Hara Nama Parvathi Pathaye!

That was the line came to my mind when i saw this painting.

BN Mama had sent a painting and a poem as usual….Mama has the unique blend of painting and poetry – all given by Him!!! We are doubly delighted anyway – thanks mama for a superb painting..details are so amazing – the fingers holding the dhandam, viboothi pattai, wrinkles in the skin etc… Yes, this is one of my favorites…

Periyava_looking_up_BN

ஓவியனின்  குறிப்பு.

இந்தப்  படத்தைப்   பார்த்தவுடன்  என்னில்  எழுந்த  எண்ண  அலைகள்.

இரண்டு  எண்ணங்கள்  தோன்றின.   ஒன்று  திரு.  ரா.கணபதி  அண்ணா  எழுதிய  மைத்ரீம்  பஜத  புத்தகத்தில்,   ‘ஒளியுடன்  ஒரு   நாள்’  என்ற  தலைப்பில்  ஒரு  கட்டுரை.  மஹாபெரியவாளின்  தினசரி  காரியங்கள்,  அவர்  காலை  3 மணிக்கு  எழுந்ததிலிருந்து  இரவு  12  மணி  உறங்கப்  போகும்  வரையில்.  அதில்  வரும்  ஒரு  பாராவைக்  கீழே  தந்துள்ளேன் :-

“பிரதோஷ  பூஜையில்  பிரத்யக்ஷ  சிவஜோதியாயிருப்பவர்  பௌர்ணமி  பூஜையில்  அம்பாளாகக் குளிர்ந்து  ஒளிர்வார் !  

நேரம்,  பொழுது  தெரியாமல்  அந்தக்  காமகோடித்  தாய்க்கு  எத்தனை  விஸ்தாரமாக  ஆராதனை  செய்வார்  அவளேயான  அருமைச்  சேய் !

அது  இரவு  பதினொன்று  மணிக்கு  முடியுமெனில்,  அதற்குப்பின்  பூர்ணசந்திரனைப்  பார்த்தபடி,  அச்சந்திரனில்  அவளைத்  த்யானித்தபடி  ஸஹஸ்ரநாமம்  முழுதும்  சொல்வார்.  அந்த  வேளையில்  மதியம்  உள்ள  கோணத்துக்கு  முகத்தைத்  தூக்கிப்  பார்த்துச்  சொல்வதென்றால்  நமக்கெல்லாம்  ஓரிரு  நிமிஷத்திலேயே  கழுத்து  வலி  கண்டு  முகத்தைத்  தொங்கப்  போட்டுவிடுவோம்.  வைதி  பக்தியும்,  ராக  பக்தியும்  சங்கமித்த    அந்தப்  பரம  பக்தர்  யோகிராஜனாகவும்  இருப்பதால்,  நிதானமாக  ஸஹஸ்ரநாமம்  சொல்ல  முக்கால்  மணியானாலும்  சந்திரனில்  பார்வை  பதித்த (சேகர)  முகம்  சற்றும்  தொய்யாது.  ஆன்மாவுக்கு  எத்தனை  ‘குளு  குளு’   அவ்வமுதக்  காட்சி !”

இந்த  ஃபோட்டோவை  எடுத்த  அன்பர்,  இந்த  சமயத்தில்  போய்  எடுத்திருப்பார்  போலும் !  மஹாபெரியவா  சந்திரன்  உச்சிக்கு  வந்தாச்சா  என்று  பார்க்க  வந்தது  போலில்லை  இந்தக்  காட்சி!

இன்னொரு  எண்ணம்.  திருமதி  KBS  பாடியுள்ள  ஒரு  முருகன்  பாடல்:-

“கையில்  தண்டம்  கொண்டு,  கழுத்தில்  ருத்ராக்ஷம்  பூண்டு,

மெய்யுணர்வைக்  காட்டி  அழைக்கும்  வையாபுரிக்கிறைவா !

பழனி    பழனி   பழம்  நீ………நல்ல பழம்  நீ,  பழனீ  !”

இங்கு  நாம்  காணும்  ஞானப்  பழமும்,  அவ்வை  பாடிய  அந்த  ஞானப்பழமும்

ஒரே  ‘ஸ்வாமிநாதன்’  தானே !



Categories: Devotee Experiences

Tags:

9 replies

  1. Wonderful painting and wonderful narration.
    jaya jaya shankara hara hara shankara

  2. Pranams to paramacharya and all his devotees. Appreciate Mr.Mahesh for sharing and spreading the life and message of Periyava. Thanks for taking the initiative for providing all of us a platform to share our experiences and taking time to answer our queries. I consider myself an infant in this world of Periyav’s devotees. I am highly indebted to my sister she is the reason behind my faith in Periyava and the innumerable videos on YouTube that reiterates my faith in the Mahan. Thanks to Mr.Mahesh and Mr.Sivaraman again! Periyava is the other name of austerity. I feel blessed to have joined his nest of devotees though I had my own doubts initially. Every time I hear Mr.Swaminathan’s discourse I have goose bumps.It makes me wonder how a guru takes care of his devotees. Bleesed are the souls who got to see and experience him. All the best Mr.Mahesh and do let me know if l can be of any little help, I will consider myself very lucky. Thanks and Pranams to Paramacharya!

  3. Oliyudan Oru Nal also published as a separate little book. Wonderful narration by Raa Ganapathi Anna, a mus read,

    Sri Periyava Saranam

  4. Hara Hara Namah Paarvathee Pathaye

  5. நெஞ்சை உருக்கும் தெய்விக வியாக்யானம்!

  6. Blessed to see a very nice painting by BN mama on a Anusham day.

    JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA

Leave a Reply

%d bloggers like this: