Dasopadesam Painting

Thanks to Sri BN Mama for a simple and beautiful pencil sketch. He sent this to me to be posted on pradosham day but there are too many things going on at work….Sorry for the delay….Here it is::

MahaPeriava_elephant_drawing_BN

 

DASOUPADESAM.

Jagathguru Sri Chandrasekarendra Saraswathi Swamigal.

  1. One of our duties as human beings is to avail ourselves of every opportunity to do good to others. The poor can serve others by their loyal work to the country and the rich by their wealth to help the poor. Those who are influential can use their influence to better the condition of the poor. That way we can keep alive in our hearts a sense of social service.
  2. Man by himself cannot create a blade of grass. We will be guilty of gross ingratitude if we do not offer to God what we eat or wear. Only the best and choicest should be offered to Him.
  3. Life without love is a waste. Everyone should cultivate “Prema” or love towards all human beings, birds and beasts.
  4. Wealth amassed by a person whose heart is closed to charity, is generally dissipated by the inheritors; but the family of philanthropists will always be blessed with Happiness.
  5. A perdon who has done a meritorious deed will lose the resulting merit if he listens to the praise of others or boasts himself of his deeds.
  6. It will   do no good to grieve over what has happened. If we learn to discriminate between good and evil, that will guard us from falling into the evil again.
  7. We should utilize, to good purpose, the days of our life—time. We should engage ourselves in acts which will contribute to the welfare of others rather than to selfish desires.
  8. We should perform duties that have been prescribed for our daily life and also be filled with devotion to God.
  9. One attains one’s goal by performance of one’s duties.
  10. Jnana is the only solvent of our troubles and sufferings.

The above content was taken from the book ‘Mahaswami Dharsan’ published by SSSMM Trust, Chennai. Many many thanks to them.



Categories: Photos, Upanyasam

Tags: ,

6 replies

  1. உயர்ந்ததொரு வாழ்க்கைக்குத் தேவையான
    மஹாப் பெரியவாளின் பொதுவான 10 பொன்மொழிகளின் சாராம்சம்

    இவை மஹாப்பெரியவரின் மீது எழுதப்பட்டுள்ள 283 பாடல்களில் தொடரும் அடுத்த சில பாட்டுக்கள், ஸ்ரீ மஹா பெரியவாளின் 10 பொன்மொழிகளின் சாராம்சத்தைப் பாடல் வடிவில் வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளன..

    முதல் இரண்டு பொன்மொழிகளும் அதற்கான பாடலும்

    1. பிறவிகளிலே மிக உயர்ந்ததான மானுடப் பிறவி எடுத்துள்ள நாம் ஒவ்வொருவரும், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம், பிறருக்கு நன்மை செய்வதையே நம் குறிக்கோளாகவும், கடமையாகவும் கொள்ள வேண்டும்.
    2. அன்பு இல்லாத வாழ்க்கை வெறுமையான, வீணான வாழ்க்கை. அதனால் ஒவ்வொருவரும் எல்லா மனிதர்களிடத்திலும் – ஏன் , எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் பழக வேண்டும்.

    1. அன்புடன் அரவணைத்து அகிலத்து உயர்ந்திடவே!!

    தத்துவம் இது எண்ணுவாய்! நன்னெஞ்சே;
    உத்தமன் காஞ்சிமுனி உலகுய்யச் சொன்னதொரு!
    தத்துவம்
    நித்தமும் பிறர்க்கு நலம், நெஞ்சம் விழைந்து உந்தன்
    சித்தம் கலந்திங்கே, நற்செயலனைத்தும் செய்க என்ற!
    தத்துவம்
    அன்பில்லா வாழ்வதனை (உலகோர்) அறமென்று சொல்வதில்லை!
    அகிலமெலாம் போற்ற, அனுதினமும் செயல் புரிக!
    துன்பம் மிக வரினும், தொடர்ந்தே நம்மை வருத்திடினும்,
    மன்பதைக்குத் துயரிழைக்க, மறந்தும் (நீ) நினையாதென்ற
    தத்துவம்

    அடுத்த முப்பொன்மொழிகளும் அதற்கான பாடலும்

    1. கடவுளின் அருளின்றி எந்த ஒரு மனிதனும் ஒரு சிறு புல் பூண்டைக் கூட உருவாக்க இயலாது. கருணை வடிவமாகிய இறைவன் அன்றாடம் தவறாமல் ஏதோ ஒரு வகையில், நமக்கு உணவு கிடைக்க வகை செய்கின்றான். அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, அன்றாடம் நாம் உண்ணுவதனை இறைவனுக்கு முன் வைத்து “இன்றைய உணவினை எமக்களித்த உன் கருணைக்கு நன்றி” என நிவேதனம் (அறிவித்தல்) செய்துவிட்டு, அதன் பிறகே நாம் உண்ண வேண்டும்
    2. ஒருவன் தன்னுடைய செயல்களுக்கு மற்றவர்களின் புகழ்ச்சியையும் பாராட்டையும் விரும்பினால், அவன் பல நல்ல செயல்களைச் செய்தாலும் கூடத் தன் கௌரவத்தை இழந்து வருந்துவான்.

    3. “ஞானம்” ஒன்றே நம் துயர் தீர்க்கும் மருந்து

    2. சத்தியம் அது தருமே உந்தன் சந்ததிக்கும் நன்நலமே!!

    உத்தமன் காஞ்சிமுனி உளமுவந்து உரைத்த மொழி
    நித்தமும் நினைத்திடுவாய் நெஞ்சே அது நிம்மதி!!
    உத்தமன்
    இறையருள் இல்லாதிங்கே, எதுவும் நடப்பதில்லை; மனம்
    நிறைவாய் நிவேதனம் எந்தன் நெஞ்சமென்று நீ (அவர்க்குச்) சொல்வாய்!
    உத்தமன்
    ஆனதொரு செயலதற்கும் பிறர் அகமகிழ்ந்து பாராட்ட எண்ணும்
    ஈனம் மறைந்திடவும், செயலை இயல்பாகச் செய்திடுவீர்!!
    ஞானம் தரும் கல்விதனை நாடுவதே சிறப்பு! இங்கு
    நாடுவதென்றான பின்னர், (நலம் தர) நாதனவன் பொறுப்பு
    உத்தமன்

    அடுத்த முப்பொன்மொழிகளும் அதற்கான பாடலும்

    1. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் நற்செயல்கள் செய்வதற்கே பயன்படுத்த வேண்டும். நமது சுயநலத்தையும், விருப்பங்களையும் மட்டுமே பூர்த்தி செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் மற்றவர்களின் நலனுக்காக ஏதாவது பணிகள் செய்வதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
    2. ஒவ்வொருவரும் அன்றாடம் அவரவர்க்கு விதித்துள்ள நெறிமுறைகளை (நித்தியவிதிகளை) செம்மையாகக் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும் தூய மனதுடனும் தெய்வ சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.
    3. நற்கதி அடைய ஒரே வழி, அவரவர் தம்முடைய கடமைகளையும், பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்றுதலே.

    3. திருவடி மகிமையைத் தெரிந்து கொள்வீரே!

    திருவடி மகிமையைத் தெரிந்து கொள்வீரே!
    அருள் வடிவாக வந்து அனைத்துலகும் ஆள்வான் அவன்
    திருவடி
    நாளும் பிறர்க்கு நலன் நாடியே செய்திடுவார்
    கோளும் அவர்க்கு இங்கே குற்றேவல் செய்திடுமே
    திருவடி
    தரும நெறி நின்று தரணியும் நல பெறவே நித்ய
    கருமங்களைச் செய்வார் கொண்ட கடமையும் ஈதாக
    பெருமையுடன் அவர் விழைந்த பேரின்ப வாழ்வருளும்
    அருமை அறிந்தவர்கள் அவனடி பணிந்தெழவே!
    திருவடி

    அடுத்த இரண்டு பொன்மொழிகளும் அதற்கான பாடலும்

    1. எவனொருவன் தர்ம சிந்தனையின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றானோ, அவன் பாடுபட்டு சேர்த்து வைத்த செல்வமனைத்தும், அவர் மனம் வருந்தும்படியாக அவனுடைய சந்ததியினரால் அழிக்கப்படும். (மாறாக பரோபகாரிகளும், தர்மவான்களும் எப்பொழுதும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்).
    2. நடந்தவைகளைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது உசிதமன்று. எது நல்லது எது கெட்டது என்பதை நன்கு ஆய்ந்தறிந்து பின்னர் நல்ல முடிவினை எடுத்துச் செயல்பட்டால், விளைவுகள் நன்றாகவே இருக்கும். மீண்டும் தவறுகள் நேர்ந்து விடாமலும் காப்பாற்றும்.

    4. தரும நெறி வழியே தரணியில் வாழ்ந்திடவே!!

    கருணை செய்வான்; அருள்வான் அவன் தன்னிரு
    கழலடி பணிந்தெழவும்; காஞ்சி முனிவனிங்கு
    கருணை செய்வான்
    திருவடி மகிமை நம்பி தினமும் தொழுதெழவும்
    அருள் புரிவான் மகிழ்ந்தே அகிலமும் போற்றிடவும்
    கருணை செய்வான்
    விருப்பும் வெறுப்புமில்லா வேந்தனவன் தாள் பணிய
    இருப்பதோர் வாழ்வதனில் இசைந்த நற்சுகம் பெறவும்
    பெருமை தரும் நல்வாழ்வும் பேசும் நற்சிறப்பும் தரும்
    தரும நெறி வழியே தரணியில் வாழ்ந்திடவே!!
    கருணை செய்வான்

    5. குருவெனவே ஆகியெந்தன் குறைகள் களைந்திடுவான்

    திருவடி தொழுவேனென்றும்! உற்ற தீமையும்
    நன்மையாய்த் தெரிந்திட அருள் புரிவான்; அவன்
    திருவடி
    அருள் வடிவாகவே அனுதினம் நமைக் காப்பான்!
    ஆச்சார்யனாக வந்து அறவுரையும் செய்வான்!!
    திருவடி
    குருவெனவே ஆகியெந்தன் குறைகள் களைந்திடுவான்!1
    கோடானு கோடி ஜனம் கும்பிடக் கோயில் கொண்டான்!!
    திருவருள் கைகூட தெரிந்ததோர் வழியுரைத்தான். விதித்த
    கருமவினை செய்வீர், நினைக்கும் காரியம் கைகூடுமென்றான்!!
    திருவடி

    – செபரா

    • அருமை ! அருமை! அருமையான பாடல்கள் ! பகிர்ந்தமைக்கு மிக மிக நன்றி!

  2. This Upadesam of our Maha Periyava is to every one. Once begin to practice automatically all our ego and the feeling of ” I AM DOING ” will surely withdraw from us and surely become noble and useful for every one. Let us Pray for HIS Grace and blessings. Hara Hara Sankara Jaya Jaya Sankara..

  3. awesome and great DASOUPDESAM hope we can manage to practice atleast one percent of what MAHA PERIYAVA has told

  4. Please can I get maha periyava sloka in Sanskrit? Thanks n regards Jayashree

    Sent from my iPhone

    >

Leave a Reply

%d bloggers like this: