Parivara Alaya Kumbabishekam at Chidambaram Jan 26, 2015


 

Chidambaram_natarajar

 

ஸ்ரீ சித்ஸபேசாய மங்களம்

அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

26.01.2015 * திங்கள் * காலை 09.00 மணிக்கு மேல் 10.30  மணிக்குள்

கோயில் என்றாலே பொருள் படும் சிதம்பரம் ஸ்தலத்தில், ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்தியின் பரிவார தெய்வங்கள் திகழும் சன்னிதிகளுக்கு,  நிகழும் ஜய வருடம், தை மாதம் 12ம் தேதி, 26.01.2015, திங்கட் கிழமை காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை, புனப்ரதிஷ்டா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

23.01.2015 – முதல் காலம்

24.01.2015 – காலை இரண்டாம் காலம், மாலை மூன்றாம் காலம்

25.01.2015 – காலை நான்காம் காலம், மாலை ஐந்தாம் காலம், இரவு ஆறாம் கால யாக பூஜைகள்.

26.01.2015 – காலை கோ பூஜைகள் முதலான பூஜைகள், குடங்கள் புறப்பாடு. காலை 09.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம்.

இரவு பஞ்சமூர்த்திகள் வீதிவலம்.

பரிவார சன்னதிகளும், தரிசன பலன்களும் :

நடராஜ ராஜ மூர்த்தி கருவறையாம் பொன்னம்பலம் அமைந்த பிரகாரத்தில் அமைந்துள்ள பரிவார தெய்வங்கள் :

அனுக்ஞை விநாயகர் : தொடங்கும் எந்த செயலையும் தொய்வின்றி வெற்றிகரமாக அமைக்கும் முழுமுதலோன்.

ஸ்ரீ ஸுப்ரமண்யர் : வரப்ரஸாதியாக அமைந்தவர். வேண்டும் வரங்களை உடனடியாக வழங்கக்கூடியவர். குழந்தை பாக்கியம் அருளக்கூடியவர்.

லிங்கோத்பவர் : இனி மறு பிறப்பில்லாமல், முக்தியை நல்குபவர்.

ஆகாச லிங்கம் : ஆகாச க்‌ஷேத்ரத்திற்குரிய லிங்க மூர்த்தி. ஆனந்தமான வாழ்வை அருள்பவர். தெய்வத் திருவருள் விரைவில் கிடைக்க அருள்பவர்.

ஸ்ரீ பிக்ஷாடனர் : எளிதில் அனைவரையும் கவரும் திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றை வழங்குபவர்.

ஸ்ரீ ஜைமினி :  வேதாங்கமான மீமாம்ஸத்திற்கு உரை எழுதிய மகரிஷி. வேதபாத ஸ்தவம் எனும் அரிய அற்புத ஸ்தோத்திரம் கொண்டு நடராஜ ராஜரை துதி செய்தவர். வேதங்கள் ஓதியபலனைத் தரக் கூடியவர்.

சூர்ய சந்திரர்கள் :  நம் அன்றாட வாழ்க்கையை நிர்ணயிக்கும் நவநாயகர்களின் தலைமையிடம் கொண்டவர்கள். ஜாதக தோஷங்களை நீக்கக் கூடியவர்கள். உடல் ஆரோக்கியத்தைஅருளக்கூடியவர்.

கால பைரவர் : துன்பங்களை நீக்கக்கூடியவர். தெய்வ பக்தி வளர  அருள்பவர். திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், திருடு போன பொருட்கள் கிடைக்கவும்அருளக்கூடியவர்.

ஸ்ரீ ப்ரஹ்ம சண்டிகேஸ்வரர் : சிவ கணங்களுக்குத் தலையானவரான சண்டிகேஸ்வரர், ஸ்ரீ ப்ரம்மாவுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். சிவ பலன் முழுவதையும் அருளக்கூடியவர்.

இதற்கடுத்த பிரகாரத்தில் உள்ள தெய்வங்கள் :

ஊர்த்வ தாண்டவர் :  கலைகளில் மேன்மையும், போட்டிகளில் முதலிடத்தையும், அற்புதத் திறன் கூடிய கலைச் செல்வங்கள் கிடைக்கச் செய்யும், காளியுடன் போட்டி நடனமிட்டு வென்றஊர்த்வ தாண்டவர் கோயில் கொண்ட நிருத்த ஸபை.  ஊர்த்வ தாண்டவரைப் பற்றிய மேல் விபரங்கள் காண கீழ்க்கண்ட லிங்க் சென்று பாருங்கள்.http://natarajadeekshidhar.blogspot.in/2010/06/blog-post_10.html

அன்னபூரணி : உணவு தொடர்ந்து தடையின்றி கிடைக்கவும், உணவுத் தட்டுப்பாடு இல்லாமலும் அருளும், நல்ல ஜீரண சக்தியும், அகில உலகிற்கும் படியளக்கும் அரனுக்கே அன்னமிட்டஅன்னபூரணேஸ்வரி.

கால ஸம்ஹார மூர்த்தி : சிவதொண்டனின் கழுத்தில் விழுந்த எமனின் பாசக்கயிற்றினைக் கண்டு, தம் அடியவர்க்காக காலனையே காலால் கடிந்தவர். நோய் நொடிகளின்றி நீடித்தஆயுளுடன் வாழ அருள்பவர்.

பால தண்டாயுதபாணி :  வளரக்கூடிய வேலவர் வடிவம். கற்சிலை வடிவம் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. வம்சம் விளங்க அருளக்கூடியவர். மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்செல்லுங்கள். http://natarajadeekshidhar.blogspot.in/2015/01/blog-post.html

ஸ்ரீ சரபேஸ்வரர் : விஷ்ணுவின் நரசிம்ம கோபத்தை அடக்கியவர். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பாதிப்புகளில் இருந்து முற்றிலும் துயரத்தை நீக்கக் கூடியவர். எதிரிகளால் ஏற்படும்எதிர்ப்புகளை கிள்ளி எறிபவர்.

ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமி : பக்தையாகிய கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க வந்த தெய்வம்.   இனிய பேறு காலமும், சுக பிரசவமும் தரக் கூடியவர்.

ஸ்ரீ திருமுறை காட்டிய விநாயகர் : தமிழ் வேதங்களாம் திருமுறைகள் இருந்த இடத்தை சோழனுக்குக் காட்டியருளியவர். நல் அறிவாற்றலையும், நல்ல வேலை வாய்ப்பையும் அருள்பவர்.

ஸ்ரீ சமயாச்சாரியார்சந்தானாச்சாரியார்திருமுறை கோவில் :  அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் & மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர்,உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் அருள்பதி கொண்ட சன்னதி.  தெய்வத்தமிழால் பல அற்புதங்களைச் செய்தவர்கள். தேன் தமிழால் சைவ ஒளியை பிரகாசிக்கச் செய்தவர்கள். சைவபக்தியும், நன்னெறியையும், நல்ல மனிதமும் தழைக்க அருள்பவர்கள். நால்வர்கள் காடிய நல்வழியைப் பற்றி மேலும் விபரங்கள் காண இந்த லிங்க் செல்லுங்கள் :http://natarajadeekshidhar.blogspot.in/2010/01/blog-post_16.html

இதற்கடுத்த பிரகாரத்தில் அமைந்த ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள

விட்டவாசல் பைரவர்: ஆலய பைரவர் என்று போற்றக்கூடியவர். அழகே உருவானவர். கோயிலின் காவல் தெய்வமாக விளங்குபவர். செல்வங்களை அருளக்கூடியவர். வளமான வாழ்வுவழங்கக் கூடியவர்.

கோபுர விநாயகர் : கீழ கோபுரத்தின் கீழ், ஆலயத்தின் முழு முதல் கணபதியாக விளங்குபவர். வாழ்வில் வெற்றிகளை தரவல்லவர். கோபுரங்களின் சிறப்புகளையும், அதன் அமைப்புவிபரங்களையும், கால கணிதத்தின் அரிய கோட்பாடுகள் பற்றியும் இந்த லிங்க் சென்று காணுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.in/2010/05/blog-post.html

ஸ்ரீ தியாகவல்லி ஸமேத ஸ்ரீ தியாகராஜர் : அமைதியையும், அரும்பெரும் செல்வங்களையும் அருள்பவர்.

முக்கிய பின் குறிப்பு : எதிர்வரும் 01.05.2015 அன்று சிதம்பரத்தின் பொன்னம்பலத்தில் அனுதினமும் நடமிடும் ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேக வைபவம் தான் 26.01.2015 நடைபெறும்கும்பாபிஷேகம்.

பக்தர்கள் அனைவரும் கண்டு தெய்வத் திருவருள் பெறுங்கள்.

– நி. த. நடராஜ தீக்‌ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்

http://natarajadeekshidhar.blogspot.in

www.facebook.com/deekshidhar

Mobile : 94434 79572, 93626 09299.Categories: Announcements

Tags:

5 replies

  1. Nataraja Deekshidhar’s blog is such a treasure. Just read the below one for sample!!

    http://natarajadeekshidhar.blogspot.in/2011/05/blog-post.html -> A post on ‘Lalitha Sahasranamam’. I don’t have any words to describe the knowledge he has shared about Lalitha Sahasranamam. Please read.

  2. Super. Even Mahaperiyaval too become happy for this. Thanks a lot. i am now following in ‘Blogspot’ and Face book

  3. Blessed to know this information as once i was in this place used to visit and have Darshan of Lord Nataraja sametha Sivamasundari ambal almost all the days. Un forgettable days!! Baladhandayuthapani is a wonderful statue in veli prakaram near dwajasthambham growing day by day!! It is a wonder worth to have darshan!!Thanks for your information!!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: