Fits to Fit

Thanks to Sri PE Ramesh for sharing this incident.

2013 -- Jan -- Periyava and Ariyakkudi - Friday - Subrahmanyaya namaste....

(the photo above is by Shri Keshav of Sri Aryakudi sitting in front of Him…I couldnt find any other appropriate photo than this for this article)

When we read these incidents, it appears like although it happened in the time period when there were not enough medical advancement etc. Today’s excellence in medicine and technology gives us a false hope. In fact we have more issues (health problems, bad luck etc) today than those days..Bigger diseases at younger age, more distress in the household etc.

These incidents tell us that the reason for this is deiva kutram as it is confirmed by Periyava. We have slipped from our responsibilities in doing our nithya karmas, dharma karyams and continue to take a deep dive in the materialistic world without realizing the backfiring aspect, which is what causes us to take the repercussions.

Although today we can’t talk to Periyava’s sthoola sareera, we can talk to His sookshma sareera all we want by sitting in front of Him at home and pray. In fact, there are several such incidents where Periyava had pointed the devotees that the difficulties have arisen due to negligence in doing proper prarthanais to kula deivams. These incidents are not some grandma stories to read and forget. Let us take these messages seriously and “follow” Him.

Remember – The theme for this blog in 2014 is “FOLLOW”!

ஒரு கல்யாண வீடு. நாதஸ்வரம் தடபுடலாக மேளதாளத்துடன் வாசிக்கும் சப்தம், குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு விளையாடும் சப்தம்; காரண,கார்யமே இல்லாமல் சும்மாவாவது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் உறவும் நட்பும் என்று களைகட்டிக் கொண்டிருந்தது.

இதோ பையன் காஸி யாத்ரை கிளம்பினான், பெண்ணைப் பெற்றவர் அவன் காதில் ஏதோ குசுகுசுவென்று சொன்னார், திரும்பி வந்தான்; பெண்ணும் பையனும் ஊஞ்சல் ஆனது, த்ருஷ்டி என்று நாலாபக்கமும் பொத்து பொத்தென்று கலர்சாத உருண்டைகள் வீசப்பட்டன; பையனும் பெண்ணும் கையைக் கோர்த்துக் கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.

திடீரென்று அத்தனை சந்தோஷமும் ஏக காலத்தில் நின்றது! ஒரே பரபரப்பு! ஏன் ?

உட்கார்ந்திருந்த கல்யாணப்பெண் அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்! கூடவே fits வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது! பாவம்! பெற்றவர்களுக்கு உயிரே போய்விட்டது! இரண்டு குடும்பமும் தவித்தன. யாரோ சொந்தக்கார டாக்டர் உடனே வந்து உள்ளே தூக்கிக்கொண்டு போய் முதலுதவி பண்ணினார்.

இனி என்ன செய்வது? கல்யாணம் நடக்குமா? ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

பகவானே! என்ன சோதனை? இப்போதுதான் முதல் முறையாக பெண்ணுக்கு fits வந்திருக்கிறது. அவளுக்கு எதிர்காலமே இனி இல்லாமல் போய்விடுமோ?

இரண்டு குடும்பமுமே பெரியவாளிடம் பக்தி பூண்ட குடும்பம். பத்திரிகை அடித்ததும் முதலில் பெரியவாளிடம் சமர்ப்பித்து அவருடைய அனுக்ரஹத்தோடுதான் நடக்கிறது. பின் ஏன் இப்படி?

கல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருந்தஆத்து வாத்யார்” [வைதீகர்] அம்ருத தாரை மாதிரி ஒரு யோஜனை சொல்லி, எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தார்!

இங்க பாருங்கோ! யாரும் அச்சான்யப்படவேண்டாம்! லக்னத்துக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு. நேக்கு என்ன தோண்றதுன்னா… நம்ம மாதிரி திக்கத்தவாளுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் பெரியவாதான்! பேசாம, பெரியவாகிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி, என்ன பண்ணலாம்ன்னு கேளுங்கோ!..அவர் என்ன சொல்றாரோ, அந்த உத்தரவுப்படி நடப்போம்..” என்றதும், உடனே மடத்தின் மானேஜருக்கு விஷயத்தைச் சொல்லி, அவரும் உடனேயே பெரியவாளிடம் சொன்னார்.

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த பெரியவா, “பொண்ணாத்துக்காராளுக்கு குலதெய்வம்.. ஒரு மஹமாயி! அவளுக்கு ப்ரார்த்தனை பண்ணிண்டு, ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துப் பொண்ணோட தலேல சொருகணும்…அனேகமா செரியாப் போய்டும்..”

உடனே மானேஜர் போனில் விஷயத்தை சொன்னதும், பெண்ணின் அம்மா, குலதெய்வமான மகமாயியை வேண்டிக்கொண்டு, வேப்பிலைக் கொத்தை பெண்ணின் தலையில் சொருகினாள். ஆச்சர்யமாக மயங்கிக் கிடந்த பெண்,உடனேயே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்!

பையன் குடும்பத்தார், பெரியவாளுடைய உண்மையான பக்தர்கள் என்பதால், எந்தவித ஆக்ஷேபணையோ, முகச்சுளிப்போயில்லாமல் உடனேயே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடையில் உட்கார வைத்து, குறித்த நேரத்தில் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. சேஷ ஹோமம் ஆனதும், காஞ்சிபுரம் நோக்கி இருவீட்டாரும் ஓடினார்கள்.

பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது…” நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.

மஹமாயி அனுக்ரஹத்தால…ன்னு சொல்லு!…” புன்னகைத்தார் பெரியவா.

வந்து…..பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா! …” அப்பா இழுத்தார்.

“FIT …ன்னு சொல்லு!..” சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, “க்ஷேமமா இருப்பா!” என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே !

Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!



Categories: Devotee Experiences

Tags:

8 replies

  1. Mahesh, english translation. Pls publish.

    A wedding hall. Nadaswarams and Melams were playing auspicious notes; the pleasant sound of kids running about here and there and playing could be heard. People were busy with their errands typical in a wedding.
    The Mapillai started off on the Kashi Yathrai and when the parents of the girl whispered something into his ears, he returned. The ‘Oonjal’ ceremony happened where in coloured rice balls were thrown over the shoulders of the couple. After that, the bride and the groom proceeded to the ‘Medai’ and sat down, hand in hand.
    All of a sudden, in one stroke all these happy scenes came to an abrupt end. What happened ?
    The bride who was sitting in the Medai suddenly collapsed and fainted. Simultaneously, an attack of ‘fits’ started. Her hands and legs were thrashing around and foam started appearing in her mouth. Her parents were in a panic. Both families were at a loss as to what to do next. A relative called for a doctor and she was carried away so that first aid could be rendered.
    What to do next ? Will the wedding proceed ? Everybody was just stunned.
    Oh God, what kind of a test is this ? This is the first time the girl has suffered an attack of fits. Does she even have a future now ?
    Both families were devotees of MahaPeriyava. Even before even printing the card, the Anugraham of MahaPeriyava was obtained. Then how come something like this is happening ?
    The Vadyar who was conducting the wedding came up with a suggestion which came as a huge relief to everybody.
    “Look here, nobody needs to panic. There is a lot of time yet for the Muhurtam. MahaPeriyava is the saviour for people like us. Just have somebody explain to Periyava what has happened and request for directions. We will do just as He says” No sooner said than done – the SriMatam manager was informed and he informed MahaPeriyava in turn.
    Periyava was silent for a few moments. “The Kuladeivam of the girl’s family is Mahamaayi. Let them pray to Her and fix some Veppalai leaves to her head; most probably she will become allright”
    The manager conveyed this over phone to the girl’s family. The girl’s mother prayed to Mahamaayi, who was her Kuladeivam and placed a bunch of Vepallai leaves to the bride’s head. Miraculously, the girl regained consciousness and sat up !
    Since the groom’s family were true devotees of MahaPeriyava, they did not express any objection and the wedding happened within the Muhurtam time.
    After all the rituals were completed, both familes rushed to Kanchipuram.
    “The wedding happened smoothly due to Periyava’s Anugraham”, the parents told Periyava humbly.
    Periyava replied “Say it happened due to Mahamaayi’s Anugraham”, with a smile.
    The girl’s father began “Periyava, my girl has never got an attack of fits like this….”
    “She is FIT now”, said Periyava with His benign grace. “She will be fine” and blessed her with His Holy Hand. What more is needed ?
    Fits was caused due to DeivaKuttam and she became FIT due to Periyava Anugraham

  2. மஹாபெரியவா பத்ம பாதம் சரணம்

    மஹாபெரியவா இந்த சங்கராந்தில் எங்கல்லரையும் எப்போதும் FIT ஆக்கவேண்டும்

  3. May I request for translation into English please ?

    It reminds me an Incident when Sri Kanchi Maha Swamy asked one devotee who is suffering from Epilepsy to take Pancha Gavyam after Veda Parayanam. The devotee followed Sri Kanchi ParamaCharya instructions and got rid of the disease once for all.

    Jaya Jaya Sankara Hara Hara Sankara.

  4. Only Periyava like personalities can think like this and correct the disturbance amicably with our harming both sides..He is our only Hope who can put everything right and keep every thing Fit and ward off the unfits. He is The Adi Sankara incarnated again to this world to energize afresh. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA KANCHI SANKARA KAMAKOTI SANKARA

  5. Who else except Mahaswamigal ,the Avatharapurusha as He was,could have Known that some Mahamayi was the family deity of that family in distress, (at a crucial juncture in their life)and offered a simple ,easy solution to the Fits and made it only a fit and blessed the family and help complete the marriage happily.He never fails to offer and extend an Abhaya Hastha to His Bhakthas.
    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  6. Enna solvadhu Karunayin maru avatharathai patri.

  7. Moving episode and very fitting caption!
    Incidentally, the picture of Ariyakudi sitting in front of Mahaperiyava recalls to mind the incident of Ariyakudi visiting Mahaperiyaval at Devakottai in June 1961. Mahaperiyava had sent for him , wishing to hear him sing Dikshitar’s Sri Subrahmanyaya Namaste in Kamboji, for which he was famous. Sri Ariyakudi came post haste, and was quite excited. He had to sing without accompaniment, without even a tambura. But the highlight was that Mahaperiyava explained the meaning of the kriti in His own way, breaking the Silence he was observing then.. Imagine a Visishtadvaitin singing a kriti on Subrahmanya with intense bhakti bhava, in the immediate presence of a Sankarite Acharya and an Advaita Pontiff explaining the meaning! We are not fortunate to have witnessed the heavenly scene, but the inimitable Ra. Ganapati has recorded it in his graphic style in Vol.7 of Deivattin Kural.. The picture above brings to mind the whole scene. Thank you.

Leave a Reply to ethiswaranCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading