ஜகத்குருவின் கீதோபதேசம் / Jagadguru’s Geetopadesam

MahaPeriava_talking_in_mic_bn_drawing

Thanks Sri BN mama for drawing, English and Tamil article….

ஜகத்குருவின்  கீதோபதேசம்.

சிறு  பிராயத்திலிருந்து  இயல்பாகவே  நட்புள்ளத்துடன்  இருந்த   ஸ்ரீசரணர்  பதின்மூன்றாம்  ஆண்டில்  குருபீடம்  ஏறியபின்  பெற்ற  வித்யாப்யாஸத்தில்  இந்த  மைத்ரீ  தபஸில்  அவருக்கு  ஒரு  வெளித்தூண்டுதலும்  கிடைத்தது  பற்றி  ஒரு  நாள்  கூறினர்.  (‘தமது  மைத்ரீ  தபஸில்  தூண்டுதல்’  என்றெல்லாம்  அந்த  அடக்கப்  பெட்டகம்  கூறுமா  என்ன ?  அவர்  கூறியதிலிருந்து  நாமேதான்  அப்படி  விளங்கிக்  கொள்கிறோம்.)

குழந்தை  ஸ்வாமியின்  வித்யாப்யாஸத்தில்  தெய்வீக  பாலர்களான  ப்ரஹ்லாதன்,  த்ருவன்,  மார்க்கண்டேயர்  போன்றோரின்  கதைகள்  விசேஷமாக  போதிக்கப்  பட்டனவாம்.  மூலமான்  புராண  விருத்தாந்தங்களையே  அர்த்தம்  சொல்லி  போதித்தனராம்.  புராண  ஞானம்,  ஸம்ஸ்க்ருத  ஞானம்,  நன்னெறி  மூன்றையும்  வளர்த்துக்  கொடுக்கும்  விதத்தில்  அப்போதனை  இருந்ததாம்.  (இதற்குச்  சிறிது  பின்னர்  அந்தப்  பாலப்பெரியவர்  தாமாகவே  விரும்பி,  ‘பெரிய  புராணம்’,  ‘உபமன்யு  பக்தி  விலாஸம்’  இவற்றின்  வாயிலாகத்  திருஞானஸம்பந்தர்  வரலாறும்  படித்தாராம்).

த்ருவ  சரித்திரமும், ப்ரஹ்லாத  சரித்திரமும்  ஸ்ரீமத்  பாகவதத்திலிருந்து  மட்டுமில்லாமல்  விஷ்ணு  புராணத்திலிருந்தும்  போதிக்கப்  பட்டனவாம்.  விஷ்ணுபுராணத்தில்  ப்ரஹ்லாதன்  கதையில்  வரும்  ஒன்றுதான்  பாலஸ்வாமியின்  மனத்தில்  ஆழப்  பதிந்து  மைத்ரீ  தவத்தில்  வலிவூட்டியது.

ப்ரஹ்லாதனைக்  கொல்லவேண்டுமென்று  தந்தை  ஹிரண்யகசிபு  அவனுக்கு  விஷம்  கொடுக்கச்  செய்கிறான்,  மலையிலிருந்து  உருட்டச்  செய்கிறான்,  மத்த  கஜத்தால்  மிதிக்கச்  செய்கிறான்.  பரமனின்  அந்த  அன்புக்  குழந்தையை  இவை  எதுவும்  பாதிக்கவேயில்லை.  அதன்பின்  ஹிரண்யன்  தன்  புரோஹிதர்களை  அழைத்து,  மகனை  அழிப்பதற்காக  ஆபிசார  வேள்வி  செய்யுமாறு  ஆணையிடுகிறான்.  அவர்கள்  அவ்வாறே  செய்கின்றனர்.  ஹோமத்தீயிலிருந்து  க்ருத்யா  என்ற  பூதம்  எழும்புகிறது.

ஆனால் ?  அது  ப்ரஹ்லாதனைத்  தாக்குவதற்குப்  பதில்  அப்  புரோஹிதர்களையே  தாக்கி  வதம்  செய்கிறது !

நட்புப்பாங்கே  உருவாகத்  திரண்ட  அமுத   பாலன்  அதைக்  கண்டு  துக்கமே  கொள்கிறான்.  திருமாலிடம்  அந்தப்  புரோஹிதர்களுக்கு  மீண்டும்  உயிரூட்டுமாறு  பிரார்த்திக்கிறான்.  எந்த  நியாயத்தில்  அந்தக்   கொடுமதியாளருக்கு  அவன்  புனர்  ஜீவனம்  கேட்பது ?  அவர்களது  எந்த  நற்குணத்தையும்  காட்டி  அவ்வாறு  கேட்பதற்கில்லை.  எனவே  தன்னைப்  பற்றிய  ஒன்றையே  சொல்லி  அதற்காக  அவர்கள்  பிழைத்தெழட்டும்  என  வேண்டுகிறான்.  என்ன  அது ?

          “தேஷ்வஹம்  மித்ரபாவேன  ஸம:  பாபோஸ்மி  ந  க்வசித் !

           யதா  தேனாத்ய  ஸத்யேன  ஜீவந்த்வஸுர  யாஜகா:  !!

(தனக்கு  அவர்கள்  எத்தனை  விதமான  தீமைகள்  இழைத்த  போதிலும்)  “நான்  அவர்களிடம்  மித்ர  பா (BHAA)வத்தையே —நட்புப்  பாங்கையே —ஸமசித்தத்தோடு  பயின்றேன்,  அவர்களிடம்  பாப  எண்ணம் சற்றும்  இன்றி  இருந்தேன்  என்பது  ஸத்யமானதால்  அதன்  பொருட்டாகவே,  அஸுரராஜனுக்காக  வேள்வி  வேட்ட  இவர்கள்  உயிர்  பிழைக்கட்டும் !”  என்கிறான்.

அவ்வாறே  அவர்கள்  புத்துயிர்  பெறுகின்றனர்.

“அந்தக்  கொழந்தை  தன்னைக்  கொல்லவே  யத்தனிச்சவா  கிட்டயும்  கெட்ட  எண்ணமில்லாம,  மித்ர  பாவத்தோடயே  இருந்துண்டு,  அதனோட  ப்ரபாவத்திலேயே  அவாளுக்கு  மறுபடி  உயிர்  பெத்துக்  கொடுத்தான் –கிறது  எனக்குள்ளே  கொஞ்சம்  நன்னாவே  ஏறித்து.  ப்ரஹ்லாத  சரித்ரத்துல  இதுதான்  பெரிய  பாடம்னு  எடுத்துண்டேன்”  என்று  ஸ்ரீசரணர் எத்தனையோ  ஆண்டுகளுக்குப்  பின்னர்  கூறினார்.

இன்னும்  வரும்………..

Since  childhood,  SriCharanar  was,   by  nature,   kind  hearted  and   of  a   friendly  disposition.  After  ascending  the  ‘Guru  Peetam’  at  the  age  of  thirteen,  He  received  formal   education  on  Vedas (Vidhyapyasam);  He  told  me  that  He  got  great  motivation  for   His  ‘Penance  of  Love’  (Maithreem  Thapas)  during  this  time.  (He  would  never  say  ‘motivation  in  Maithreem  Thapas’  in  so  many  words;   only  we  should  infer  and  interpret  that  way !).

In  His  Vedic  education,  He  was  specially   introduced  to  the  history  of  Divine  children  such  as  Prahladhan,  Dhruvan,  Markandeyar  and  so  on.   They  taught  Him  the  original  Puranas  with  meaning.  The  objective  of  such  a  system  was  to  inculcate  knowledge  of  Samskrit,  knowledge  of  Puranas,  and  Good  conduct  in  the  sishyas (disciples).  (After  this  the  Child  sage  voluntarily  learnt  ‘Periya  Puranam’  ‘Upamanyu  bakthi  vilasam’  and  through  them  the  life  history  of  Thirugnanasambanthar ).

The  histories  of  Dhruva  and  Prahladha  were  taught  not  only  based  on  Srimadh  Bagavatham,  but  also  on  Vishnu  Puranam.  An  incident  in  the  history  of  Prahladha found  in  Vishnu  Puranam    touched   His  inner  mind  and  soul  deeply  and  strengthened  His  belief  in  ‘Maithree  Thapas’  (Penance  of  Love).

Hiranyakasipu,  father  of  Prahladha,  tried  many  ways  such  as  poisoning,  pushing  down  from  the  hill  top,  stamping  by  elephants,  in  order   to  get  rid  of  Prahladha.  But   none  of  these  proved  useful  in  fulfilling  his  objective.  Later,  he  called  his  purohits  and  ordered  them  to  perform  exorcism  to  get  rid  of his  son.  They  obeyed  and  performed.  An  apparition   called  ‘Kruthya’  emerged  from  the  Yagna  fire.

But,  instead  of  attacking  Prahladha,  it  attacked  the  purohits  and  killed  them !

Prahladhan,  the  embodiment  of  friendship  and  love,    was  terribly  sad.  He  prayed  to  Vishnu  to   bring  them  back  to  life.  On  what  justification,  he  could  ask  for  rebirth  to  those  evil minded  persons ?  He  could  not  ask  based  on  any  of  their  good  qualities..  Therefore,  he  mentions  something  about  himself  and  pleads  with  Vishnu.  What  is  that ?

                  “தேஷ்வஹம்  மித்ரபாவேன  ஸம:  பாபோஸ்மி  ந  க்வசித் !

           யதா  தேனாத்ய  ஸத்யேன  ஜீவந்த்வஸுர  யாஜகா:  !!

(Although  they  did  a  lot  of  atrocities  to  him )   “  I  learnt  from  them  only  the  quality  of  friendship;  I  never  had  any  evil  feeling  towards  them;   since  this  is  true (sathyam),    then  for  that  sake  at  least,  let  them  become  alive  so  that  they  can  perform  yagnas  for  my  father.”—He  says.

They,  thus  got  back  their  lives.

  

“The  fact  that  that  child,   exhibited  love  and  friendship  towards  those  who  tried  to  kill  him,  without  any  sort  of  ill  feeling  towards  them,  and  brought  them  back  to  life,  was  etched  deep   in  my  inner  mind.  I  thought   that  this  was  the  biggest  lesson  to  be  learnt  from  ‘Prahladha  Charithram’  (history  of  Prahladha).’—–said  SriCharanar  after  many  many   years.

TO  BE  CONTINUED……………………  

 Categories: Upanyasam

Tags:

5 replies

  1. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. அன்பே சிவம் என்ற திருமூலர் திரு மந்த்ரத்தின் மறு அவதாரமே பெரியவா!! அதனை உணர்த்தும் விதமாகவே ப்ரஹ்லாதன் கதை மூலம் அவர் வாயிலாகவே நாம் அறிகிறோம் !!சங்கரா ஐயனே சரணம்…

    • True ! Very True, madam ! The full book ‘Sankarar Endra Sangeetham’ by Ra.Ganapathy Anna, brings out this particular ‘Kalyana Gunam’ of MahaPeriava ! This book is a treasure !

  3. What else from the Embodiment of Love!

Leave a Reply

%d