Thanks to Maalaimalar for the article:
நம் தமிழகத்தில் மாரியம்மன் ஆலயம் இல்லாத கிராமங்களே இல்லை எனச் சொல்லலாம். அந்த அளவுக்கு நம் மக்கள் மாரியம்மனின் மேல் பக்தி கொண்டு கொண்டாடுகின்றனர். திருவிழாக்களை கோலாகலமாக பல நாட்கள் நடத்துகின்றனர்.
காவடி, தீமிதி, தேர்த்திருவிழா என அந்த நாட்களில் ஆலயம் மக்கள் வெள்ளத்தில் சூழப்பட்டு குதூகலமாகக் காட்சி தரும். இத்தகைய பெருமை கொண்ட மாரியம்மனின் தோற்றம் எப்படி வந்தது? காந்தவீரியன் எனும் பேரரசன் ஒருவன் இருந்தான்.
அவன் மாபெரும் பலசாலி, கார்த்த வீரியார்ச்சுணன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு. ஆயிரம் கைகளையும், அதிதேஜசும், சூரியனுக்கு சமமான சக்தியையும் கொண்டவன். இலங்கை மன்னன் ராவணனையே சிறை வைத்தவன். திரிஷிதர் என்ற முனிவரை வழிபட்டு வந்தவன்.
அவரது அருளால் அக்னி பகவானையே அஸ்திரமாகப் பெற்றவன். ஜமத்கனி என்பவர் மகா முனிவர் அவரது மனைவி ரேணுகாதேவி. கார்த்தவீரியன் ஜமத்கனி முனிவரிடம் இருந்த தெய்வப் பசுவான காமதேனுவை கைப்பற்ற முயற்சி செய்தான். முனிவர் தடுத்தார். கார்த்தவீரியன் அவரைத் தாக்கினான்.
அருகில் இருந்த முனிவரின் மகனான பரசுராமன் அவனைக் கொன்று அவனது தலையை வெட்டி எறிந்தார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் முனிவரைக் கொன்றனர். இறந்து போன தன் கணவன் உடலை எரியூட்டிய போது அவரது மனைவி ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள்.
தீயில் எரிந்து கொண்டிருந்த ரேணுகாதேவியைக் கண்ட சிவபெருமான் மழையை பொழியச் செய்தார். தீ அணைந்தது. சிவபெருமான் ரேணுகாதேவியிடம் ‘தேவியே, நீ சாதாரண மானிடப் பெண்ணாக உன்னை நினைத்துக் கொள்ளாதே! நீ என் தேவியின் ஓர் அம்சம்.
இந்த மண்ணுலக மக்கள் உன்னையும், உன் மகிமைகளையும் உணர்ந்து கொள்ள நடந்த விளையாட்டு இது. இனி நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக மாரியம்மன் என்ற பெயரில் மக்களுக்கு அருள் புரிவாயாக’ எனக் கூறி மறைந்தார். எனவே சக்தி தேவிதான் மாரியம்மன். மாரியம்மனின் தோற்றம் பற்றிய வரலாறு இதுதான்.
Categories: Devotee Experiences
certainly we want rain. for want of water people are suffering..May Sri Ambal bless us all
கருணை மழையையும் பொழிகிறாள், நீராதாரத்துக்கு முக்கியமான மாத மும்மாரியையும் பொழிகிறாள் மாரியம்மன். கருணைத்தாய் நம் தவறுகளை மன்னித்துப் பழையபடி மாத மும்மாரி பொழிய அருள் புரிந்து நம் அனைவரையும் காக்க வேண்டும். தேசம் எங்கும் வாட்டும் வரட்சி நீங்க வேண்டும்! ஓம் தேவ்யை நமஹ! ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!
பயிர் பச்சை வளர்வதற்காக மழை வேண்டி (மாரி பொழிய வேண்டி) இந்த மாரி அம்மனை வேண்டினால் அருள் புரிவாள் .
MahaPeriyava Padma Padham Charanam
Even today MariAmman still stays in the same glory — because of nonBrahmins — If there is measurment to their bakthi to brahmins bahkthi — ours bit lesser than theirs
Thanks for this divine information. I always wanted to know this history.
Mariamma Thaye Saranam.
Sri Maha Periyava Saranam.
இதுகாறும் புஸ்தகங்களில் படித்த தற்கும் உபன்யாசங்களில் கேட்டதற்கும் மாறாக உள்ளது இந்த தகவல்.இத்தகவல் எந்த இதிகாசம் அல்லது புராணத்தில் இருந்து சேகரிக்கப்பட்டது என்பதை தெரிவித்தால் மிகவும் நன்றியுள்ளவன் ஆவேன்
it was a cut & paste from a magazine – don’t know the background…sorry!