Nellikuppam Family Experience – Part 2


MahaPeriyava-walking

நெல்லிக்குப்பம் வெங்கடேசன் ஆண்டாள் தம்பதியினர் அனுபவம் கணக்கிலடங்காதது. கொடுத்துவைத்த தம்பதியினர். நேற்றைய தொடர்ச்சி!

மறு நாள் நித்யானுஷ்டானத்துக்குப் பிறகு ஆஃபீஸ் சென்றேன். முதல் காரியமாக மணி, சுப்பு சாரைப்  பார்க்கச் சென்றேன். முதல் நாள் பெரியவா தரிசனம் பற்றியும், அவர் எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கிவிட்டு, எங்களுக்கு அருளாசியுடன் அனுப்பி வைத்த்தையும் சொன்னேன். அவர்கள் இருவரும் நாங்கள் பெரியவா தரிசனம்
செய்ததையும், எங்களுக்கு அருளாசி கிடைத்தது பற்றியும் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
மணி இந்த விவரங்களை அம்மாவிடம் சொல்ல அவர் எங்கள் அகத்துக்கு வந்து முழு விவரம் சொல்லச் சொல்லி, மனம் உருகி, கண்ணீர் பெருக்கினார்கள்.

ஸ்ரீபெரியவாள் சித்த புருஷர் என்பதைத் தன் சொந்த அனுபவத்தால் தெரிந்து கொண்டதையும் ரஹஸ்யமாகச் சொன்னாள். நாங்கள் பரிபூர்ணமாக நம்பியதால் எங்களுக்கு சில ஆத்மானுபவங்கள் ப்ரப்தியாயிற்று. ஸ்ரீ ஆசார்யாள் ஸங்கல்பப்படி, அம்மா தினம் எங்கள் அகத்துக்கு வந்து ஆத்ம விசாரம் செய்து எங்களுக்கும் ஆஅத்ம பரிபக்குவம் ஏற்பட ஸத்சங்கமாக இருந்தாள்.

”அம்மா உள்ளத்தால் ஒரு சன்னியாசி. அம்மா உள்ளத்திலேயே பகவத் சிந்தனமும்,மந்த்ர ஜபமும் செய்து கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது. அம்மாவுக்கு எண்பது வயசுக்கு மேல் ஆகியிருந்தது. ஸ்ரீ பெரியவாள் சொல்லி ஆத்மஞானம் பெற்ற அவர்களை ‘அம்மா’வாக அடைந்தோம். லலிதாம்பாள் என்கிற அந்த அம்மா எங்களிடம் வாத்ஸல்யத்தைக் காட்டினாள்.

முதல் சந்திப்பில் எங்கள் சம்பாஷணை நடு இரவு வரை நீடித்தது. பிறகு தினம் அம்மா இரவு ஏழு மணி அளவில் வந்து வேதாந்தம், பக்தி இவற்றைப் பற்றி விமரிசையாக
எங்களுக்குக் கூறுவாள். ஏதோ ஓர் ஆத்ம சக்தி உத்க்ருஷ்டமான பர்வச நிலையை பரஸ்பரம் அனுபவிக்கச் செய்தது.

அம்மா பல முறை ராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதை ,விஷ்ணு புராணம், தேவி மாஹத்மியம் பாராயணம் செய்தவள்.

பெரியவாளை சிறுமியாக இருந்ததிலிருந்து அப்போது வரை அவரிடம் ஏற்பட்ட அனுபவங்களை விஸ்தாரமாக எங்களிடம் சொல்வாள்.

பெரியவா ஆத்மவிசாரத்தில் உள்ள வ்யக்திகளை அவர்கள் எங்கிருந்தாலும் நாடி யாத்ரை என்கிற வ்யாஜ்யத்தில் யாரும்  அறியாமல் தன் யோக பலத்தால் ஆகர்ஷித்து, பக்குவப்படுத்தி, பிறகு யாத்திரையைத் தொடர்வார் என்று இது போன்ற பல
விஷயங்களை சொல்லியிருக்கிறாள். நான் ஆர்வ மிகுதியால் எழுதி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டதற்கு அம்மா இசையவில்லை. உங்களுக்கு மட்டுமே சொல்ல எனக்குப் பெரியவா உத்தரவு ஆயிருக்கு அதனால்தான் தடங்கலில்லாமல் நான் என் அனுபவங்களைச் சொன்னேன்.மணிக்கோ, சுப்புவுக்கோ கூட நான் சொல்லவில்லை;
நீங்கள் தகுந்த அதிகாரியாக இருப்பதால் ஸ்ரீபெரியவா சங்கல்பப்படி சொல்கிறேன். என்றாள்.

மஹான்களின் தபோபலத்தால் அவர்களைச் சுற்றி ‘ஆத்மசக்தி அதிர்வலைகள் SPIRITUAL WAVELVIBRATION ஏற்படுகின்றன. அவை சூழ்ந்துள்ள நெருக்கமான அளவுக்குள் இருக்கும் சாமான்ய ,ஸம்சாரிக விழயங்களில் ஊறியவர்களுக்கும் அவைகளின் ஆன்மீக சக்தி தூண்டப்படுகிறது. நாம் அந்த இடத்தை விட்டு அகன்றால் ஸ்வாபாவிகத் தன்மை திரும்ப வந்துவிடும்.

ஆனால்தேன் இரும்பு போன்ற ஜீவனகள் இதே அனுவம் அடையும்போது அதிக அளவு காந்த சக்தி தூண்டப்பட்டு, ஆத்மீக சக்தியைத் தன்னுள்ளே தேக்கி வைத்துக் கொள்கிறது. இந்த விஷயம் அனுபவசாத்யமானது.

எங்கள் மூவருக்கிடையே எப்படி இந்த சித்தாந்தம் பொருந்துகிறது!

ஸ்ரீ பெரியவா மிகப் பெரிய காந்தம்; அதனால் தூண்டப்பட்ட ஆத்ம சக்தியைத் தன்னுள் தேக்கிவைத்துக் கொண்ட வ்யக்தி அம்மா! ஸ்ரீ அம்மாவின் காந்த அலைகள்னிரந்தரமாக எங்கள்  ஆத்மாக்களில் தங்கி, இயங்கிவருகின்ரன.

எங்களுக்குமட்டும் பெரியவா ப்ரஸாதம் கொடுக்கதது பற்றி அம்மாவிடம் கேட்டோம்.”அதான் எனக்கும் புரியவில்லை” என்றாள். ”நீங்கதான் ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்குப் பாகப்போகிறீர்களே’ அப்போ பார்க்கலாம் ”என்றாள்.

அவ்வாறே ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்குச் சென்றோம். அவரை வந்தனம் செய்தோம்; கூர்ந்து பார்த்துவிட்டு மௌனமாக இருந்தார். அன்றும் மற்ற எல்லாருக்கும் ப்ரசாதம் வழங்கிவிட்டு எங்களுக்கு வழங்கவில்லை.மடத்தில் காலை முதல் இரவு வரை தங்கி,
அவர் போகும் இடமெல்லாம் போய் நின்றும் வணங்கியும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம். அம்மாவிடம் எங்கள் தாபத்தைப் பகிர்ந்து கொண்டோம். அவளும் தீவிர யோஜனைக்குப் பிறகு”பின்னால் சொல்றேன்”
என்று சொல்லிவிட்டாள்.

பெரியவா யாத்திரை மேற்கொண்டு கடலூர் மஞ்சக் குப்பம் என்ற இடத்தில் ஒரு ஸ்கூலில் தங்கினார்.எனக்கு அருகாமையில் இருந்ததால் அந்த ஒருவாரமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் நாங்கள் பொய் சேவித்து நிற்போம்.

ஸ்ரீபெரியவாள் எங்களைப் பார்ப்பதும், மற்றவருக்கு குங்கும ப்ரஸாதம் வழங்குவதுமாக இருந்தார். மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தும் எங்களுக்கு மட்டும் ப்ரசாதம் வழங்கவில்லை .
பின் அம்மா குடும்பத்தாருடன் சேர்ந்து சேவித்தோம்.எங்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு மட்டும் வழங்கினார். அவர்களுடன் சம்பாஷித்து கை அசைத்து ஆசி கூறினார். அம்மாவுக்கும் ஆச்சரியம். அம்மாவும் ஸ்ரீ நிவாசன் ஆண்டாள் தம்பதியினர் என்று சொல்லியும்  அடுத்த முறையும் இதுவே நிகழ்ந்தது. பெரியவா மௌனமாக இருந்து
கடாக்ஷித்துவிட்டு சிறுது நேரம் கண்ணைமூடி இருந்து விட்டு மேனாவுக்குள்
போய்விட்டார்.

மறு நாள் யாத்ரை துவக்கம் ;மேனாவுடன் நானும் பித்தன் போல் ஓடினேன்;கை தீவட்டி ஒளியில் பெரியவாள் மௌனமாகக் காக்ஷி அளித்தார்.ஊர் எல்லையை அடைந்ததும் மேனா நின்றது. ஸ்ரீபெரியவாள் கையை உயர்த்திஆசீர்வதித்துவிட்டபின் மேனா மூடிக்கொண்டது. வெறித்துப்போய் தனித்து நின்றவன்” அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்” என்று நினைத்து துக்கம் தாளாமல் மெதுவாகத் திரும்பி வந்தேன்.

விஷயம் கேள்விப்பட்ட அம்மா ”பெரியவா லீலா வினோதங்கள் நம் போன்ற சாமானியருக்குப் புரியாது, என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்” என்றாள்.

நாளையும் பார்க்கலாம் மேலே அவர்கள் அனுபவத்தை!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா..Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Nice experiences. Some spelling mistakes are there, which changes the meaning. May be corrected. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.

  2. Very unique but frustrating for the devotee! What Maha Periyava has in His Mind, who can fathom! I am sure that abundant Blessings will be showered on this pious couple at a later date! More information if given on this saintly Amma “Lalithaambal” will be nice! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: