Ramayanam with letter அ .

Shivaraman shared this with me….Not sure who composed this – must be a Tamil expert and also a great Hanuman devotee. I am equally impressed with the paintings…Looks great….

For non-Tamil readers – someone had composed entire ramayana that starts with Tamil’s first letter “அ”!

Enjoy
Courtesy: Sri.Madhavan

ராமாயண கதைமுழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனந்தனே அசுரர்களை அழித்து,

அன்பர்களுக்கு அருள அயோத்தி

அரசனாக அவதரித்தான்.

அப்போது அரிக்கு அரணாக அரசனின்

அம்சமாக அனுமனும் அவதரித்ததாக

அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு

அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?

அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை

அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில்

அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்

அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை

அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய

அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !

அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்

அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு

அனுப்பினாள்.

அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,

அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை

அபகரித்தான்

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு

அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை

அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்

அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை

அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை

அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்

அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.

அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து

அளந்து அக்கரையைஅடைந்தான்.

அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க

அன்னையை அடி பணிந்து அண்ணலின்

அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்

அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்

அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும்

அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்

அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்

அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான

அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை

அடக்கி ,அதிசயமான அணையை

அமைத்து,அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்

அஸ்திரத்தால் அழித்தான்.

 

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை

அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து

அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல் . அனந்த ராமனின் அவதார

அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக

அமைந்ததும் அனுமனின் அருளாலே.



Categories: Bookshelf

Tags: ,

11 replies

  1. அழகு,அருமை, அபாரம்.அறிதற்கு அரியதை அழகாக அளித்ததற்கு அன்பான அகம்கொண்டு அகமலர்ந்து, அன்புகூறி அமைதியாக அமர்ந்து அனுபவிக்கிறேன்.

  2. Mr. Ramesh Sadashivam : “தாயுமானவர் லவகுச ராமர் ” ஆஹா ! என்ன அற்புத படைப்பு !! அந்த தெய்வீக குழந்தைகள் தம் தாய் தந்தையருடன் சேர்ந்து முழு குடும்பமாக வாழ முடியாத வருத்தத்தை இந்த அற்புத நாமம் துடைத்து விட்டது .

    சமர்த ராமதாசர் ஸ்ரீ ஹனுமான் அம்சம் என்பார்கள். அதேபோல் ஸ்ரீ புத்தரும் மகாவீரரும் லவகுசர்கள் அவதாரமே ! அவர்கள் மற்றுமொரு சமயத்தில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் சென்று குஷானர்கள் , ஸ்லாவியர்கள் என்று அழைக்கப்பெற்றார்கள் என சொல்வதுண்டு.

  3. இதை படித்ததும் சிறிது நேரத்திலேயே மனதில் உருவாகிய ‘அ’ முதல் ‘ஆய்த-எழுத்து’ வரை புனைந்த பாமாலையை அவன் தாளில்
    சமர்ப்பிக்கிறேன் :-

    ” அனுமவனவன் ஆண்டவனாம்
    இலக்குமியின் ஈஸ்வரனாம்
    உலகமதை ஊக்குவிக்க
    எங்கெங்கும் ஏற்றம்தர
    ஐம்புலனை ஒடுக்கியவன்
    ஒப்ப ற் ற வன்தானே !!!
    ஓம் காரப்பொரு ளா ன
    ஔதடமாம் அக்கோசலவன் “

  4. Very nice. After reading once, it makes us to read again and again.

    JAYA JAYA SANKARA, HARA HARA SAKARA

  5. Inspired by this Akara Ramayanam, I wrote an Akara Ramayanam myself. Pls do read.

    http://www.iamhanuman.blogspot.in/2014/04/blog-post_27.html

  6. அயோத்திராமனின் அவதார அதிசயத்தை
    அகங்குளிர அருந்தமிழில் அழகுற அளித்த
    அன்பருக்கு அனுமன் அருளட்டும்
    அளவிலா அறச்செல்வத்தை.

  7. Arpudham, Aanandham Adhisiyam .copying and gettting it printed in thousands with out Pictures and distributing to Bhakatas.

  8. Excellent

  9. அதி அற்புதம்! ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கர!

  10. Amazing, Awesome and Arpudham {tamil}. Thanks to Sivaraman sir and Mr. Mahesh. I am going to take a print out and read it out for my son who can’t read tamil. Excellent pictures too. Through social network I am going to share this with all my friends and relatives.

  11. excellent poem!!!Jai Shree Ram!! ati arputham!

Leave a Reply to R. Venkateswaran, GuwahatiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading