Kunjitha Sankara Dhyanam

 

Periyava_Kunjithapatham

A Beautiful write-up from Shri Suresh Krishnamoorthy, FB..

One more photo of this same incident is here

ஸ்ரீ குருப்யோ நம:

பற்பல மாதங்களாக பல்வேறு வழிகளில் ஸ்ரீசரணரின் இந்த அற்புத படத்தின் ஹை ரிசொல்யூஷன் இமேஜ் வேண்டி தவமிருந்தேன். இது குறித்து முகனூல் நட்புகளிடமும் வேண்டியிருந்தேன்.

ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் வேண்டுவேன். அவரது கருணையில் கிட்டியது எந்தன் பாக்கியம். அதே போல் இந்தத் திருவுவப் படத்தினை ப்ரிண்ட் செய்து பக்த கோடிகளுக்கு வழங்கிடவும் அவர் உதவி பண்ணுவார்னு நம்பறேன்.

இந்தத் திருவுருவப் படத்தின் பிண்ணனியில் ஒரு ஆச்சர்யம் உள்ளது. ஆம்! அந்த நிகழ்வு நடந்தது ஸ்ரீ மஹாஸ்வாமி ப்ருந்தாவனப் ப்ரவேசம் செய்வதற்கு ஒரு வருடம் முன்பு தான்.

ஒரு நாள் ஸ்ரீசரணர் உடல் தளர்ச்சியாக இருந்த மாலைப் பொழுதில் தன் சிஷ்யர்களிடம், தாம் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானையும், அவரது பூஜையில் சார்த்தப்படும் பல வேர்களால் கோத்தெடுக்கப்பட்ட ஸ்ரீகுஞ்சிதபாதத்தையும் தரிசனம் செய்ய வேணுமாய் தெரிவித்தார். சிஷ்யர்கள் அனைவருக்கும் கலக்கம். இந்த நிலையில் ஸ்ரீபெரியவாளை எப்படி சிதம்பரம் அழைத்துச் செல்வதென வழி புரியாமல் தவித்தனர்.

என்ன ஆச்சர்யம்! மறு நாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக, சிதம்பரம் சன்னிதானத்திலிருந்து காஞ்சிமடம் வந்த சில தீட்சிதர்கள் ஸ்ரீசரணரை தரிசித்து அவருக்கு ஸ்ரீ நடராஜரின் பிரசாதம் தவேண்டி வந்தமையாக சிஷ்யர்களிடம் தெரிவித்தனர்.

திகைத்துப் போன சிஷ்யர்கள், சர்வஞரான ஸ்ரீமஹாபெரியவாளிடம் விபரம் தெரிவிக்க, அவரும் தீட்சிதர்களை அருகே வருமாறு கையசைத்து அழைத்து, அவர்கள் கொண்டுவந்திருந்த பிரசாதத் தட்டிலிருந்து ஸ்ரீகுஞ்சிதபாதத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டார். அதுமட்டுமா… அதனை தன் தலையில் வைத்துக்கொண்டார்.

சம்போ மஹாதேவா! குஞ்சிதபாத தரிசனமே கோடிபுண்ணியம் தருமே! அதுவும் சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீசரணரின் தலைமேல் குஞ்சிதபாதமென்றால்… மாலவன் தரும் அதிமருந்தை மகேசன் பூண்டதை தரிசனம் செய்த பாக்கியமல்லவா! தன்வந்த்ரி ஸ்வரூபமல்லவா!

ஆம்! அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்டதொரு படம் தான் இது! இதனை ஸ்ரீபெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கும் ஏ மஹாபாக்கியம் பெறவேண்டி நான் செய்த தவத்திற்கு ஸ்ரீசரணர் செவிசாய்த்துவிட்டார். பாக்கெட் காலண்டர் அளவில் இதனை ஒருபக்கம் பெரியவா படமும், மறுபக்கம் மேற்கண்ட நிகழ்வின் விளக்கமும் ப்ரிண்ட் செய்து வழங்கிட விழைகிறேன்.

அடியவர்கள் அனைவரும் ஒருங்கே நின்று எந்தன் ஆத்மார்த்த நமஸ்காரத்தினை ஏற்று ஆசி கூறுங்கள். இதற்கு எவ்வளவு தொகை செலவாகும்; எப்படி உசிதமாகும் என்பதை ஸ்ரீசரணர் பார்த்துப்பார்னு மனசு சொல்றது.

நான் தமிழ் படித்தவனல்ல. தமிழை எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்வளவே! எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஸ்லோகங்கள் தமிழெழுத்தில் இருந்தால் படிப்பேன். பெரியவர்களிடம் அர்த்தம் தெரிந்து கொள்ள முயல்வேன். என் மனதில் தோன்றியவைகளையே த்மிழ் வர்களில் எழுதுகிறேன். அவ்வண்ணமே இந்தத் திருவுருவிற்கும் தமிழ் பாடலொன்றை எழுதியிருக்கிறேன்.

இந்தப் பாடலை எழுதி முடிக்கும் தருவாயில் எந்தன் காதுகளில் நான் கேட்டதொரு வார்த்தைகள் தாம் “குஞ்சித சங்கர த்யானம் ஸர்வ ரோஹ நிவாரணம்” என்பது. அது எந்தன் மனம் கூறியதன் வெளிப்பாடா.. அல்லது சர்வேஸ்வரரான எந்தன் உம்மாச்சி தாத்தாவான, ஸ்ரீமஹாஸ்வாமியே சொன்னாரா… தெரியாது.

பரம்பொருள் அகிலலோக ஜீவிதத்திற்கும் பொதுவானவர்! அகிலலோக ஜீவர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டவர். எனவே இவை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை என்பதால் உங்கள் மூலமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஸ்ரீசரணரிடம் பக்திகொண்ட அடியவர்களான நீங்கள் யாவரும் எந்தன் மேலும் அன்புகொண்டு எந்தன் ப்ரார்த்தனையை ஏற்று அனைவரிடமும் இனதனைப் பகிர்ந்துகொண்டு, அனைவருக்கும் ஸ்ரீமஹாபெரியவாளின் க்ருபைதனை பெற்ற பாக்கியத்தைத் தரவேணுமாய் நமஸ்கரித்து வேண்டுகிறேன்.

குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோஹ நிவாரணம். இவ்வுல ஜீவர்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ ப்ரார்த்திகின்றேன். ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!!

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சசந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

நமஸ்காரங்களுடன்,
உடையாளூர் சாணு புத்திரன்.Categories: Devotee Experiences

Tags:

15 replies

 1. SRI GURUBYO NAMAHA

 2. ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
  சாந்த ரூபாய தீமஹி |
  தன்னோ ஸ்ரீ சசந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

 3. பெரியவா சரணம். உங்கள் யாவரது ப்ரார்த்தனைகளின் பலன் ஏற்படத் தொடங்கிவிட்டது. விரைவில் குஞ்சித சங்கரம் பக்தர்களுக்கு கிடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் இது குறித்து அவர் ஏற்படுத்திவரும் திருவிளையாடல் தனில் எனை மறந்து ஆனந்தக் கண்ணீர் மல்க அவருக்கு நமஸ்காரம் செய்து வருகிறேன்.

  ஆதி சிவனார்தம் சிகைமேவும் மதிபோலே
  ஆதி குருபரனார் அருள்தருமே பொன்னிழலும்!
  ஆதி பகவனருள் அகமேகும் அருள்வேண்டி
  ஆதி அறிவித்தோன் திருபாதம் போற்றி! போற்றி!!

  – உடையாளூர் சாணு புத்திரன்.

 4. DEAR SIR,WE ARE VERY BLESSED TO HAVE DARSHAN OF GREAT SOULS LIKE OUR OM SRI
  MAHAPERIYAVA.IF THEY DESIRE THIS PLEASANT TASK CAN BE ACHIEVED BY EVERY
  CHILD OF THEM BY CONTRIBUTING WHAT THEY COULD.THIS WILL; PLEASE GOD. LET US PRAY TO ALMIGHTY TO GRACE THIS PROJECT. OM JAYA JAYA JAYA SANKARA OM HARA HARA HARA SANKARA OM JAI SRI SAI RAM OM SRI SARVA MANGALA DATTATHREYA SWAMI THUNAI OM SRI SARVA MANGALA DIVINE GRACE THUNAI

 5. Something great jai sankara jaya sankara
  This year periyava aradhana falls this 29th dec 2013 at that time I wanted to print small pocket calender
  For that I am searching periyava photo and suitably some matter to be printed in the back accidentally the same information through you what a great periyava charanam

  • பெரியவா சரணம்.

   சீர்கொண்ட தெய்வீகத் திருமுகமும் திருக்கரத்தில்
   மெய்கொண்ட திருத் தண்டமும் மேனியில்
   உருகொண்ட சத்சிவமும் கனமாலையும் துளசியும்
   மெய்கொண்ட திருச்சாந்து சந்தனமும் தான்கொண்ட
   எம்பெருமான் ஆச்சார்யன் திருவடிகள் போற்றி! போற்றி!!

  • பெரியவா சரணம். அவருடைய க்ருபையில் 29 டிசம்பர் அம்பத்தூரில் நடைபெற இருக்கும் மஹாருத்ர யக்ஞம் முதலாக பக்தகோடிகளுக்கு குஞ்சித சங்கரத்தினை வழங்கவேண்டி முயற்சிகளை அவரது துணையுடன் மேற்படுகிறேன். பெரியவா சித்தம் வேண்டி நமஸ்கரிக்கிறேன். எனது நண்பர்கள் அனைவரிடமும் யாசித்துள்ளேன் அவர்களது ப்ரார்த்தனைகள் வேண்டி!

   ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
   சாந்த ரூபாய தீமஹி |
   தன்னோ ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

   – உடையாளூர் சாணு புத்திரன்.

 6. I have been looking for this photo ever since I read about this in a book. The best part is I saw this post just as soon as i finished reading sivapuranam on a pradosham day.. I cant as for more.. Thanks a million for posting this. Hara Hara Sankara.. Jaya Jaya sankara..

 7. Great picture. Dharshan came on Sani Pradhosham time. Thanks a lot. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Om Nama Shivaaya!

 8. It is gifted to see kunithapatha periyava! HH periyava himself will help u to print it and issue.
  hara hara sankara jeya jeya sankara

 9. Thanks you very much for this.

 10. I was blessed to be recipient of the Kunchita padam of Nataraja which was offered to Sri.Periyava in 2006.After HH placed it on his head,he offered the same to me when I was standing next to him

  • Wow!!! Can you please tell me where you are in that picture??!!!! I am thrilled…

   • Iam not in this picture.I was referring to HH Jayendra periyava in 2006 when he was offered the kunchita padam from Chidambaram..
    Mahesh,I wanted to inform you also that your mother in law is my own cousin,Mrs.Mala Vathy whom I told her when she visited me in Chennai that I had not disclosed my identity to you so far

 11. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA, PERIYAVAA THIRUVADIGALE SARANAM

Leave a Reply to radhamani Cancel reply

%d bloggers like this: