ஸ்ரீ ஜகத்குரு பாதுகா ஸ்தோத்ரம்

Another one I missed to share…Thanks to Sri Kanchi Mahaswamy page in FB…

 

2013-11-21-08-44-58

இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்தி கைகூடும். ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடைந்து ஸ்ரேயஸை பெற வேண்டுகிறேன்.

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:

எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம ||

பொருள்:

கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்ற சந்திரனாகவும், துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும் மேகக்கூட்டமாகவும், தன்னை வணங்கியவர்களின் துன்பங்களை போக்குகின்றதாகவும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு:
கதாசிதப்யாசு தரித்ரவர்யா:
மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

பொருள்:

மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்த குருவின் பாதுகைகளை வணங்கிய உடனே செல்வந்தர்களாக ஆகிறார்களோ, எந்த பாதுகைகளை வணங்கிய ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரான சொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோ, அவ்விதம் பெருமை வாய்ந்த, நன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

பொருள்:

தாமரைக்கு நிகரானதாயும், பலவித மயக்கங்களை (மோஹங்களை) போக்கக்கூடியதாயும் தன்னை வணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை தரக்கூடியதாயும் உள்ள, ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

பொருள்:

அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்த ரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் (நதியில்) அழகுடன் விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும், தன்னை வணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக் கொடுக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம் ||

பொருள்:

பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும், மூன்றுவித தாபங்களாகிய ஆதிபௌதிக, ஆதிதெய்வீக, ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும், அக்ஞானமாகிய (மூடத்தன்மை) சமுத்ரத்தை வற்றச் செய்கின்ற வாடவாக்னியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ குரு பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

குறிப்பு:
ஆதிபுதிகம் : மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷிரிணம், பித்ருரிணம் ஆகிய ரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணத்ரயம்

மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ சேர்ந்தோ பிறவிக்குக் காரணமாகிறது

சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:

ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய ஆறு குணங்களைக் கொடுக்கும் பெருமை வாய்ந்ததாயும், அவ்வாறு குணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தை அருளக்கூடியாதாயும், ஸ்ரீமன் நாராயணனின் சரணாரவிந்தங்களில் நிலையான பக்தியைக் கொடுக்க கூடியதாயுமுள்ள ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:

தனனி (பாதுகைகளை) பூஜிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் கொடுக்கக் கூடியதாகவும், தேவதைகளின் அனுக்ரகத்தை விரைவில் அளிக்கக்கூடியதாகவும், மனதிற்கு ததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் பூஜிக்கத் தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:

ஆசை முதலிய தீய குணங்களாகிய பாம்புகளை அழிக்கும் கருடனாகவும், விவேகம் (நன்மைகளை தீமைகளை அறிதல்) வைராக்யம் (பற்றின்மை), ஆகிய செல்வங்களை கொடுக்கக் கூடியதாயும், ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும், தன்னை (பாதுகைகளை) மனதில் சதா த்யானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!

அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் பாதுகைகளுக்கு நமஸ்கரித்து வாழ்வோம்! வாழ்விப்போம்!!

ஸ்ரீ பெரியவா சரணம்!



Categories: Bookshelf

Tags:

6 replies

  1. Thanks a lot to Smt. Lakshmi Prasanna and Sri. B, Srinivasan for their valuable additions to this thread. Elevating Bhakthi content. Sri Gurubhyo Namaha! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  2. It will be imperative to listen to this youtube link of Sri Sringeri Swamiji’s lecture on the eligibility to get Guru’s Grace, reiterating EXACTLY the same ideals.

  3. The slokas meaning is wonderful and highlights the power and sanctity of Guru Padhukas.
    Is this composed by Sri Mahaperiyava also ? Certainly the composer is a great Jnaani.

  4. http://www.youtube.com/watch?v=YNDxkg1sInc
    http://sanskrit.safire.com/pdf/GURUPADU.PDF
    This is a Guru Paadhuka Stotram written by Adi Shankara, above is the link to hear it in Youtube with meaning and also for lyrics in sanskrit

    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

  5. Many devotees could not have got the opportunity to get Holy Padukas for worship from Maha Periyava or perhaps even the chance of having had His Dharshan. For everyone of us, chanting this Sthothram, remembering Maha Periyava standing on His Holy Padukas, will give His Boundless Blessings and lead us on the Right Path! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Leave a Reply to Lakshmi PrasannaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading