Found this in FB page…a great Nataraja devotee is posting lot of great pathigams etc….I do not know who wrote what…They all are absolute gems to read…Thought of sharing with you all..
Thiruchitrambalam….
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே.
நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.
================================================
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
================================================
ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்
ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜுகடகம்
பதஞ்ஜளி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜநம்
அசஞ்சலபதம் ஜநந பஞ்சநகரம் |
கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத
கதம்பக விடம்பக கலம்
சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்
பரசிதம்பரநடம் ஹ்ருதி பஜ | | 1 | |
(what a tongue-twister!)
ஸத்புருஷர்களால் பூஜிக்கப்பட்டவரும் உயர்த்தியும் தாழ்த்தப்பட்டதுமான காைலயுைடயவரும், ஜல் ஜல் என்று சப்திக்கும் அழகிய வைளகைளயுைடயவரும், பதஞ்ஜலி மஹர்ஷியின் கண்ணுக்கு அஞ்ஜனம்
ேபான்றவரும், மாசற்றவரும், அசையாமலிருக்கும் பாதங்கைளயுைடயவரும், பிறவிையத் தடுப்பவரும், கடப்பமரத்தில் ருசியுைடயவரும், ஆகாயத்ைத
வஸ்த்ரமாகவுைடயவரும், உயர்ந்தவரும், ேமகக் கூட்டத்ைதப் ேபான்ற கழுத்ைதயுைடயவரும் சித்ஸ்வரூபமாயும் சிறந்த ேமகம் ேபான்றவரும்
பண்டிதர்களுைடய ஹ்ருதயங்களாகிற தாமைரப் புஷ்பங்களுக்கு ஸுர்யன் ேபான்றவரும் உயர்ந்த சித்தாகிற ஆகாசத்தில் நடனமாடுவதுமாயிருப்பவைர
மனதில் ேஸவிப்பாயாக.
================================================
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே
================================================
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்த
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.
================================================
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.
Categories: Bookshelf
make an interview with nataraaja iyer
Great posting. Shri Shambu Natanam Sloka is included. Composed by Pathanjali Maharshi, the incarnation of Lord Adisesha. “komnum kaalum” illaa Sthothram, one should listen to the Discourse of Maha Periyava on this! To be chanted at all Pradosham times, thinking of Lord Nataraja Dancimg all the time. Will bring great benefit. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
wonderful treasure. thanks for posting
கைலாஸ பதியை, உமா பதியை எம் மனதில் பதியும் அப் பதியைப் போற்றும் புனித பதிகங்கள் நெஞ்சில் எப்பொழுதும் பதித்துப் போற்றிப் பாடிப் பரவசமாக்கும்.