Nellikuppam Family Experience – Part 3

1989_Shankara_Jayanthi_Kanchi

அம்மாவுடன் ஆத்ம விசாரம் செய்யும்போது ஒரு நாள் அம்மா சொன்னாள் ”எனக்கு ஒன்று தோன்றுகிறது நீ சிகை வைத்துக் கொள்ளவேண்டும் என்று பெரியவா நினைக்கிறார். அதலால் நீ சிகை வைத்துக்கொண்டு தரிசனத்துக்குப் போனால் பெரியவா ப்ரஸாதம் உடனே கொடுப்பார்”

நான் சிரித்து விட்டு ”அங்கு வந்த எல்லாருக்கும் சிகை இல்லாதவர்களுக்கெல்லாம் ப்ரஸாதம் கொடுத்தாரே’ நான் மட்டும் என்ன விதி விலக்கு? அப்படியிருக்கும் பக்ஷத்திதில் என்னிடமே அவர் அதைச் சொல்லி இருக்கலாமே!” என்றேன்.

உன்னை ஒரு விசேஷ வ்யக்தியாகக் கருதியிருப்பார்”” ஆத்ம பரிபாகம் செய்யத் துடிக்கும் ஒரு ஜீவனாகக் காண்கிறார்.ஆத்ம பரிபக்குவத்துக்கு சிகையும், கச்சமும் அவசியம் . அப்படி நீ மாறினால் உனக்கு பரிபக்குவம் ஏற்பட்டு பூர்ணத்வம் உண்டாகும் என்பது அவர் சங்கல்பம் ”என்றாள்.

”இதெல்லாம் இந்தக் காலத்து நடை முறைக்கு ஒவ்வாதது; பகவானுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒருவரும் அறியக்கூடாது. நான் எப்படியும் நற்கதி அடைந்து விடுவேன்’ என்று நான் சொன்னேன்.

அம்மா அதற்கு உனக்கு கிடைக்க வேண்டிய ஆத்ம லாபங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. பெரியவாள் என் மனதில் புகுந்து சொல்லச் சொன்னதை நான் சொன்னேன்” என்று முடித்தாள்.

இப்படி அம்மா மேன் மேல் சொல்ல எனக்கு நம்பிக்கை வந்து என் மனைவியைக் காட்டி”இவளுக்குப் புறத்தொற்ற மாறுதலில் சம்மதமா என்று தெரியணும்” என்று சொன்னவுடன் என் மனைவியும் உடனே அதற்கு சம்மதம் தெரிவிக்க, நான் ஒரு நல்ல நாள் பார்த்து சிகை வைத்துக் கொள்ள தீர்மானித்தேன்.

பெரியவா அந்த சமயம் காளஹ்ஸ்தி காம்பில் இருந்ததால் , திருப்பதி சென்று 4-7-1966 அன்று சிகை வைத்துக் கொண்டு ஜீயர் ஸ்வாமிகளுடன் பெருமாள் தரிசனம் செய்து, காளஹஸ்தியை நோக்கிப் புறப்பட்டேன். கோவில் சமீபத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் பசுமடத்தில் பெரியவா தங்கியிருந்தார்.

நாங்கள் இருவரும் காலை எட்டுமணிக்கு மடத்திற்குப் போய் சேர்ந்தோம். அங்கு பார்ஷதர் எங்களை புதுப் பெரியபெரியவா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். ”நெல்லிக்குப்பம் தம்பதிகளா, பெரியவாளை தரிசனம் செய்தாயிற்றா?”

”இல்லை, இப்போதுதான் வரோம்”. சீக்கிரம் போய் தரிசனம் செய்யுங்கோ”.

நாங்கள் உள்ளே சென்றோம்; பார்ஷதர் வெளியே வந்து ”பெரியவா உத்தரவு ஆறது, அந்த அறையில் இருக்கார்.”என்றார்.

அறையின் வாசற்படி அருகே நின்றோம்; அறை மிகச் சிறியது, வெளிச்சமும் கம்மி, பெரியவா அமர்ந்திருந்தது தெரிந்தது. அவருடைய வெண்பற்கள் ப்ரகாசித்தன; கண்கள் மலர்ந்து ஒளி வீசின ;பார்வையில் குள்மையும் வாத்சல்யமும் எங்கள் மனதை குளிரச் செய்தன. எங்கள் மனம் நெகிழ்ந்தது.

ஜகத்குருவின் குரல் கம்பீரமாக கணீரென ஒலித்தது! ”உள்ளே ரெண்டுபேரும் வாங்கோ! இந்தப் பக்கம் பார்த்து, செர்ந்து நமஸ்காரம் பண்ணுங்கோ!” என்று சொல்லி கியால் சமிக்ஞை செய்தார். அவர் எதிரில் இருந்த ஸ்டூலில் ஒரு மரத் தட்டில் த்ராக்ஷை, குங்குமம், மந்த்ராக்ஷதை எல்லாவற்றையும் தொட்டு ஆசிர்வதித்து எங்களை புன்முறவலுடன் கடாக்ஷித்தார்.

இருவரும் சேர்ந்து நமஸ்கரித்தோம்.

”இரண்டுபேரும் சேர்ந்தே எடுத்துங்கோங்கோ” என்றார். ”இப்பதான் நீ வைஷ்ணவணா ஆயிருக்கே ” என்று சொல்லி பரம சந்தோஷம் அடைந்தார்.

”திருப்பதி வந்து வெங்கடேஸ்வரை தரிசித்து இங்கு பெரியவா தரிசனத்துக்கு வந்தோம்” என்றேன்.

”அம்மா சொன்னாளா? அம்மா தானே உங்களுக்கு ஜீவ நாடி ”என்றார்.

கேள்வியிலேயே பதில் இருந்ததால் ”ஆம்” என்று மட்டும் சொன்னேன்.

”அம்மா பகவத் குணம் நிறைய சொல்வாளே?”

விழுப்புரத்தில் பெரியவா தரிசனம் ஆனதிலிருந்து மூணு மாசமா அம்ம தினம் வந்து இரவில் பகவத் குணம் சொல்கிறார்” என்றேன்.

நடராஜா இவாளைக் கொண்டு ஸ்வாமிமலை அம்மாவிடம் விட்டு விட்டு வா நன்னா கவனிச்சுக்கச் சொல்” என்றார். எத்தனை நாள் லீவு?”

”ஒரு வாரம்”

ஸ்ரீ மஹாபெரியவாளின் க்ருபையையும் வாத்ஸலயத்தையும் என்னவென்பேன்? மூன்று மாதகாலமாக என்னிடம் பாராமுகமாக இருந்தவர், ப்ரஸாதம் தராமல் இருந்தவர், என்னைப்பற்றி தான் செய்திருந்த சங்கல்பத்தை அம்மா மூலமாக நிறைவேற்றிக் கொண்டவர் அடைந்த ஆனந்தத்தை நான் எப்படி வார்த்தைகளால் சொல்வேன்? அத்வைத சன்னியாசியான இவருக்கு என்னால் ஆகவேண்டிய காரியம் என்ன? அடுத்தடுத்து ஏற்பட்ட அனுபவங்கள் அதனை எங்களுக்கு விளக்கிற்று!!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா…..

இதுவும் ஸ்ரீ நிவாசன் ஆண்டாள் தம்பதியினரின் அனுபவத்தொடர்ச்சிதான்!!Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. Shri SL Chandrasekaran had the blessings of staying with Shri Maha Periyava sometime in 1960s-70s, which happened all of a sudden. Prior to that he was an ordinary Catering Technology Trainee. He had many intimate experience with Maha periyavaa. One day he asked Him ” Can I keep shikai (Kudumi)” to which the Sage told “you have many works to do, you go back”. He got a job in Lucas Indian Service posted in Guwahati. I lived with him in 70s and also some later part . Finally he gave up his job and joined the office of Raja Veda Kavya Patasalai (Under late Sharmaji) Kumbhakonam , wearing Pancha-kacham & Shikhai. His son Sundara Raman studied in the Patasala and was teacher to many students there. Now he is doing vaidheekam in Kumbhakonam. (A suitable alliance is needed for this brahmachari). Shri Chandrasekaran’s daughter completed B.Tech & is pursuing further studies in Kumbhakonam.

  2. A single thought of Sri Periyava in our mind with total surrender to Him with pure devotion will surely take us to new height of Peace and Glory. Hara Hara Sankara Jaya Jaya Sankara. ” Vishnu Bakthas and Siva Bhakthas are his two eyes and he never view any difference in them. Hara Hara Sankara Jaya Jaya SAnkara. Kanchi Sankara Kamakoti Sankara.

  3. The mystery is resolved! MahaPeriyava wanted this VaishNava devotee to have Shikai and Willed it through ‘Amma’! Once done, abundant Grace Flows and Total Blessings are there! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  4. Sri Periyavaa has written extensively on the importance of “Shikai” and “Pancha-kachcham” in his Deivaththin Kural. In fact he has written it is a misconception that only Grahastaas should sport these two, on the contrary, Brahmachchaaris should also wear Kudumi and Panchakachcham.

    Having read that, yet, I continued with my usual cropped hair-style. The reason could be that there was not much hair be left on my bald pate which would enable me have a decent Kudumi.

    When I started performing my beloved father’s last rites beginning May 2012, one fine day, it occurred to me why not try having a Kudumi with whatever is left on my head! I told this to Sri Periyavaa maanaseekam, and ended up with a tuft on my head the very same day. It is about three years since my beloved progenitor attained Sivalokam. It is three years since I have my tuft in place. It has grown into a “decent” one [I mean good looking one] in these three years. Of course, ever since, I also gave up the practice of entering a Temple with trousers and shirt and later changing into Panchakachcham & angavastram. Now, all religious/spiritual purposes I dress ONLY in these two, and it is only while attending secular functions I get back into my formals!

    My better half, my beloved sahadharmini, tells me that I have immense patience in that I change into Panchakachcham & angavastram and my lowers or bermudas thrice a day! I find it very satisfying, and Sri Periyavaa always approves it with a smile and a sabaash! Well. What more can I expect?

Leave a Reply

%d bloggers like this: