நீ எனக்கு உபகாரிதான், அபகாரியில்லை!

Thanks Karthi, for this short but wonderful posting….

This is the definition of compassion! None can match!

Anbe_Sivam_Periyava

கவலையுடன் அண்டியவர்க்கு ஆறுதலை கொடுப்பவன் சாது – ஸ்ரீ சிவன் சார் (ஐயனின் பூர்வாசிரம சகோதரர்).

பரம பதிதனான தனக்கு உய்வே இருக்க முடியாது. தான் பெரியவாள் போன்றதொரு புனித மூர்த்தியிடம் வந்ததே பிழை என்று அவரிடம் புலம்பினார் ஒருவர். அவர் புரிந்திருக்கும் மா பாதகங்களை நினைத்தால், எவரும் அவரிடம் அனுதாபம் காட்ட முடியாது தான். ஆயின் இங்கும் பாய்ந்தது ஸ்ரீ சரணரின் இதம் செய்யும் இதயம்.

சொன்னார் –

‘பகவானின் உச்ச பெருமை பக்த சிரோன்மணிகள் மூலம் தெரிவதில்லை. பரம பதிதர்களால் தான் அது தெரிகிறது. அவனுடைய கல்யாண குணங்களில் உச்சியாக எதை சொல்லி ஸ்தோத்திரிகிறோம்? பதித பாவனன், பதித பாவனன் என்றுதானே? பரம பதிதராக சில பேர் இல்லாவிட்டால் அவர்களை பாவனப்படுத்தும் பெருமை, ‘பதித பாவனன்’ என்ற உச்சமான டைட்டில் அவனுக்கு எப்படி கிடைக்கும்?

அதற்காகத்தான் அவனே ஸ்ருஷ்டி லீலையில் அப்படி சிலர் இருக்க பண்ணுகிறான் என்று வைத்துக்கொள். நீ இப்போது பச்சாதாப பட்டு அவன் பக்கம் திரும்பி பார்க்கிறாய் இல்லயோ? இனிமேல் தன் டைட்டிலை ரட்சித்து கொள்வதற்கு ஆகவேண்டியதை அவன் பார்த்துக்கொள்வான். பதித அத்தியாயம் முடிந்தாயிற்று. இனிமேல் பாவனம் ஆகிற அத்யாயந்தான் என்று மனசை சமாதானம் ஆக வைத்துக்கொள்ளு.

‘என்கிட்டே வருகிறதுக்கு கூசவே கூசாதே. எல்லோருக்கும் நல்லது சொல்லி ஆறுதல் பண்ணத்தான் எங்களை ஆசாரியாள் வைத்திருக்கிறார். தாங்களாகவே சரியான வழியில் போகிறவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது? ஆகையினால், பகவானுக்கு பெருமை சேர்த்து கொடுக்கிற மாதிரியேதான், எங்களுக்கு எங்கள் காரியத்தை நாங்கள் முழு மூச்சோடு ஜெயித்து காட்டிய பெருமை ஏற்படணுமானால் அதற்கும் வழி தப்பினவர்கள் தான் சகாயம் பண்ணுகிறார்கள். நீ எனக்கு உபகாரிதான், அபகாரியில்லை. கூச்சப்படாமல் வந்துகொண்டிரு.’

அன்பின் அமுதம் அந்த நபரை மாற்றியது, ஆற்றியது.

– மைத்ரீம் பஜத, அண்ணா ஸ்ரீ. ரா. க. அவர்கள்



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. Sri Sivan Sir, the poorvasrama brother of Maha Periyava says that a Sadhu is one who provides solace to those who come to him with some sorrow or grief. (Let us see how Paramacharya practiced this in the narrative below)

    Once a person came to Periyava and sobbed that there cannot be a worse sinner than he and he had no right to even come before such a noble and pious person like Periyava. True that if one sees the list of the sins he had committed they may not be in a position to show any compassion towards the person, Yet, our Sri Charanar’s grace was in full flow towards this person.

    Maha periyava said that the exalted position of God and His unbounden grace is not experienced through those who are his ardent devotees. It is brought forth only by those who have committed sins and fallen in their life. What attribute of the Lord do we praise? It is His unbounden grace towards the weak and suffering that has earned Him the name of PATITHA PAVNAN, the saviour of the worst sinners. If there are no sinners then how can he get this title?

    Maybe that is the reason why He in his play of creation make some people to commit sins. Now that you have turned your vision towards Him for His mercy, He will take steps to protect His title. The chapter of sin is over and keep your mind peaceful that the new chapter of redemption has begun.

    Never hesitate to come to me. Our Guru Acharyal has destined people like me to be a source of consolation for all. What more can we teach those who are already on the path of righteousness? Therefore like one provides an opportunity to the Supreme Bhagavan to earn and defend His title of Pathitha pavanan, so do people who have wavered from the right path give us an opportunity to fulfill our function and play our role with fervour by helping them. Therefore you are only doing me Good (Upahari) and are not a deterrent (Apahari). So keep coming to me without any reservation.

    No wonder this nectar like speech brought solace to the person and healed his mental wounds.

    From the anecdotes of Maitreem Bajatha Shri R K

  2. Maithreem Bhajatha! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Om Avyaaja KaruNaamurthayee Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. Glad to receive this

  4. Nothing but to do vandhanam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading