periyava then comes to one of the other ghats at the tank. Periyava spoke to the people where were there with Him about Paati’s vow of not eating anything till taking His Darshan. In a few minutes, one of Periyava’s attendants came and took Paati to Periyava.
Periyava spoke out loud enough for Paati to hear and told His attendants, “Ask her to take my Darshan well, end her vow now and eat” (What a Bhakthi this is ! And what an Anugraham ! My eyes are filling up as I write this. This is Bhakthi !)
Periyava accepted the vow made on the ghats and granted His Anugraham immediately ! Enough to make us all melt !
In a village, Paati had gone to take Periyava’s Darshan. She was in bliss after taking His Darshan.
Then Periyava said to her, “Did Samalkottai Doraisamy Iyer’s wife ask to you come after having purified (‘madi’) yourself ? I hear their son married a Chettiyar girl ?” Paati was taken aback.
Having heard Periyava offer words of consolation for an incident that happened to her, she experienced a mix of emotions – happiness and gratefulness.
That’s not all ! Periyava also come in her dream and gave her His Anugraham.
Once, Paati had a dream as if she was performing Meenakshi ThiruKalyaNam. Paati was worrying about providing coffee to everybody who had come. Then Periyava appeared as Paramashivan and says, “After all, you are Meenakshi Amma; serve them good coffee !” Paati obeys Him. Even though this was just a dream, there have been several occasions where Periyava has appeared in Paati’s dream and given her orders and His Anugrahams