An outstanding pencil sketch (Periyava smiles so beautifully) and a poem too…. Thanks mama!
Om Nama Sivaya!
அன்றே சொன்னார் திருமூலர்
அதனையும் ஓர் முறை செப்பிடுவேன்.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்;
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்;
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்;
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே !”
அன்பே அய்யனின் திருமேனி
அன்றாடம் காண்போம் அவரின் செம்மேனி
அன்பே அய்யனின் திருவாக்கு
என்றும் கேட்போம் அவரின் அருள்வாக்கு
அன்பே அய்யனின் திருநாமம்
அன்புடன் சொல்வோம் அவரின் நந்நாமம்
அன்பே அய்யனின் திரு உருவே
என்புருக சிந்திப்போம் குருவின் உருவே.
கந்த குரு கவசத்தை அறியாதார் ஆருண்டு ?
அந்தக் கவசத்தில் வரிகள் சில காண்போமே !
“எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும்
அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும்
அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உ றையும் அருட்குரு நாதரே தான் “
குருவின் வழியே அறத்தின் வழி
குருவின் வழியே அன்பின் வழி
குருவின் வழியே செல்வோம்
மறுமை தனையே தவிர்ப்போம்.
great, no words , avar than inda genma guru
Great picture and Great Sthuthi of Gurunaathar! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Excellent ! Beautifully chosen quotes.They go together very well with the great sketch of our mahaperiyava.
Another special for the blog readers:
6th Oct complete coverage of Pradosha puja at Mahaperiyava “Brindavanam”:
http://www.youtube.com/watch?v=6p0412g1HHs
Deeparadhana of 21st Sep Pradosha(with HH Pudhu Periyava)
http://youtu.be/4ISWOhvE1y8?t=3h3m33s
Courtesy: http://www.youtube.com/user/SriVigneshStudio
Namaskaram mama, Beautiful sketch!!! Amazing to see the effect of water and shadow of Periyava in it.
JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA