அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும்

Kamakshi_Acharyas

Thanks to Smt Geetha Sami for this article as heard from a devotee…

அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள். அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது.

நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் ” அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?”, என்றார் . நான் ” இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் ” என்றேன். 

ஸ்ரீ பெரியவர்கள் ,”அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான்
பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . “எப்படின்னு தெரியுமா?
என்று சொல்லியபின், அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் .

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருக்கடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை .
இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. ”

பிறகு பெரியவர்கள் ” காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்?” என்று கேட்டபோது , நான் “பத்மாசனம் ” என்றேன்.

அதற்கு பெரியவர்கள் ” இல்லை “யோகாசனம்” என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு “இந்த யோகாசனத்தில்
இருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , ஆச்சார்யாள் ,
துர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன” என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து
போய் காட்டினார்கள் .

Loading

6 Responses

  1. ஒன்றை பற்றி சொல்லும்போது மகாபெரியவா கூட இரண்டு மூன்று சாட்சிகளையும் காண்பிப்பது அவருக்கே உரிய தனி சிறப்பு .adey

  2. This is very interesting……..I had a dream about three weeks ago……..I was attending a temple kumbhabhishekam……..I saw and heard Mahaperiya va singing the last sloka of abirami andhadi……which runs as follows….aathalai andamellam poothalai……….I could not understand the connection……….now I see it………..

  3. This was revealed to late Sri kamakoti Shastrigal, Stahnikar of Sri Kamakshi amman temple, Kanchipuram.Shastrigal was initiated into Shaktham by Sri Chidanandha Natahr ( Sir) Sri Nedimindi Subramania Shastrigal and was given the diksha namam ‘Balananda Natha’ as Periyava said to Śir’ ” indha kuzhandaikku” give upadesam- initiatioṇ.

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading